Saturday, 30 November 2013

வாழ்க்கை உன் கையிலே

வாழ்க்கை  உன் கையிலே



ஒரு நாள் ஒரு வாலிபன் ஒரு முனிவரிடம் கேட்டான், "முனிவரே, என் வாழ்க்கை இந்த புதிய ஆண்டில் எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல முடியமா?"

அந்த முனிவர் பல வகையிலும் அவனுக்கு எடுத்து சொல்லியும் அவன் முழுதும் புரியாமையால் ஒரு வழியை காட்டினார்.

அவர் ஒரு ஈயை கையில் பிடித்து "இந்த ஈ உயிரோடு இருக்கிறதா, இல்லை இறந்து விட்டதா?" என்று கேட்டார்.

வாலிபன் நினைத்தான், 'முனிவர் நம்மை சோதிக்கிறார். ஈ இறந்துவிட்டது என்று சொன்னால் அவர் அதை உயிரோடு விட்டுவிடுவார். உயிருடன் இருக்கிறது என்றால் அவர் கையை அழுத்தி ஈயை கொன்றுவிடுவார். அதனால், "அந்த ஈ உயிரோடு இருப்பதும், இறப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது" என்றான்.

முனிவர் உடனே, "உன் வாழ்க்கையும் அதே போலதான். இந்த புதிய ஆண்டிலும் உன் வாழ்க்கை நல்லா இருப்பதும், இல்லாமல் போவதும் உன் கையில் தான் இருக்கிறது" என்றார். 

அன்னதானம்

அன்னதானம் 



மகாபாரதத்திலுள்ள கர்ணன் இறந்தபின் சொர்கத்தில் சேர்க்கப்பட்டான். சொர்கத்தில் சில நாட்களுக்கு பின் அவனுக்கு பசி எடுத்தது. 'சொர்கத்தில் பசி எப்படி எடுக்கும்? நான் ஏதாவது தவறு செய்துள்ளேனோ' என்று கடவுளின் தூதனிடம் கேட்டான்.

'கர்ணா நீ பூலோகத்தில் பல தானங்கள் செய்துள்ளாய். அனால், நீ உன் வாழ்நாளில் அன்னதானம் ஒரு போதும் செய்ததில்லை. அதனால் உனக்கு இங்கு பசி எடுக்கிறது' என்றார் தூதர்.

'பசி வாட்டுகிறதே! எனக்கு இதிலிருந்து மீள ஏதாவது வழி இருக்கிறதா?' என்று கர்ணன் கேட்டான். அந்த தூதன் அவன் வரலாறை புரட்டி பார்த்துவிட்டு ஒரு வழி சொன்னார். 'உன் ஆள்காட்டி விரலை நீ வாயில் சூப்பினால் பசி நின்றுவிடும்' என்றார். கர்ணன் அப்படியே செய்தான். பசி அடங்கிவிட்டது. 'இது எப்படி என்று கர்ணன் விழக்கம் கேட்டான்.

'ஒரு நாள் நீ ஒரு இடத்திலிருந்து அரண்மனை திரும்புகிறபோது சில முனிவர்கள் உன்னிடம் அன்னம் கேட்டார்கள்.என்னிடம் இப்பொழுது அன்னம் இல்லை, நீங்கள் அதோ அங்கிருக்கும் கோவிலுக்கு போனால் இப்பொழுது அன்னதானம் செய்வார்கள். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று நீ உன் ஆள்காட்டி விரலை அவர்களுக்கு நீட்டி வழி காட்டினாய்.அன்று நீ செய்த சிறு உதவியே உனக்கு பசியை போக்குகிறது', என்றார் தூதன்.

Life

Life



Life is a game in which you are juggling with five balls.

The balls are called : Work, Family, Health, Friends & Integrity.
And you have to juggle with all of them in the air.

But, one day, you finally come to understand that work is a rubber ball - if you drop it, it will bounce back.

