Tuesday, 12 May 2015

தமிழ் பழமொழிகள் - III


101. அந்தரத்தில் கோல் எறிந்து வந்தவன் போலே.
        As the blind who threw away the stick.

102. அறுபது நாளைக்கு எழுவது கந்தை.
        70 rags for 60 days.

103. அருக்காணி நாய்ச்சியார் குரங்குப் பிள்ளை பெற்றவாம்.
        It is said that the delicate lady has brought forth a young monkey.

104. ஆனை  ஏறி திட்டி வாயினுள் நுழைவாரா?
        Will one enter through the small door-way on the back of the elephant?

105. ஆறு நீந்தின எனக்கு குளம் நீந்துவது அரிதோ?
         Is it difficult for me to swim a tank, when I had swimmed a river?

106. ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
         Cold gruel is old gruel.

107. ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
        The elephant regards neither sunshine nor rain.

108. ஆல் பழுத்தால் அங்கே; அரசு பழுத்தால் இங்கே.
        When the banyan bears, there; when the fig bears, here.

109. ஆசைப்பட்ட காரியம் ஊசிப்போயிற்று .
        The thing once desired is abhorred.

110. ஆடியா வெட்டையிலும் நெல் விலையாக வில்லை.
        Even in the heat of July, paddy has no sale.

111. ஆடிய காலே பாடிய மிடறே .
        The foot accustomed to dancing, and the throat accustomed to singing.

112. ஆறிய புண்ணினும் அசறு நிற்கும்.
        There is a scab on the wound that is healed.

113. ஆசையும் அண்டாதால் அழுகையும் அண்டாது.
        Where there is no desire there is no grief.

114. ஆயிரக்கல நெல்லுக் கோரத்துப் பூச்சியாய் தோன்றினையே.
        You are born as a insect to destroy a thousand bushels of grain.

115. ஆயிரம் வயது சென்று செத்தாலும் அந்நீதச் சாவு.
        Though it does not occur before a thousand years, death is regarded as an untimely event.

116. ஆகக் குழைப்பேன் அரிசியா இறக்குவேன்.
        I will either overcook the rice or take it off unboiled.

117. ஆங்காலம் அபச்சரியா ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறது.
        To cry Shankara Shankara after playing the harlot though the life.

118. ஆணிக்கு இணங்கிய பொன்னும், மாமிக்கு இணங்கிய பெண்ணும் அருமை.
        Gold agreeing withe the assigned test and a woman agreeable to the mother in law are scarce.

119. ஆசையுள்ள அளவும் அலைச்சலும் உண்டு.
        One of excessive desires is ever perturbed.

120. ஆடிற்று கூத்து அமர்ந்த ஒரு நாழிகையில்.
        Dancing was begun and ended in an hour.

121. ஆயிரம் பனையுள்ள அப்பனுக்கு பிறந்து, பல்லுக்  குத்த வீர்க்கு இல்லை.
        He whose father possesses 1000 palmyra trees has not a fiber to pick his teeth.

122. ஆலை இல்லா ஊருக்கிருப்பைப் பூ சர்க்கரை.
        The flower of the olive tree is esteemed sugar where there is no sugar mill.

123.ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
       The quantity of fish caught will be proportionate to the number of fishermen.

124. ஆளை ஆள் அறிய வேணும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.
        To know his fellow one must partake his qualities; to know the quality of fish it must be           seasoned with tamarind juice.   

125. ஆளொரு குட்டுக் குட்ட அடியேன் தலை மிடாப்போலே.
        By being buffetted by every one, my head has become as large as a caldron.

126. ஆக்கப் பொறுக்க நேரம் உண்டாம், ஆறப் பொறுக்க நேரம் இல்லையா?
        If there be time to wait while it is cooked, is there no time to wait while it cools?

127. ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே, குத்தியன் மொணணிக்கு அழுகிறான்.
        Whilst the mother endures tormenting affliction, the adult son cries for the breast.

128. ஆனையைக் குத்தி சுளகாலே மூடுகிறது.
        To cover the elephant one has killed with the hand-winnowing fan.

129. ஆடுவதும் ஆடி, பாகற்காயும் பறித்தாயிற்று.
        The dancing is over and the bitter gourd is plucked.

130. ஆளிளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
        When the boat finds her pilot unskillful she pitches.

131. ஆடு கால்பணம்; வால் முக்கால் பணம்.

132. ஆனை கொடுத்து தோட்டிக்குப் பிணக்கா?
        When the elephant is given, shall a dispute ensue about the goad?

133. ஆய்ந்து ஓய்ந்து பாராதான் காரியம் தான் சாவக் கடவது.
        Let the thing entered up without consideration and pursued without due caution come to an end.

