Saturday, 21 December 2013

Kabir's Couplets - 11

Kabir's Couplets  - 11



गुरु बिन ज्ञान न उपजै, गुरु बिन मिलै न मोष । 
गुरु बिन लखै न सत्य, गुरु बिन मिटै न दोष ॥



ஆசிரியர் அல்லாமல் அறிவு இல்லை,
ஆசி அவரது இல்லாமல் இரட்சிப்பு இல்லை !
ஆசிரியர் மூலமே உண்மை அறியலாம்,
அவரால் மட்டுமே பழிகளை போக்கலாம் !!

Kabir's Couplets - 10

Kabir's Couplets - 10




गुरु गोविन्द दोउ एक हैं, दूजा सब आकार । 
आपा मेटैं हरि भजैं, तब पावैं दीदार ॥ 



குரு, கோவிந்து இருவரும் ஒன்றே,
மற்றவை எல்லாம் வடிவங்களே  !
ஆணவம் அழிந்தால் கோவிந்து காண்பார்,
அன்று பெருவீர்கள் உயர் கண்ணோட்டம் ||



Kabir's Couplets - 9

Kabir's Couplets - 9



गुरु गोविन्द दोऊ खडे, काके लागूं पांय । 
बलिहारी गुरु आपने गोविन्द दियो बताय ॥ 



குரு, கோவிந்து இருவரும் தோன்றினால்,
யார் கால்களை தொடுவீர்கள்?
கோவிந்து குருவின் அருளினால் காண்பதால்,
அவர் கால்களை முதலில் தொடுவேன் !!

Friday, 20 December 2013

கண்டதுண்டு, கேட்டதில்லை

கண்டதுண்டு, கேட்டதில்லை 



"கேட்டது உண்டு, அனால் நான் பார்த்ததில்லை" என்று சொல்வதை நாம் பலமுறை பலபேர்களிடம் கேட்டிருப்போம். ஆனால், "கண்டது உண்டு, ஆனால் கேட்டது இல்லை" என்று ஒரு புலவர் கூறினார். ஆச்சரியத்துடன், சிலர், "அது எப்படி சாத்தியமாகும்" என்று கேட்டனர். புலவர் 4 வரிகளால் அதை கூறினார் :


பூனக்கி ஆறு கால்,
பறவைக்கு ஒன்பது கால்,
யானைக்கு பதினேழு கால்,
தாமரை பூவுக்குள் இரண்டு அல்லிப்பூ!!


இதைக்கேட்டு வியந்த மக்களிடம், புலவர் விழக்கம் கூறினார்.


1. "பூனக்கி" என்னும் வார்த்தை "வண்டை" குறிக்கும். "பூ நக்கி" என்பதுதான் இதன் அர்த்தம்.

2. ஒன்பது கால் என்பது 1/4 வாய்பாட்டை குறிக்கும். 9 X 1/4 = "இரண்டே கால்".

3. அதே 1/4 வாய்ப்பாட்டின் மூலம், 17 X 1/4 = "நாலே கால்" என்று அறிந்துக்கொள்ளலாம்.

4. தாமரை போல் அழகான முகத்தில், பெண்களுக்கு கண்கள் அல்லி போல் உள்ளன.

Friday, 13 December 2013

அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல் 



அறனின் (Virtue) பயன்களை விவரித்து கூறுவதே இப்பகுதியின் நோக்கம்.


அறன் செய்ய வேண்டிய வகை :


1. நமக்கு இயன்ற வகையால், இடைவிடாமலும், எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்.

2. மனதை தூய்மையாய் வைப்பதே அறன்.

3. பொறமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்பவைகளை விலக்கி வாழவேண்டும்.

4. மறுநாளுக்கு தள்ளி போடாமல் உடனே நல்ல காரியங்களை  செய்ய வேண்டும்.

5. ஒரு நாளும் வீணாக்காமல் அறன் செய்ய வேண்டும்.

6. செய்யதக்க எல்லா நன்மைகளுமே அறன்.


அறனின் பலன்கள் :


1. சிறப்பு, மற்றும் செல்வத்தை தரும்.

2. ஆக்கம் (நன்மை) தரும்.

