தாய்நாடு
தமிழகம் இந்தியாவின் பழம்பெரும் அங்கம்,
அதுவே நம் உள்ளம் குடியிருக்கும் சொர்க்கம்.
அழகில் அது ஒரு எழில் விருந்தாவனம்,
சரித்திரத்தில் அது ஓர் வீ ரக் காவியம்.
வீரம் படைத்த சோழன் வாழ்ந்த நாடு,
நெஞ்சில் ஈரம் கொண்ட சேரன் ஆண்ட நாடு.
சங்கம் அமைத்து தமிழை வளர்த்த,
பாண்டியன் வாழ்ந்த நாடும் நம் நாடே.
அமிழ்தினும் இனிய நம்மொழிக்கு அமுதூட்டி,
புகழைப் படித்து வாழ்ந்தாள் ஔவை மூதாட்டி.
உலக பொதுமறையாம் திருக்குறளை படைத்தே
அமரன் ஆன வள்ளுவர் வாழ்ந்ததும் நம் நாடே.
மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக்
கொழுத்திய பாரதி கண்ட நாடும் நம் நாடே.
அநீதியான தீர்ப்பு கூறிய நாட்டை,
அழித்த கண்ணகி வாழ்ந்ததும் நம் நாடே.
மயிலுக்கு போர்த்தி மகிழ்ச்சி கொண்ட பேகன்,
கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல்கள் வாழ்ந்த நாடு.
இந்திய தாயின் தலையில், தமிழகம் ஓர் மகுடமே,
போற்றி வாழ்ந்திடனும் நாம், நம் நாட்டை என்றுமே.

No comments:
Post a Comment