134. ஆராருக்கு நான் ஆகுவேன் ஆகா உடம்பையும் புண்ணையும் கொண்டு.
        Being deformed and ulcerated for whom shall I be fit?

135. ஆடு கொழுத்தால் இடையனுக்கு இலாபம்.
        If the sheep grow fat, it is advantageous to the shepherd.

136. ஆறு வடியச்சே கொல்லும், பஞ்சம் தெளியச்சே கொல்லும்.
        The river kills when its flood subsides; famine destroys when it ceases.

137. ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுகிறதோ?
        Does the hand that caressed the elephant, caresses the sheep?

138. ஆண் பிள்ளைகள் எல்லாரும் அடுப்பு ஊதித் தின்ற பஞ்சம், பெண்கள் எல்லாரும் பிறகோடி காத்த பஞ்சம்.
         A famine in which the men cook their own food & ate, while the women are waiting outside.

139. ஆர் குத்தியும் அரிசி ஆனாலே சரி.
        No matter who pounds it, if it be rice.

140. ஆண்டி மகன் ஆண்டி ஆனால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
        If he really be the son of the mendicant, he would blow the conch at the right time.

141. ஆளான ஆட்களுக்கு அவிழ்ப் படாக் காலத்திலே, காக்கா பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
        The raven demon cries for rice gravy when the opulent cannot obtain even rice.

142. ஆண்டிக் குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
        If the bottom of a mendicant be stuck, nothing but dust flies.

143. ஆனை விழுந்தால் கொம்பு; புலி விழுந்தால் அண்டை.
        When a elephant dies, his tusk is left; when a tiger dies his tail is left.

144. ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
         It will happen in its Time; it will go in its Time.

145. ஆடு கொண்டவர் ஆடித் திரிவர்; கோழி கொண்டவர் கூவித் திரிவர்.
         Those who own a goat, wanders about; those with chicken cackle around.

146. ஆட்டுக்கு தீர்ந்தது குட்டிக்கு.
         The lamb shares the fate of the ram.

147.  ஆனை மேயும் காட்டில், ஆட்டுக்குட்டி மேய இடமில்லையா?
         In the pasturage of the elephant, is there no room for a goat?

148. ஆமையுடனே முயல் முட்டையிடப் போய்க் கண் பிதுங்கிச் செத்தது.
       The hare in its attempt to lay eggs as the tortoise, strained its eyes out and died.

149. ஆனையும் ஆனையும் முதுகு அரிஞ்ச நடுவே இருந்த கொசுக்கு வந்தது சேதம்.
        The destruction that happened to the mosquito when two elephants rubbed their sides together.

150. ஆனை படுத்தாலும் குதிரையின் உயரம் வராதா?
        Even while lying down, is not the elephant as tall as the horse?
     







Saturday, 18 April 2015

காரமும் சாரமும்


காரமும் சாரமும்


காரம் 


பதவியில் உள்ளோர் செய்யும் காரம்       -    அதிகாரம்
பசிக்கு தேவையான காரம்                            -   ஆகாரம்
பாவத்துக்கு தேடும் காரம்                              -    பரிகாரம்
பெண்களுக்கு தேவையான காரம்              -    அலங்காரம்
பார்வைக்கு அழகில்லாத காரம்                   -    விகாரம்



சாரம் 


அன்றாட வாழ்வுக்கு தேவையான சாரம் -     மின்சாரம்
நாம் கேள்விபடும் சாரம்                                   -     சமாசாரம்
கணவனின் மறுபாதி சாரம்                             -     சம்சாரம்


ஊர் பெயர்கள் (1 முதல் 10 வரை)

ஒன்று முதல் பத்து வரை எண்களைக்கொண்ட ஊர் பெயர்கள்  :




1. ஒத்தக்கடை      (மதுரை)
2. இருமேனி           (இராமநாதபுரம்)
3. மூன்றடைப்பு    (நெல்லை)
4. நாலுமாவடி        (தூத்துக்குடி)
5. அஞ்சுகிராமம்    (குமரி)
6. ஆறுமுகநேரி     (நெல்லை)
7. ஏழுமலை            (மதுரை)
8. எட்டையாபுரம்   (சிதம்பரனார்)
9. நவபட்டி                 (சேலம்)
10.பெரும்பத்து         (நெல்லை)

Friday, 17 April 2015

சொல்லுதல்

"சொல்லுதல்" என்பதற்கு தமிழில் 38 சொற்கள் இருக்கின்றன.
இங்கே அவைகள் ;