3. இறந்தபின்னும் நமக்கு அழிவில்லாத துணையாய் இருக்கும்.

4. பல்லக்கில்  இருந்து செல்பவர்களை போல் மகிழ்வுடன் பயணம் செய்வார்கள்.

5. மறுபிறவியை அடைக்கும் கல்லாக அமையும்.

6. அறத்தோடு வரும் இன்பம்.


அறன் கடைபிடியாவிட்டால் என்ன?


1. அறன் செய்ய மறுப்பது கேடு தரும்.

2. அறனில்லா செயல்கள் எல்லாம் வெறும் வேஷம்.

3. பல்லக்கை தூக்கி செல்பவர்களைப் போல், இன்பம் இல்லாமலும், வாழ்க்கை பெரும் சுமையாய் இருக்கும்.

4. அறத்தோடு பொருந்தாமல் வரும் புகழ் ஏதும் புகழ் இல்லை.

5. தீய செயல்கள் விட்டுவிட தக்கவை.













Wednesday, 11 December 2013

Kabir's Couplets - 8

Kabir's Couplets - 8


आशा तजि माया तजै, मोह तजै अरुमान । 
हरष शोक निन्दा तजै, कहैं कबीर संत जान ॥ 


ஆசை, நிராசை, இச்சை, மோகம்,
இன்பம், துன்பம், மானம், அவமானம் !
இவைகளை துறந்தோர் மட்டுமே 
துறவி என்றறி என்கிறார் கபீர் !!

Kabir's Couplets - 7

Kabir's Couplets - 7


जूआ चोरी मुखबिरी, ब्याज बिरानी नारि । 
जो चाहे दीदार को, इतनी वस्तु निवारि || 



புறங்கூறல், சூதாட்டம், திருட்டு,
பிறர் பெண்ணை இச்சித்தல், மற்றும் வட்டி!
புறக்கணியுங்கள் இத்தீய செயல்களை,
உயர் நோக்கம் விரும்புவோர் !!

கடவுளை கண்ட மன்னன்

கடவுளை கண்ட மன்னன் 


ஒரு நாள் ஒரு மன்னர்  தன் நாட்டிலுள்ள ஒரு சித்தரிடம் வந்து, "சுவாமி எனக்கு கடவுளைக் காண வேண்டும். அதற்கு ஒரு வழியை சொல்லுங்கள்", என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர், "நீங்கள் ஒரு வாரம் கழித்து வாருங்கள்" என்றார். அந்த மன்னர், ஒரு வாரம் பின்பு மறுபடியும் அந்த சித்தரிடம் வந்தார்.

சித்தர் அந்த மன்னரிடம் ஒரு திருவோட்டை கொடுத்து, "நீங்கள் இந்த திருவோட்டை எடுத்துக் கொண்டு ஒரு வாரம் பிச்சை எடுங்கள். பின்பு எட்டாவது நாள், நான் உங்களுக்கு கடவுளை காண்பதற்கான வழியை காட்டுகிறேன்", என்றார். மன்னர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். "என் மக்கள் முன்பே நான் பிச்சை எடுப்பதா? நான் அண்டை நாட்டிற்குப் போய் பிச்சை எடுக்கட்டுமா?", என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர் ஒத்துக்கொள்ளவில்லை.

மன்னர்  தன் நாட்டு மக்களிடம் ஒரு வாரம் பிச்சை எடுத்துக்விட்டு சித்தரிடம் வந்தார். "இனிமேல் கடவுளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்", என்றார் சித்தர். "இனிமேல் எனக்கு அந்த அவசியம் இல்லை. நான் திருவோட்டை எடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்த நொடியே எனது ஆணவம் அழிந்துவிட்டது. ஆணவம் அழிந்ததும் தெய்வீக கதவு திறந்துவிட்டது. எனது அடக்கம் எனக்கு கடவுளை காண்பித்தது", என்றார் மன்னர்.

Tuesday, 10 December 2013

Kabir's Couplets - 6

Kabir's Couplets - 6


वैध मुआ, रोगी मुआ, मुआ सकल संसार । 
एक कबीरा ना मुआ, जेहि के राम अधार  ॥ 


மருத்துவன் இறந்தான், ரோகி இறந்தான்,
உலக மக்கள் யாவரும் இறந்தனர் !
கபீர் ஒருவன் மட்டும் இறக்கவில்லை,
இராமனின் தயவால் வாழ்ந்த போது !!

