Saturday, 28 February 2015

Kavithai - 55

வழி




இன்பம் பெற வேண்டும்
பிறரை மகிழ வைத்து.
செல்வனாக வேண்டும்
பிறருக்கு தருமம் செய்து.
அறிஞனாக வேண்டும்
பிறருக்கு கற்பித்து.
மனிதனாக வேண்டும்,
பிறரை மனிதனாக மதித்து.

Kavithai - 54

மதுக்கடை 




கடைத்தெருவில் உள்ள 
மதுக்கடைக்கு சென்று 
மது அருந்துவது,
கவலைகளிடமிருந்து 
விடை பெற அல்ல;
கஷ்டப்பட்டு பெற்ற
பணத்தைக் கொண்டு 
இஷ்டப்பட்டு 
வாங்க மரணத்தை !!

Kavithai - 53

சாதிகள் 




சாதிகள் நிறைந்த உலகம்,
வியாதிகள் நிறைந்த உடம்பு.
மதப்போரிடும் இரு சமுதாயங்கள் 
வெளிச்சத்தை காணாத இரு கண்கள்.

மாதர்களை இழிவுப்படுத்தும் மனிதர்கள்,
கண்களை துன்புறுத்தும் முள் இமைகளே.
வரதட்சனை கேட்கும் மணமகனின் மனது,
நிலாவிடம் ஒளி கேட்கும் கரும் சூரியனே !!



Kavithai - 52

கலைஞன் 



அழகிய சிலைகளையும்,
ஓவியங்களையும் 
கண்டு இரசிக்கும் மனிதன்,
புகழ்கிறான் அவைகளை 
படைத்த கலைஞரின் 
கலை உணர்வையும்,
கை கலையையும்.
ஆனால்,
அழகிய மலைகளையும்,
எழில்மிக்க இயற்கையையும்,
கண்டு இரசிக்கும் மனிதன்,
அவைகளை உருவாக்கிய 
கலைஞரின் கலை மகிமையையும்,
கை கலையையும்,
புகழ்ந்து பாட மறப்பது ஏனோ ?

Friday, 27 February 2015

Kavithai - 50

எண்ணிக்கை



பாடினேன் ஸ்வரங்கள் ஏழு,
பெற்றேன் அறிவு ஆறு,
அறிந்தேன் கண்டங்கள் ஐந்து,
சுற்றினேன் திசைகள் நான்கு,
இரசித்தேன் கலைகள் மூன்று,
படித்தேன் காவியங்கள் இரண்டு,
காதலித்தேன் பெண் ஒருவர்,
ஆயினும், 
அவள் பிரிவால் ஆனேன் பூஜ்ஜியம் !!





பசுமை 



கற்களின் திட தன்மையும்,
பற்களின் தூய வெண்மையும்,
கொண்டது நம் காதல்.
சொற்களால் விவரிக்க முடியாத இக்காதல்,
சற்றோர்களால் நசுக்கப்பட்டாலும், என்றும் 
புற்களின் பசுமை கொண்டதாகவே இருக்கும்,
நம் காதல் வாழ்வின் நினைவுகள் !!

Kavithai - 51

குறுகிய கால இன்பம் 


கண்ணிமைக்கும் வேளையிலே
ஓடிக்கப்படும்
இப்புவியின் இன்பம்,
ஓர் வாசனை திரவியமாக்கப்பட்ட
ரோஜா மலரே !!
அம்மலரை,
வாழ்ந்தபின் வாடிப்போக,
'தோட்டக்காரன்'
அனுமதித்ததில்லை என்றுமே !!!




மலரின் வருத்தம் 


நிதமும் நீரூட்டி,
ஆசையோடு ஆதரித்து,
அன்போடு முத்தமிட்டு
காத்த உன்னை,
தெய்வமென நினைத்தேன்.

நீயோ, நான் மலர்ந்ததும்
விலைபேசும்
தோட்டக்காரனாக
மாறிவிட்டாயே !!




இதய துடிப்பு 


வைரம் போல் மின்னும் உன் அழகு
இயற்கையால் வந்ததல்ல.
அது இறைவனின் படைப்பின்
ஓர் அற்புதமாகும்.

உன் மீது நான் கொண்டுள்ள காதல்,
கற்பனையால் வந்ததல்ல.
அது என் இதய துடிப்பின்
வேண்டுதலாகும் !!!




சுதந்திர ஜீவிகள் 


இயற்கையை இரசிக்கும் குயிலுக்கு,
மெட்டு எதற்கு பாட?
ஆனந்தத்தால் துள்ளும் மயிலுக்கு,
இசை எதற்கு ஆட?
உள்ளங்களை சம்பாதிக்கும் மனிதனுக்கு,
பணம் எதற்கு வாழ?
சுதந்திர ஜீவியாக வாழும் அவனை,
பணத்தால் முடியுமா ஆள  ??