1.  அசைத்தல்      -  அசையழுத்ததுடன் சொல்லுதல்.
2.  அறைதல்         -  'அடித்து' சொல்லுதல்.
3.   இசைத்தல்      -   ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.
4.   இயம்புதல்      -   இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.
5.   இறுத்தல்         -  விடை கூறல்.
6.   உரைத்தல்     -   அருஞ்செற்கு பொருள் சொல்லுதல்.
7.   என்னுதல்      -  'என்று' சொல்லுதல்.
8.    உளறுதல்      -  ஒன்றிருக்க வேறொன்றை சொல்லுதல்.
9.   ஓதுதல்            -  காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.
10.  கத்துதல்         -  உரக்கச் சொல்லுதல்.
11.  கரைதல்          -  அழைத்துச் சொல்லுதல்.
12.   கழறுதல்        -  கடிந்து சொல்லுதல்.
13.   கிளத்தல்        -  இன்னதென்று குறியிட்டுச் சொல்லுதல்.
14.   குயிலுதல்     -  குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்.
15.   குழறுதல்       -   நாத் தளர்ந்து சொல்லுதல்.
16.   சாற்றுதல்       -  பலர் அறியச் சொல்லுதல்.
17.   செப்புதல்          -  வினாவிற்கு விடை சொல்லுதல்.
18.   நவிலுதல்       -  நாவினால் ஒலித்துப் பயிலுதல்.
19.  நுதலுதல்         -  ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
20.  நுவலுதல்       -  நூலின் நுண்பொருள் சொல்லுதல்.
21.  நொடித்தல்      -  கதை சொல்லுதல்.
22.  பகர்தல்             -  பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.
23.  பறைதல்          -  மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்.
24.  பன்னுதல்        -   நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.
25.  புகலுதல்          -   விரும்பிச் சொல்லுதல்.
26.  புலம்புதல்        -   தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்.
27.  பேசுதல்             -   ஒரு மொழியில் சொல்லுதல்.
28.  பனுவுதல்          -   செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.
29.  மொழிதல்          -  இடைவிடாது சொல்லுதல்.
30.  மாறுதல்             -   உரையாட்டில் மாறிச் சொல்லுதல்.
31.  மிழற்றுதல்        -  மழலை போல் இனிமையாகச் சொல்லுதல்.
32.  மொழிதல்           -  சொற்களை தெளிவாக பெருக்கிச் சொல்லுதல்.
33.  வலத்தல்             -  கேட்பார் மனத்தைவிட்டுச் சொல்லுதல்.
34.  விடுதல்                -  மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்.
35.  விதத்தல்             -  சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.
36.  விள்ளுதல்          -  வெளிவிட்டுச் சொல்லுதல்.
37.  விளத்துதல்         -  விவரித்துச் சொல்லுதல்.
38.  விளம்புதல்          -  ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்.
39.  வினவுதல்            -  கேள்வி கேட்டல்.

Kavithai 93 (கேட்டதில் பிடித்தது)


மரம் 

புதைத்தும் உயிரோடு மரம்.



வாய்க்கரிசி

 பட்டினியால் செத்தான்.
 விழுந்தது வாய்க்கரிசி !



மூக்குத்தி

மூக்கில் முகாமிடும்
மின்மினிப் பூச்சி !!



புத்தாண்டு 


புத்தாண்டு பிறந்தது -
புது காலண்டர்
வாங்க வேண்டுமே என்ற
முதல் கவலையுடன்.


கண்கள் 

உப்பு நீரை
உற்பத்தி செய்யும்
மினி தொழிற்சாலை !



புன்னகை 

கண்களால் எழுதப்படும்
கவிதைக்கு,
இதழ்களால் கொடுக்கப்படும்
இனிய சன்மானம் !!



காதலனின் புலம்பல் 

நீ தந்து சென்றது
உன் திருமண
அழைப்பிதழ் அல்ல -
நம் காதலின்
காகிதக்  கல்லறை !!


கடமை 

மண்ணில் மாதம் மும்மாரி
பெய்யாவிட்டாலும்,
ஏழைகளின் வயிற்றில்
தினம் மூன்று வேளை
பெய்கிறது அமிலமழை !!



மக்கள் பெருக்கம் 

பிரச்சினைகளின் பிரம்மா !!



கவிதை மகால்.

மும்தாஜ்
ஷாஜஹான்
தாஜ்மகால்.
நீ
நான்
என் கவிதை !


அம்மா 

துன்பத்தை
தன் பங்கிற்கும்,
இன்பத்தை மகன்
பங்கிற்கும் என
வித்தியாசமாய்
பாகம் பிரிப்பவள் !



நிலா 


வான்குமரி
மேகச்சேலையால்
மறைக்க முயலும்
மார்பகமோ !!!