Kabir's Couplets - 5

Kabir's Couplets - 5


दान दिये धन ना घटे, नदी ना घटे नीर । 
अपनी आंखों देख लो, यों क्या कहे कबीर ॥ 


தானம்  செய்தால் குறையாது செல்வம்,
தண்ணீர் எடுத்தால் குறையாது ஆறு!
உன் கண்களால் அதை நீ பாரு,
கபீர் சொல்வது சரியா என்று !!

Kabir's Couplets - 4

Kabir's Couplets - 4



संत मिले सुख उपजै, दुष्ट मिले दुख होय । 
सेवा कीजै सन्त की, जनम कृतारथ होय ॥



துறவியை சந்தித்தால் இன்பம்,
துஷ்டனை சந்தித்தால் வரும் துன்பம் !
சேவை நிதம் செய்க துறவியின்,
ஜென்மம் பெறும் வெற்றி !!

நீத்தார் பெருமை

நீத்தார் பெருமை 


நீத்தோரின் சில மகத்தான குணங்களை திருவள்ளுவர் இந்த பகுதியில் கூறியுள்ளார். அவைகளை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்:


1.  உயர்வு                   : சான்றோர் நூலில் உயர்வாக இடம் பெறுவர்.


2.  பெருமை              : நீத்தோர் பெருமையை அளவிடுதல், உலகில் இதுவரை இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்ற ஒரு வீண் செயல்.

3.  அறிஞர்                 : இம்மையின் துன்பம், மறுமையின் இன்பம் - இவை         இரண்டையும் அறிந்தபின் துறவறம் மேற்கொண்டவர்கள்.

4.  மனவுறுதி            : மனவுறுதியால் ஐம்புலன்களையும்* அடக்கி காப்பவர்கள்.

5.  எடுத்துக்காட்டு : துறவறம் என்னும் வீட்டிற்கு சிறந்த விதை           போன்றவர்கள்.

6.  பெரியோர்           :  அறிய செயல்களை செய்ய வல்லவர்கள்.

7.  வாக்கு                   : நிறைவான வாக்கு உடையவர்கள்.

8.  கோபம்                 :  நீத்தோரின் கோபம் ஒரு கணமே இருக்கும் என்றாலும், அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது.

9.  அருள்                    :  எல்லா உயிர்களிடத்திலும் அருள் கொண்டு வாழ்பவர்கள்.




*மெய், வாய், கண், மூக்கு, செவி




Sunday, 8 December 2013

Kabir's Couplets - 3

Kabir's Couplets - 3


लघुता से प्रभुता मिले, प्रभुता से प्रभु दूरि  । 
चींटी ले शक्कर चली, हाथी के सिर धूरि ॥ 



சிறுமையால் மேன்மை அடைவர்,
பெருமையால் தெய்வம் விலகும்.
சிறு எறும்பு செல்லும் சர்க்கரையுடன்,
யானை தலையில் விழும் புழுதி.

Kabir's Couplets - 2

Kabir's Couplets - 2



साधु सती औ सिंह को, ज्यों लंछन त्यों शोभ । 
सिंह न मारे मेढ़का, साधु न बांधे लोभ ॥ 



மனைவி, சிங்கம் மற்றும் துறவிக்கு,
இணையிலா மேன்மை தருவது தவப்பழி.

அச்சிங்கம் தவளையை உண்பதில்லை,
இச்சிப்பதில்லை பணத்தை துறவி.



(தவப்பழி = உபவாசம். அதாவது, உபவாசத்திற்கு பின் பசியால் வாடினாலும் சிங்கம் தவளையை உண்பது கிடையாது.)

Kabir's Couplets - 1


Kabir's Couplets



दुख मे सुमिरन सब करे,

सुख मे करे न कोय ।

जो सुख मे सुमिरन करे,
 दुख कहे को होय ॥ 1



துன்பத்தில் ஆராதனை செய்வோர்,
இன்பத்தில் செய்வது இல்லை.