The other four balls - Family, Health, Friends & Integrity - are made of glass. If you drop one of them, it will be irrevocably broken to pieces.

காணிக்கை

காணிக்கை 


ஒரு நாள், ஒரு செல்வந்தர் இறைவனிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
"நீங்கள் இந்த காரியத்தை செய்து தந்தால், நான் உங்களுக்கு 100 வாழைப்பழம் காணிக்கையாக தருவேன்" என்று நேந்தார்.  அவர் வேண்டுகோள் நிறைவேறியது.

செல்வந்தர், 100 வாழைப்பழங்களை தன் வேலைக்காரனிடம் கொடுத்து, அவர் வேண்டிய கடவுளின் கோவிலுக்கு அனுப்பினார். கோவில் சில மைல் அப்பால் இருந்தது. வேலைக்காரன் பழங்களை சுமந்துக்கொண்டு சென்றான்.

வழியில் வேலைக்காரனுக்கு பசி எடுத்தது. அவனுக்கு சாப்பிட ஒன்றும் இல்லை. பசி தாங்க முடியவில்லை. உடனே, அவன் சுமந்துக்கொண்டிருந்த பழங்களிலிருந்து 5 வாழைப்பழங்களை தின்றுவிட்டான். மீதமுள்ள 95 பழங்களை அவன் கோவிலுக்கு படைத்துவிட்டு, எஜமானின் வீட்டிற்க்கு திரும்பினான்.

இரவில் அந்த செல்வந்தரின் கணவில் கடவுள் தோன்றினார். செல்வந்தரிடம் கேட்டார், "மகனே, நீ எனக்கு 100 வாழைப்பழங்களை படைப்பதாக கூறினாய். ஆனால், எனக்கு வந்து சேர்ந்ததோ 5 பழங்கள் மட்டுமே. மீதமுள்ள 95 பழங்கள் எங்கே?"

வேலைக்காரனிடம் விசாரித்தபோது, அவன் அறிந்துக்கொண்டான். ஏழை உண்ட 5 பழங்கள் கடவுளுக்குப்  போய் சேர்ந்துவிட்டது. கோவிலில் வைத்த 95 பழங்கள் கடவுளைப்போய் சேரவில்லை.

உண்மையான காணிக்கை என்ன என்பதை அந்த செல்வந்தர் புரிந்துக்கொண்டார் !

வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை என்றால் என்ன?



ஒருவன் கடவுளிடம் கேட்டான் : கடவுளே, வாழ்க்கை என்றால் என்ன?


கடவுள் சொன்னார் :


"வா" என்று வாழ்க்கை உன்னை கூப்பிட்டால்...

எதற்கு வா என்று கூப்பிட்டது?   -   "வாழ்" என்று வாழ வைக்க!!

எப்படி வாழ?        - "கை" மேல் உள்ள நம்பிக்கையில், உழைத்து வாழ !!!

அதனால் தான் அதன் பெயர்  -   "வாழ்க்கை" !!!



சரி, அப்படி வாழ்ந்தால் என்ன கிடைக்கும்?

வா + கை    - வாகை (வெற்றி) !!!!

மூன்று குருக்கள்

மூன்று குருக்கள் 



ஒரு நாள் ஒரு சிஷ்யன் தன் குருவிடம் 'குருவே, உங்கள் குருக்கள் யாவர்? அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?', என்று கேட்டான். அதற்கு அந்த குரு, 'எனக்கு வாழ்கையில் பல குருக்கள். அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள்' என்றார்.

எனக்கு முதலாவது குரு ஒரு திருடன் என்றார். அந்த சிஷ்யன் அதிர்ச்சி அடைந்தான். அந்த குரு விழக்கம் அளித்தார்.

ஒரு இரவு நான் ஒரு காட்டு வழி பயணம் சென்றுகொண்டிருந்த போது, தங்குவதற்கு எங்கும் இடம் கிடைக்கவில்லை. அங்கு ஒரு மனிதன் வந்தார். அவரிடம் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவன், "இங்கு எங்கும் இடம் கிடைக்காது. என்னுடன் வீட்டிற்கு வாருங்கள். அங்கு தங்கலாம். நான் ஒரு திருடன். வேறு யாரும் என்னுடன் வாழவில்லை", என்றான்.நானும் அவனுடன் சென்றேன்.