Saturday, 21 March 2015

Kavithai - 81

ஆடை



மானிட மானத்தைக் காப்பாற்றி,
அவர்களுக்கு அழகும் ஊட்டுவதே,
நேசவர் நெய்யும் ஆடையாகும்.
காதலர்கள் ஒழுக்கத்தை காப்பாற்றி,
வாழ்க்கைக்கு பொலிவூட்டும்,
காதல் திருமணமும் ஓர் அழகிய ஆடையே !!



சிநேகிதம்


ஒரு நாளைய சிநேகிதம்
இரயில் சிநேகிதம்.
வாழ்நாளைய சிநேகிதம்
உயிர் சிநேகிதம்.
பேராசையோடு வரும் சிநேகிதம்
உயில் சிநேகிதம்.
இதயத்தோடு வரும் சிநேகிதம்
மெய் சிநேகிதம்.

பயணத்தோடு முடியும் சிநேகிதம்
இரயில் சிநேகிதம்.
மரணத்தோடு முடியும் சிநேகிதம்
உயிர் சிநேகிதம்.
பணத்தோடு முடியும் சிநேகிதம்
உயில் சிநேகிதம்.
மணத்தில் "முடிவது"
மெய் காதல் சிநேகிதம் !!



விசித்திரம் 



உலகம் பேசும் மொழிகள்
பல்லாயிரம் ; ஆனால்,
காதலர்களை எதிர்த்து
வந்ததே அதன் சரித்திரம்.

காதலர்கள் பேசுவதோ
மௌன மொழி; அதைக்கொண்டே
காவியம் பல படைத்து
வாழ்ந்ததே அதன் விசித்திரம்.





புனிதம் 



இமயம் போல் உயர்ந்த
மனதிலே உள்ளது,
இதயம் என்னும்
புனித கோவில்.

அக்கோவிலை அடைந்தது
ஒரே ஒரு பெண்மணி;
அவள்தான் அதில் வாழும்,
என் ஆசை கண்மணி.



Friday, 20 March 2015

Kavithai - 88

பக்தி 



மண்ணால் மனிதனை உருவாக்கி,
அதனுள், இரக்கமே இல்லாத 
கல்நெஞ்சை வைத்தான் இறைவன்.

மண்ணால் இறைவனை வடிவமைத்து,
அவனை அமைதியே இல்லாத 
கடலினுள் கலக்கினான் மனிதன்.


 


பஞ்சம் 



இங்கு ஜனத்தொகை பெருகுவதால்
பல இலட்சங்களாய்,
குறைகிறது மனிதர்களின்
வாழ்க்கை இலட்சியங்கள்.

வாழும்போது வரும் துன்பங்கள்
பல இலட்சங்கள்.
மரித்த பிறகும் கிடைப்பது அரிது
நிலம் ஆறடி, இடுகாட்டில்  !!!!

Kavithai - 87

கூண்டு 



வானத்தில் பறந்த போது
கிளி பாடியது.
தன் மனதின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தது.

கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு
கிளி பேசியது. ஆனால்,
மனிதன் கற்றுக் கொடுத்த
சில வார்த்தைகள் மட்டும்.

இயற்கையின் அழகை இரசித்து
நான் பாடினேன்.
என் இதயத்தின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தேன்.

காதல் வலையில் சிக்கியபின்னும்
நான் பாடுகிறேன். ஆனால்,
இதயம் கற்றுத் தந்த
நம் காதலை மட்டுமே  !!!

Kavithai - 86

முத்து



ஆழ்கடலினுள் முத்துக்குழிப்பவன்,
முத்து எடுப்பானோ பயந்தால் அவன்,
கடல் பிராணிகளுக்கும் மரணத்திற்கும்?

பெண்ணின் ஆழ்மனதில் இருக்கும்
காதல் முத்தை எடுப்பானோ காதலன் பயந்தால் 
உலகின் எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும்? 




கடைக்கண் பார்வை 



பல காட்சிகளை காட்டும் 
கண்களைக் காண,
தேவைப்படுகிறது ஒரு 
பிரதிபலிக்கும் கண்ணாடி.

இதயத்தினுள் இருக்கும் காதலை 
காண தேவைப்படுகிறது 
வசீகரிக்கும் அவளது 
கடைக்கண் பார்வை !!!


Kavithai - 85

மலர் 



பூ மலர்வதைப் பார்த்து 
பொழுது விடிந்ததோ? இல்லை,
பொழுது விடிவதைப் பார்த்து 
பூ மலர்ந்ததோ? 

பூ அழைப்பதைப் பார்த்து 
வண்டு வந்ததோ? இல்லை,
வண்டு வருவதைப் பார்த்து 
பூ உபசரித்ததோ?