இன்பத்தில் ஆராதனை செய்வோர்க்கு,
துன்பம்  வருவது எப்படி?


வான்சிறப்பு

 வான்சிறப்பு


வான்சிறப்பு என்னும் பகுதியில் திருவள்ளுவர் மழையின் சிறப்பைவிட, மழை பெய்யாவிட்டால் நிகழும் அவஸ்திகளையும் , அவலங்களை பற்றியுமே அதிகம் எழுதியுள்ளார்.


மழையால் கிடைக்கும் பலன் :

1. மழையால் உயிர்கள் நிலைபெற்று வருகிறது.

2. மழைநீரே உணவாகவும், உணவை விளைவிக்கவும்,சமைக்கவும் பயன்படும்.

3. உயிர்களுக்கு வளம் சேர்ப்பது  மழை.



மழை பெய்யாவிட்டால் என்னவாகும்  :


1. எல்லா உயிர்களும் பசியால் வாடும்.

2. உழவுத்தொழில் குறைந்துவிடும்.

3. உயிர்வாழ்க்கை கெட்டுவிடும்.

4. மண்ணில் பசும்பொன் கூட காண இயலாது.

5. கடல் நீரும் வற்றிவிடும்.

6. வானத்தில் இருக்கும் தேவர்களுக்கு பூசை நடக்காது.

7. இவ்வுலகில் தானமும், தவமும் இராது.

8. மக்களிடையே, ஒழுக்கமும் கெட்டுவிடும்.



இக்காரணங்களால், மழை அமிழ்தம் என்று அழைக்கப்படுகிறது.







Monday, 2 December 2013

My Love Is Her Attire

 My Love Is Her Attire   - Ben Jonson


My love in her attire doth show her wit,
It doth so well become her:
For every season she hath dressings fit,
For winter, spring, and summer.
No beauty she doth miss,
When all her robes are on:
But Beauty's self she is,
When all her robes are gone.

இதுதான் வாழ்க்கை

இதுதான் வாழ்க்கை 


ஒரு சிறுவன் ஒரு நதிக்கரை சென்றான் குளிப்பதக்கு. அங்கு ஒரு முதலை வலையில் சிக்கியிருப்பதைக் கண்டான். அந்த முதலை சிறுவனிடம் கெஞ்சியது தன்னை மீட்க. சிறுவன் தயங்கினான்."நான் உன்னை மீட்டால் நீ என்னை கடித்து தின்றுவிடுவாய்" என்றான். முதலை சொன்னது, "இல்லை நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நீ என்னை வலையிலிருந்து மீட்டால் போதும்".

பரிதாபப் பட்டு சிறுவன் முதலையை மீட்க நினைத்தான். முதலையின் வாயோரமாக இருந்த வலையை கிழித்தான்.வாயிலிருந்து மீட்கப்பட்டதும் முதலை சிறுவனின் காலை கௌவிக்கொண்டது.சிறுவன் கதறினான்.
"இது அநியாயம் இல்லையா? நீ கொடுத்த வாக்கை மாற்றிவிட்டாயே" என்றான்."இதுதான் வாழ்க்கை !" என்றது முதலை.

அந்த சிறுவன் பக்கதிலிருந்த ஒரு கழுதையிடம் கேட்டான்."இது அநியாயம் இல்லையா?" அந்த கழுதை பதில் சொன்னது,"நான் என் வாழ்க்கை முழுதும் என் முதலாளிக்கு வேலை செய்தேன். நிதமும் பொதி சுமந்தேன். நான் வயதாகினால் என் முதலாளி எனக்கு ஓய்வு கொடுத்து என்னை சாகும் வரை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்தேன். அனால் என் முதலாளி என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இதுதான் வாழ்க்கை !"

பின்பு அந்த சிறுவன் பக்கத்து மரத்தின் மேல் இருக்கும் குயிலிடம் கேட்டான் "இது அநியாயம் தானே?" குயில் பதில் சொன்னது, "நான் சிரமப்பட்டு கூடு கட்டி முட்டை இடுகிறேன்.ஆனால் ஒரு பாம்பு நிதமும் வந்து முட்டைகளை குடித்துவிட்டு செல்கிறது! இதுதான் வாழ்க்கை. என்ன செய்ய?"