அவன் தினமும் 10:00 மணிக்கு திருட சென்று விடுவான். காலை 4:00 மணிக்கு வீடு வருவான். வந்தவுடன் நான் கேட்பேன் "இன்று ஏதாவது கிடைத்தா?". அவன் சொல்லுவான் :"இன்று ஒன்னும் கிடைக்கவில்லை. நாளை கிடைத்தாலும் கிடைக்கலாம். முயற்சி செய்வேன்" என்றான். மறு நாளும் அதே மாதிரி கேட்டேன், ஏதாவது கிடைத்ததா என்று. அவன் அதே பதிலை திரும்பவும் சொல்லுவான்.

அப்பொழுது நான் கற்று கொண்டேன். நான் கடவுளை காண வேண்டும் என்று இன்று முயற்சி செய்தேன். ஆனால், இன்று காணவில்லை. இதே போல் நாளையும் முயற்சி செய்வேன். கடவுள் என் கண்களுக்கு தெரியும் வரை நான் முயற்சி செய்வேன்.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் ஒரு நாள் தண்ணீர் குடிக்க நதிக்கரை ஓரம் சென்றபோது, பக்கத்தில் ஒரு நாயும் தண்ணீர் குடிக்க வந்தது. அந்த நாய் தண்ணீர் குடிக்க தண்ணீரை நெருங்கியபோது, அதற்க்கு ஒரு நாயின் முகம் தெரிந்தது. தன் பின்பத்தைக் கண்டு அது பயந்து விட்டது. பின் வாங்கியது.சிறிது நேரம் கழித்து மறுபடியும் அந்த நாய் தண்ணீர் அண்டை சென்றபோதும், அதே பின்பத்தைக்  கண்டு பயந்து பின் வாங்கியது. சிறிது நேரம் கழித்து, நாய்க்கு தண்ணீர் தாகம் பொறுக்க முடியவில்லை.தாகம் தாங்க முடியவில்லை.

அது மறுபடியும் தன்னை தைரியப்படுத்திக்கொண்டு அந்த பின்பத்தை கண்டு பயப்படாமல் திடன் கொண்டு, தண்ணீரை குடித்து விட்டது. இதே போல், நமக்கு துன்பங்கள் பலவும் நமது கண்களுக்கு தெரியலாம். ஆனால், அவை எல்லாமே மாயைகளே என்று அந்த நாள் கற்றுக்கொண்டேன்.

எனது மூன்றாவது குரு ஒரு குழந்தை. நான் ஒரு நாள் ஒரு 5 வயது குழந்தையிடம் ஒரு மெழுகுவர்த்தியைக் காட்டி, "குழந்தையே, இந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று சொல்லமுடியுமா?"  என்று கேட்டேன். அந்த சிறுமி உடனே அந்த ஒளியை அணைத்துவிட்டு என்னிடம் கேட்டது, "சுவாமி! இப்பொழுது நீங்கள் என்னிடம் சொல்லுங்கள், நான் அணைத்த அந்த ஒளி இப்பொழுது எங்கு உள்ளது என்று. எங்கு சென்றதோ அதே இடத்திலிருந்து தான் ஒளி வந்தது!" என்று.

இந்த பதிலைக்கேட்டு, நான் அதிர்ச்சி அடைந்தேன். என் கர்வம் அப்பொழுதே அழிந்துவிட்டது. அன்றிலிருந்து அந்த குழந்தையும் எனக்கு குருவாகி விட்டது.


















 

சந்தோஷம் என்றால் என்ன?


சந்தோஷம் என்றால்  என்ன?