பூ மகிழ்வதைப் பார்த்து 
வண்டு பாடியதோ? இல்லை,
வண்டு பாடுவதைக் கேட்டு 
பூ மகிழ்ந்ததோ?

பூவை முகர்ந்து கூந்தல் 
மணம் பெற்றதோ ? இல்லை,
கூந்தலின் மணமால் 
பூ மணம் பெற்றதோ ?

பூவின் அழகைக் இரசித்து 
மங்கை நாணினாலோ? இல்லை,
மங்கையின் அழகில்  மயங்கி 
பூ வாடியதோ?

Thursday, 19 March 2015

Kavithai - 82

காதல் சிட்டுக்கள்



இருவரும் உயிருக்குயிராய் 
நேசிப்பவர்கள்.
தங்கள் இதயத்தை 
பரிமாரிக்கொண்டவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

இயற்கையை இரசித்து 
வாழ்பவர்கள்.
கிளிகளைப்போல் பேசுபவர்கள்.
குயிலைப்போல் பாடுபவர்கள்.
குருவிகளைப்போல் சிறகடித்து 
பறப்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

அமைதியின் சின்னமான புறாவைப் 
போன்றவர்கள்.
புறாவைப்போல் கொஞ்சுவார்கள்.
மயில்போல் சந்தோஷமாக 
ஆடுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

நாய்களைப்போல் நன்றி 
உள்ளவர்கள். ஆனால்,
ஓநாயின் தந்திரம் அறியாதவர்கள்.
சிங்கம் போன்றவர்கள், ஆனால்,
தீங்கு பிறருக்கு
விளைவிக்காதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

அவர்களின் வாழ்வில் சூரியனின் 
ஒளி வீசுகிறது.
இவ்வுலகில் வெள்ளியைப்போல்
மின்னுபவர்கள்.
நிலாவைப்போல் ஒளி வீசுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

கற்பனை செய்வதில் கவிஞர்கள்.
சிந்தனையில்  சிறகடித்து பறப்பவர்கள்.
நிலாவைக் கொண்டு இருவரும் 
விளையாடுபவர்கள்.
கற்பனைக் கடலில் நடந்து 
செல்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

சகுனியின் சூழ்ச்சி அறியாதவர்கள்.
திருஷ்ராஷ்டிரனின் பேராசை 
இல்லாதவர்கள்.
தருமனைப் போல் வாழ்வில் 
சூதாட்டம் ஆடாதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

காலங்களில் வசந்தம்.
மாதங்களில் மார்கழி.
பழங்களில் முக்கனி.
நதிகளில் கங்கை.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

தங்களை வெட்ட வரும் 
வேட்டுவனுக்கும் நிழல்தரும் 
மரம் போன்றவர்கள்.
தங்களை கசக்கும் விரல்களுக்கும் 
மணம் தரும் பூவைப் 
போன்றவர்கள்.
உலகம் அவர்களை வெறுத்தாலும் 
உலகை வேறுக்காதவர்கள் .
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

மனித ஒழுக்கத்தின் 
முழு உருவங்கள்.
இயற்கைக்கு அழகு ஊட்டும் 
அணிகலன்கள்.
மனித உருவ பவளங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

அவர்களின் காதல் பாலினும் 
வெண்மையானது.
காதலை தெய்வமாக மதிப்பவர்கள்.
இவ்வுலகின் இன்றியமையா 
பொக்கிஷங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

Tuesday, 17 March 2015

Kavithai - 84

பின்னணி 



ஒருவனை சிரிக்க வைப்பது 
கோமாளியின் வித்தைகள்;
அவனை சிந்திக்க வைப்பது 
எழுத்தாளனின் கருத்துக்கள்.

ஒருவனை மேதையாக்குவது 
ஆசான்களின் பாடங்கள்;
அவனை பேதையாக்குவது 
மூட நம்பிக்கையின் சட்டங்கள்.

ஒருவனை வீரனாக்குவது 
சரித்திரத்தின் போதனைகள்;
அவனை கோழையாக்குவது
அடிமைத்தனத்தின் சோதனைகள்.

ஒருவனை மனிதனாக்குவது 
ஆறாம் அறிவு;
அவனை மிருகமாக்குவது 
பணத்தின் மீதான பரிவு.

ஒருவனை ரசிக்க வைப்பது 
கலையும் அழகும்;
அவனை வெறுக்க வைப்பது 
வறுமையும் தீமையும்.

ஒருவனை காதலிக்க வைப்பது 
பெண்ணின் அழகு;
அவனை பித்தனாக்குவது 
அதே பெண்ணின் பிரிவு.