அந்த சிறுவன் ஒரு முயலிடம் கேட்டான் இது நியாமா என்று.முயல் முதலையிடம் சொன்னது, "இது அநியாயம். அந்த சிறுவனை விட்டு விடு"
முதலை சொன்னது : நான் இந்த சிறுவனை தின்று விடுவேன். வாழ்க்கையில் சில விஷயங்கள் புரிவதில்லை. ஒவ்வொரு நொடியும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பாவம் புண்ணியம் பார்க்கக்கூடாது."

முயல் மீண்டும் சிறுவனை விட்டுவிட கெஞ்சியது.
முதலை பதில் சொன்னது "நான் விட்டுவிட்டால் சிறுவன் ஓடிவிடுவான்"
முயல், "அவன் கால்கள் காயமடைந்து விட்டது. அவனால் ஓடமுடியாது"
முதலை, "அவன் ஓடிவிட்டால்?"
முயல், "அவன் ஓட முயன்றால் நீ உன் வாலைக் கொண்டு அவனை அடித்துவிடு. அவன் இறந்து விடுவான் !"

இதைக்கேட்டதும் முதலைக்கு ஒரு நம்பிக்கை. தான்  சிறுவனை ஓட விடாமல் மடக்கி விடலாம் என்று. சிறுவனின் காலை விட்டுவிட்டது. உடனே முயல் சிறுவனிடம் "ஓடு, ஓடு" என்று கத்தியது. சிறுவன் ஓடிவிட்டான். முதலை தன் வாலால் சிறுவனை அடிக்க முயன்றது. அப்பொழுதான் முதலைக்கு புரிந்தது - சிறுவன் வாய் பகுதியிலுள்ள வலையை மட்டும் அறுத்தான். வால் இன்னும் வலையில்தான் சிக்கி இருந்தது !

சிறுவன் ஓடிப்போய் தன் ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறினான். உடனே சிலர் நதியோரம் ஓடி வந்து அந்த முதலையை கொன்று விட்டனர். அங்கு ஒருவர் வீசிய கல், அங்கிருந்த முதலையின் மேல் பட்டு, முதலை இறந்தது. இதைக் கண்ட சிறுவன் சோகமானான்.

"இதுதான் வாழ்க்கை" என்று சிறுவன் புரிந்துக்கொண்டான் !!!













 

It Is Not Growing Like A Tree

It Is Not Growing Like A Tree   -   Ben Jonson

It is not growing like a tree
In bulk, doth make man better be;
Or standing long an oak, three hundred year,
To fall a log at last, dry, bald and sere:

A lily of a day
Is fairer far in May,
Although it fall and die that night -
It was the plant and flower of Light.
In small proportions we just beauties see;
And in short measures life may perfect be.


 

குணம்

குணம் 

ஒரு முனிவர் சில சீஷ்யர்களுடன் காட்டு வழியாக சென்றுக்கொண்டிருந்தார். முனிவர் முன் சென்றுக்கொண்டிருந்தார், சீஷ்யர்கள் அவருக்கு பின் நடந்து வந்தனர்.

போகும் வழியில் அந்த முனிவரை ஒரு பாம்பு கடித்துவிட்டது. அந்த முனிவர் அந்த பாம்பை பிடித்து அதை சில தூரம் கொண்டு விட்டுவிட்டார்.மறுநாள், அதே வழியாக செல்லும்போது மீண்டும் அதே பாம்பு அந்த முனிவரை கடித்தது. மீண்டும் அவர் பாம்பை பிடித்து சில தூரம் கொண்டு போய் விட்டுவிட்டார்.

சீஷ்யர்களுக்கு ஒரே ஆச்சரியம். "ஐயா ! நேற்று அதே பாம்பு உங்களை கடித்தது. பின்பு ஏன் அதை கொல்லாமல் விட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டனர். அப்பொழுது அந்த முனிவர் : பாம்பின் குணம் கடிப்பது. நல்ல மனிதனின் குணம் மன்னித்து விடுவது. பாம்பு அதன் இயல்பை காட்டுகிறது. நான் என் குணத்தை கட்டுகிறேன் !!!