ஒரு நாள் ஒரு குதிரை ஒரு மானை சந்தித்தது. மான் எதையோ இழந்ததைப் போலும், அதை தேடிக்கொண்டிருக்கிருப்பது போலவும் காணப்பட்டது.

குதிரை மானிடம் கேட்டது "ஏன் சோகமாக இருக்கிறாய் ?".
மான் சொன்னது "நான் சந்தோசத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்"
அதற்க்கு குதிரை "வா, நாம் இருவரும் பக்கத்து காட்டுக்குள்ளே சென்று சந்தோஷத்தை தேடலாம்" என்று மானை கட்டுக்கு அழைத்து சென்றது.

மானும் குதிரையும் காட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு சிங்கம் தன் இறையை சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

அப்பொழுது மான் சொன்னது : சாப்பிடுவது தான் சந்தோஷம்!
குதிரை சொன்னது : உடனே அந்த முடிவுக்கு வந்து விடாதே. சிறிது தூரம் சென்று பார்ப்போம

சிறிது தூரம் சென்றபோது, ஒரு குயில் பாடிக்கொண்டிருந்தது .
"பாடுவதோ சந்தோஷம்", என்று மான் குதிரையிடம் கேட்டது.
"இல்லை, இன்னும் கொஞ்சம் தூரம் சென்று பார்ப்போம்", என்றது குதிரை.

ஒரு கரடி மரத்தடியில் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
"தூங்குவதா சந்தோஷம்?", என்று கேட்டதற்கும் குதிரை சம்மதிக்கவில்லை.

சிறிது தூரம் சென்றபின், ஒரு ஆட்டுக்குட்டி அழுதுக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். "ஏன் அழுகிறாய்?" என்று ஆடுக்குட்டியிடம் கேட்டதற்கு அந்த குட்டி "நான் என் அம்மாவை தொலைத்துவிட்டேன்" என்று கதறியது. மானும் குதிரையும் அந்த குட்டியின் தாயிடம் அந்த குட்டியை சேர்த்தபோது அந்த குட்டியின் சந்தோஷத்தை கண்டு சந்தோஷம் அடைந்தார்கள்.

அப்போது புரிந்து கொண்டார்கள் : பிறரை சந்தோஷப் படுத்துவதில் தான் உண்மையான சந்தோஷம். பிறர் சந்தோஷத்தை காண்பது தான் இரட்டிப்பான சந்தோஷத்தை தரும் என்று மானும் குதிரையும் புரிந்துக் கொண்டார்கள்.

கல், கடைசிவரை

கல், கடைசிவரை 


சாக்ரேட்ஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சிறையிலிருந்தபோது, ஒருவன் இனிமையாக யாழ் வாசிப்பதைக் கேட்டார். சாக்ரேட்ஸுக்கு அந்த யாழ் இசை பிரியமகிவிட்டது.

சாக்ரேட்ஸ், சிறைக் காவலனை கூப்பிட்டு, "அந்த மனிதன் யாழ் மிக இனிமையாக வாசிக்கிறானே! எனக்கு அந்த யாழை வாசிக்க கற்றுக்  கொள்ள வேண்டும். அவனை இங்கு அழைத்து வாருங்கள்", என்றார். அதற்கு, அந்த சிறைக்காவலன், "நீங்கள் இன்னும் 10 நாட்களில் இறக்க போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதை வாசிக்க கற்று என்ன பயன் ?" என்றான்.

சாக்ரேட்ஸ் சொன்ன பதிலோ : நான் இறப்பதற்கு முன், இன்னும் ஒரு கலையை கற்று கொண்டு சாக விரும்புகிறேன் !!!

இரசித்த கதைகள்

சந்தோஷம்


சாக்ரேட்ஸ் வாழும் பட்டணத்திற்கு அருகில் ஒரு திருவிழா நடந்தது. பல விற்பனையாளர்கள் பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். சாக்ரேட்ஸ் தினமும் அந்த கடைகளில் உள்ள பொருட்களை பார்ப்பார். அனால் எதையுமே அவர் வாங்கவில்லை.