Sunday, 15 March 2015

Kavithai - 79

அமரக் காதல் 



ஆசை என்னும் எண்ணத்தாலே,
இதயம் என்னும் புத்தகத்திலே,
காதல் என்னும் எழுதுகோலாலே,
காவியம் எழுதுகிறோம் நாம்.
நாமோ, இணைந்தால் வாழ்வோம்;
பிரிந்தால் மறிப்போம்.
ஆனால், நம் காதல் காவியமோ,
என்றேண்டும் நிலைத்திருக்கும் 
காதல் கொண்ட இளம் இதயங்களிலே!



எங்கள் காதல் 


எங்கள் காதலை எதிர்த்தே 
சோர்ந்து விடும் உலகம்; ஆனால்,
ஒரு நாளும் அயராது.
எங்கள் இளமை மாறா காதல்.

போராடியே உலகுடன் நிதமும்,
மரித்தாலும் ஒரு தினம்,
மறையாது ஒரு நாளும்,
அமுதுண்ட எங்கள் அமரக் காதல் !

Kavithai - 78

காதல் நாடகம் 


நான் ஒரு நாள் சென்றிருந்தேன் 
பேட்டி எடுக்க,
நடிப்பில் பல வெற்றிகளும்,
காதலில் பல தோல்விகளும்,
கண்ட நடிகர் சூப்பர் ஸ்டாரை.
அவரிடம் நான் கேட்டேன்,
"ஏன் காதலில் பல தோல்விகள்?"
அவர் கொடுத்த பதிலோ,
"இன்று சமுதாயம்  கண்டுள்ளது
பல முன்னேற்றங்களை.
நாகரீகம் செய்துள்ளது 
பல மாற்றங்களை.
நாடகத்தில் செய்யும் தவறை,
மாற்ற முடிவதில்லை மேடையில்.
இன்று சினிமாவில் நடிப்பதில்லோ,
மாற்றலாம் எண்ணற்றமுறை 
தவறிய காட்சிகளை.
காதலியை மாற்றுவதும்,
சினிமா நடிப்பின் தாக்கமே" !!!!

Friday, 13 March 2015

Kavithai - 83

மனிதன் 




அமைதியின் உருவமாக 
வந்த மனிதன்,
அமைதியே இல்லாத உலகை 
விட்டு செல்கிறான்.
பாவமே அறியாமல் 
வந்த மனிதன்,
பாவங்கள் பல 
செய்தபின் செல்கிறான்.
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி 
கொண்டு வந்த மனிதன்,
குடும்பத்தை துன்பத்தில் 
ஆழ்த்திவிட்டு செல்கிறான்.
சுதந்திர ஜீவியாக 
வந்த மனிதன்,
கோடி அமரர்களிடம் 
சரணடைய செல்கிறான்.
உலகத்தின் அணிகலனாக 
வந்த மனிதன்,
ஆறடி நிலத்தை அழுக்காக்கி 
விட்டு செல்கிறான்.

Wednesday, 11 March 2015

Kavithai - 80

பெண்



கவலையை போக்க 
கொடுத்தான் மனஉறுதியை.
நினைத்ததை முடிக்க 
கொடுத்தான் திறமையை.
சிந்தனையை தூய்மையாக்க 
கொடுத்தான் தியானத்தை.
இவை அனைத்தையும் இழக்க 
படைத்தான் பெண்ணை !!!

Saturday, 7 March 2015

Kavithai - 77

இருள் 



நிலாவே !
நீ சூரியனிடமிருந்து
ஒளியைப் பெற்று
எங்களுக்கு தந்தாலும்
பயன் என்ன?
எங்கள் வாழ்க்கை
இன்னும் மூழ்கியுள்ளது,
இருளில் தானே !!



காண்கிறேன் 



அவள் பாசத்தில் நான்
என் அன்பைக் காண்கிறேன்;
வளையல்களின் சத்தத்தில்
என் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
அவள் பெருமையிலே
என் நேர்மையைக் காண்கிறேன்.
அவள் தாலியிலே
என் கடமையைக் காண்கிறேன்.
அவள் சிரிப்பிலே
என் வெற்றியைக் காண்கிறேன்.
அவளது பொறுமையிலே
என் வாழ்க்கையைக் காண்கிறேன்.



செயல்கள் 


பூமியை தங்கமாக்க
பிடித்தேன் கலப்பை.
இதயத்தை இலேசாக்க
செய்தேன் தியானம்.
சிந்தனையை தூய்மையாக்க
செய்தேன் பிரார்தனை.
வாழ்க்கையை முழுமையாக்க
கைபிடித்தேன் உன்னை  !!!