Kavithai - 49

துன்பங்கள் 




துன்பங்களை :

    வாழ்க்கையில் மறந்தவன்        -  துறவி 
    இதயத்திற்குள் மறைப்பவன்     -  மேதாவி 
    பகிர்ந்துக் கொள்பவன்               -  அப்பாவி
    உலகமென பெற்றவன்              -  ஏமாளி
    இன்பமாக மாற்றுபவன்             -  அறிவாளி
    ஒழிக்க முயல்பவன்                  -  விஞ்ஞானி
    வேண்டாமென நினைப்பவன்     -  சோம்பேறி
    பிறருக்கு மூட்டுபவன்                -  பகையாளி
    கண்டு அஞ்சாதவன்                   -  விவேகன்
    கொடுத்து சோதிப்பவன்              -  இறைவன்

Kavithai - 48

சுமைதாங்கி 




துன்பங்கள் நிறைந்த இவ்வுலகிலே,
கடினமான வாழ்வை அனுபவித்து,
விறைப்பான வாழ்க்கை நடத்தும்,
ஏழையாகிய அடியேனின் வாழ்வில்,
மனைவியாக வந்த பெண்ணே !
நீ, என் இன்பத்திலும் துன்பத்திலும்,
பாதியை பகிர்ந்துக் கொண்டால் போதும் !
கசப்பான இவ்வாழ்க்கையை நாம்,
மாற்றலாம் இனிய சொர்க்க வாழ்க்கையாக !!

Kavithai - 47

தொடரும் பண்பாடு 




தை மாதம் பிறந்தது - பொங்கல் திருவிழா வந்தது.
பொங்கல் கொண்டாட புது வழியும் பிறந்தது.

செங்கல் மூன்றை வைத்து - அடுப்பாக்கி,
விறகு அதில் தினித்து  - நெருப்பூட்டி,
வட்ட வடிவ பானையை மேல் வைத்து,
பாலெனக் கருதி தண்ணீரை ஊற்றி,
கல் கலந்த ரேஷன் அரிசியை அதில் சேர்த்து,
பொங்கல் வைத்தோம், ஏழைகளாகிய நாங்கள் !

நீரில் வெந்த அரிசி கொதி எழுந்ததும்,
ஓலம் விட்டு, இறைவனை வணங்கி,
"பொங்கலோ பொங்கல்" என்று வாழ்த்தி,
பகிர்ந்துண்டு, பண்பாட்டை தொடர வைத்தோம்  !!



Kavithai - 46

நினைவுகள் 



உன்னுடன் பழகிய நாட்கள்,
என் மனதிலிருந்து அகல மறுக்கிறது !

உனது இனிய குரலை,
என் காதுகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன !

உனது அழகிய முகம்,
என் கண்களிலிருந்து மறைய மறுக்கிறது !

நாம் சுற்றி வந்த இடங்கள்,
நம் வருகைக்காக காத்துக்கொண்டே இருக்கின்றன !

நீ கொடுத்த வாக்குறுதிகள்,
என் இதயத்தை வாட்டிக்கொண்டே இருக்கின்றன !

உனக்கு மட்டும், அன்பே !
எப்படி மனது வந்தது என்னை விட்டு பிரிய ??

Kavithai - 45

சினிமா அல்ல, நிஜம் !




ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டே இருக்க,
நமது வாழ்க்கையில்
நேரம் அதிகம் இல்லை.

நாம் இருவரும் சேர்ந்து
டூயட் பாட
நமக்கு பாடலாசிரியர்கள்
யாரும் இல்லை.

நாம் இருவரும் நடுத்தெருவில்
கைகோர்ந்து ஆட,
நமது கூச்சம்
அனுமதிப்பது இல்லை.

நமது காதலை முறியடிக்க
முயற்சிக்க.
நமக்கு மத்தியில்
வில்லன்கள் இல்லை.

இவைகள் இல்லாமலேயே நம்
வாழ்க்கை இனிமையானது;
ஏனெனில், நாம் வாழ்வது
மெய்வாழ்க்கை - சினிமா வாழ்க்கை அல்ல !!

Kavithai - 44

பூந்தோட்டம் 




வாழ்க்கை பூந்தோட்டமல்ல.
ஆனால், மனம் தளராமல் 
அதனுடன் போராடினால் 
அதை நாம் மாற்றலாம் 
அழகிய பூந்தோட்டமாக !
என்று சொன்னார்கள் முதியவர்கள்.

ஏழ்மையில் என் வாழ்க்கை 
இருந்தது பூந்தோட்டமாக.
ஆனால், பேராசை என்னும் வறட்சி 
எண்ணத்தை தாக்கியபின் 
எனது வாழ்க்கை மாறினது 
ஒரு பயனற்ற பாலைவனமாக !!!

Kavithai - 43

கண்ணாடி 



அன்பை  மட்டுமே 
பிரதிபலித்த என் 
இதயக் கண்ணாடியை 
உனது கல்நெஞ்சால் 
உடைத்து சிதறிய 
உனக்கு கிடைத்ததோ 
மன நிறைவு?

எனது இதயம் உடைதல்  
உன் மனதுக்கு 
மகிழ்ச்சி தரும் 
என்று நான் முன்பே 
அறிந்திருந்தால்
இந்த இதயக் கண்ணாடி 
தானாக நொறுங்கி 
சிதறியிருக்குமே !!!