ஒருவர், இவர் ஒன்றுமே வாங்காததைக் கண்டு "ஏன்" என்று கேட்டார். சாக்ரேட்ஸ் சொன்ன பதிலோ : நான் எதையும் வாங்குவதற்காக இங்கு வருவதில்லை. இத்தனை பொருட்கள் இல்லாமலேயே நான் சந்தோஷமாக வாழ்கிறேனே என்று எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்துக்கொள்ளத்தான் நான் இந்த திருவிழாவிற்கு வருகிறேன், என்றார்.




சோகம் 

ஒரு மிகப்பெரிய மருந்து கடைக்கு கண்ணதாசன் ஒருமுறை வந்தார். அங்கு இருந்த பல மருந்துகளை கண்டு வியப்படைந்தார். 'இவ்வளவு மருந்துகளா' என்று கண்ணதாசன் ஆச்சரியப்படுவார் என்று கடைக்காரர் எண்ணினார். "உலகில் இவ்வளவு வியாதிகளா !" என்ற  சோகத்துடன் அவர் சென்றுவிட்டார் !

 

Friday, 29 November 2013

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து 

 
திருவள்ளுவர் தனது 1330 குறள்களில் 10 குறள்களில் மட்டும் கடவுளை பற்றி எழுதியுள்ளார். இறைவனை பெயர் சொல்லி அழைக்கவில்லை,மதம் சொல்லவில்லை. இறைவனின் தன்மைகளை மட்டும் வர்ணித்துள்ளார். சுருக்கத்தில் இங்கு எழுதி இருக்கிறேன் :


1. ஆதி பகவான் முதலே உலகு - உலகிற்க்கு முதன்மையானவன்.

2. வாலரிவன் - மெய் உணர்வினை உடையவன்.

3. வேண்டுதல் வென்டாமை இலான் - எந்த பொருளையோ விரும்புபவனோ வெறுப்பவனோ இல்லை.

4. இருள்சேர் இருவினையும் சேரான் - நல்வினை, தீவினை என்ற இரு வினைகளையும் சாரான்.

5. மலர்மிசை ஏகினான் - மலர் போன்ற மனங்களில் வசிப்பவன்.

6. பொரிவாயில் ஐந்தவித்தான் - மெய், வாய், கண், மூக்கு,செவி என்னும்
பொறிகள் வழியாக வரும் அவாவினையும் அறுத்தவன்.

7. தனக்குவமை இல்லாதான் - தனக்கு நிகர் யாரும் இல்லாதவன்.

8. அறவாழி அந்தணன் - அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக
கொண்ட குணசீலன்.

9. எண்குணாத்தான் - எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுள்.

10. பொருள்சேர் புகழ் புரிந்ததுன்பங்களே வராது.


இறைவனை வாழ்த்துவதோடும், வர்ணிப்பதோடும் மட்டும் இல்லாமல், இறைவனின் பாதங்களில் சரண் அடைபவர்களுக்கும், தொழுபவர்களுக்கும் கிடைக்கும் பலன்களையும் வள்ளுவர் பட்டியல் இட்டுள்ளார் :


1. நிலமிசை நீது வாழ்வார் - உலக வாழ்க்கையில் பல காலங்கள் வாழ்வார்கள்.

2. யாண்டும் இடும்பை இல - துன்பங்களே வராது.

3. இருவினையும் சேராது - நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் தாக்கமும் நம் வாழ்வில் இராது.

4. பிறவி பெருங்கடல் நீந்துவர் - துன்பம் தரும் மறுபிறவிகளை தவிர்ப்பர்.


இறைவனின் காலடி தொழாதவர்களிடம் வரும் தீமைகள் :


1. கற்றதால் பயன் இல்லை.

2. மனக்கவலை நீக்கல் அரிது.

3. பிறவாழி நீந்தல் அரிது - மறுபிறவிகளை கழைய முடியாது.

4. கோளில் பொறியின் குணம் இராது.