Tuesday, 17 March 2015

Kavithai - 84

பின்னணி 



ஒருவனை சிரிக்க வைப்பது 
கோமாளியின் வித்தைகள்;
அவனை சிந்திக்க வைப்பது 
எழுத்தாளனின் கருத்துக்கள்.

ஒருவனை மேதையாக்குவது 
ஆசான்களின் பாடங்கள்;
அவனை பேதையாக்குவது 
மூட நம்பிக்கையின் சட்டங்கள்.

ஒருவனை வீரனாக்குவது 
சரித்திரத்தின் போதனைகள்;
அவனை கோழையாக்குவது
அடிமைத்தனத்தின் சோதனைகள்.

ஒருவனை மனிதனாக்குவது 
ஆறாம் அறிவு;
அவனை மிருகமாக்குவது 
பணத்தின் மீதான பரிவு.

ஒருவனை ரசிக்க வைப்பது 
கலையும் அழகும்;
அவனை வெறுக்க வைப்பது 
வறுமையும் தீமையும்.

ஒருவனை காதலிக்க வைப்பது 
பெண்ணின் அழகு;
அவனை பித்தனாக்குவது 
அதே பெண்ணின் பிரிவு.

No comments:

Post a Comment