Kavithai - 76

தாய்நாடு 



தமிழகம் இந்தியாவின் பழம்பெரும் அங்கம்,
அதுவே நம் உள்ளம் குடியிருக்கும் சொர்க்கம்.
அழகில் அது ஒரு எழில் விருந்தாவனம்,
சரித்திரத்தில் அது ஓர் வீ ரக் காவியம்.

வீரம் படைத்த சோழன் வாழ்ந்த நாடு,
நெஞ்சில் ஈரம் கொண்ட சேரன் ஆண்ட நாடு.
சங்கம் அமைத்து தமிழை வளர்த்த,
பாண்டியன் வாழ்ந்த நாடும் நம் நாடே.

அமிழ்தினும் இனிய நம்மொழிக்கு அமுதூட்டி,
புகழைப் படித்து வாழ்ந்தாள் ஔவை மூதாட்டி.
உலக பொதுமறையாம் திருக்குறளை படைத்தே 
அமரன் ஆன வள்ளுவர் வாழ்ந்ததும் நம் நாடே.

மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் 
கொழுத்திய பாரதி கண்ட நாடும் நம் நாடே.
அநீதியான தீர்ப்பு கூறிய நாட்டை,
அழித்த கண்ணகி வாழ்ந்ததும் நம் நாடே.

மயிலுக்கு போர்த்தி மகிழ்ச்சி கொண்ட பேகன், 
கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல்கள் வாழ்ந்த நாடு.
இந்திய தாயின் தலையில், தமிழகம் ஓர் மகுடமே,
போற்றி வாழ்ந்திடனும் நாம், நம் நாட்டை என்றுமே.

Kavithai - 75

இயற்கை 



காலை ஆனவுடன் கூவ,
சேவலுக்கு கற்றுகொடுத்தது யார்?
மாலை ஆனவுடன் ஒளிவீச 
நிலாவுக்கு கற்று கொடுத்தது யார்?
அன்றீனிய பசுவை 'அம்மா' என்றழைக்க 
கன்றுக்கு கற்று கொடுத்தது யார்?
உன்னை கண்டவுடன் காதல் கொள்ள,
என் இதயத்திற்கு கற்று தந்தது யார்?




புராணம் 


'அரசின் சேனையைவிட
உன் அழகு ஆபத்தானது'
என்றான் மாவீரன் சீசர்
கிளியோபாட்ராவைப் பார்த்து.
முற்றும் துறந்த
விசுவாமித்ரரே மயங்கினார்,
மேனகாவின் விசிகரிக்கும்
ஆட்டத்தைப் பார்த்து.
உலகில் மனித அவதாரம்
எடுத்த இராமனரே
மயங்கினார் சீதையின்
இனிய குரலைக் கேட்டு.
மாபெரும் காவியம் ஒன்றை
படைத்திருப்பானே  காளிதாசன்
கயல் போல் அழகிய
உன் கண்களைப் பார்த்து !!


Friday, 6 March 2015

Kavithai - 74

சோலை



காலை முதல் மாலை வரை 
களைப்பின்றி 
காளை போல் ஓடோடி 
உழைக்கும் எனக்கு,
இடையிடையே 
மனதில் வரும் 
உன் நினைவுகள்,
பாலைவனத்தில் சோலையை 
காண்பது போல் உள்ளது !!




அழியாச் சுவடுகள் 


காலம் எமனின் வாகனம்,
மனிதர்கள் அதில் பயணிகள்.
காலம் அழித்துவிடுகிறது 
நாம் கடந்த காலத்தையும்,
நாம் பட்ட கஷ்டங்களையும்.
ஆனால், அழிக்க முடிவதில்லை 
நம் கடந்த காலத்து நினைவுகளையும் 
நாம் விட்டு வந்த வழித்தடங்களையும் !!




மண் 


மண்ணாலே உருவான மனிதன்,
மண்ணுலகிலே வருகிறான் வாழ.
விண்ணழவு பணம் படைத்தாலும்,
மாண்டபின் செல்வதோ மண்ணுக்குள்ளே!!




பூஞ்சோலை 


உன் கூந்தலில் வைத்த 
பூக்கள் ஆனது பூமாலை.
உன் கழுத்தில் கட்டிய 
மாலை ஆனது மணமாலை.
உன் அழகை வர்ணித்த 
வரிகள் ஆனது பாமாலை.
இம்மாலைகள் கொண்ட நீ 
ஒரு அழகிய பூஞ்சோலை !!




சமம் 


காதலே செய்யாத வாலிபன் இதயம் 
நீரே இல்லாத கிணற்றிற்கு சமம்.
ஒரு பெண்ணை காதலிப்பவனின் இதயம் 
நீர் நிறைந்து ஓடும் நதிக்கு சமம்.
பல பெண்களை காதலிப்பவன் இதயம் 
வெள்ளம் உடைத்த குளத்திற்கு சமம்.




Kavithai - 73

கணக்கில்லை!




நாங்கள் மனம் விட்டு 
பேசிய வார்த்தைகள் எத்தனை!
நாங்கள் இயற்றி மெட்டு,
பாடிய பாடல்கள் எத்தனை!
நாங்கள் வானம் தொட்டு,
பறந்த நாட்கள் எத்தனை!
நாங்கள் வாழ ஒன்றுப்பட்டு
கண்ட கனவுகள் எத்தனை!
எங்கள் நட்பில் விழ வெட்டு,
முயன்ற நபர்கள் எத்தனை!
நாங்கள் சூழ்ச்சிக்கு கட்டுப்பட 
பின்னிய வலைகள் எத்தனை!
எங்களை பிரிக்க வேலி இட்டு,
முயன்ற உறவினர்கள் எத்தனை!
எங்களை பிரிவால் வாட்டும் 
துன்பங்கள் தான் எத்தனை!!!


Kavithai - 72

பொறுமை 




மேகம் கண்டு, மழையைக் கண்டு 
நிதமும் ஆட ஆனந்தத்தால்
மயிலுக்கு கொடுத்து வைக்கவில்லை.
உன்னைக்கண்டு, உன் குரலைக் கேட்டு,
நிதமும் வாழ மகிழ்ச்சியோடு,
எனக்கு கொடுத்து வைக்கவில்லை !

முகில் கருக்கும், மழை பொழியும்
என்று பொறுமையுடன் மயில் 
அமைதிக் கொள்கிறதே - அது எப்படி?
காலம் கனியும், நாமும் சந்திப்போம் 
என்று நினைத்தே நாட்களை போக்க,
முடிவதில்லையே ஏன் ? சொல் என் அன்பே !!




மனக்கண் பார்வை 


நான் வாழும் உலகம் 
நிறைந்துள்ளது மனிதர்களால்.
என் பாரத நாடு 
நிறைந்துள்ளது சகோதரர்களால்.
நான் பிறந்த ஊர் 
நிறைந்துள்ளது அன்பர்களால்.
நான் வசிக்கும் வீடு 
நிறைந்துள்ளது உறவினர்களால்.
என்றும் என் இதயம் 
நிறைந்துள்ளது நண்பர்களால் !!!

Kavithai - 71

வறுமை 




தன் பெற்றோரையும், தன் சுகத்தையும்,
வாழ்ந்த தன் அரண்மனையையும் மறந்து,
ஊர்வாய் உளறலை துச்சமாக நினைத்து,
தன் இதயத்தை எனக்கு பரிசாக கொடுக்க,
முன்வந்த இனிய அரண்மனைப் புறாவே!
நீ என்னை மறந்து விடு.!
செழிப்பில் தவழ்ந்த அரண்மனைப் புறாவுக்கு,
எனது புறாக்கூண்டில் இடம் குறை படும்.
உனது தூய வெள்ளை இதயத்தை அணைக்க,
எனது கந்தல் ஆடைகள் தடையாக உள்ளது.
வாவென்று விரும்பி அழைத்தாலும் மனதுக்குள்,
வாய் எனது கூச்சப்படுகிறது உன்னை அழைக்க.
பசுமையை உன் வாழ்விலிருந்து பிரித்து,
சுமையை கொடுக்க மறுக்கிறது என் இதயம்.
காதலுக்கு தூது விட்ட என் இனிய புறாவே !
நீ என்னை மறந்து விடு !

Kavithai - 70

காதல் காதல் 



காப்பாற்றுவோம் கடமைகளை சீரோடு, என்ற 
ன்னம்பிக்கையுடன் உள் மனதோடு,
ல்-லறத்தில் இணையும் தம்பதிகளே, அழியா 
காதல் கொண்ட இனிய அன்பர்கள்.




அகராதி 


ழகான உன்னை கண்டதும்,
சை பிறந்தது இதயத்தில்.
ன்பம் பெற்றேன் அளவற்று 
டு இல்லை இவ்வுலகில்.
ன்னுடன் நிதமும் பேச,
மை இதயமும் துடிக்கிறது.
ன்னிதயம் உனக்காக துடிப்பது,
ன் என்று புரியவில்லை எனக்கு;
யப்படுகிறேன் இது காதலென்று.
ன்று நிச்சையிக்கிறேன் இன்று,
யாது ஒருநாளும் நம் நட்பு.
வை போல் பாடுவேன் நிதமும்,
தை உலகு மறவாது எக்காலமும்.




காதல் திருமணம் 


ண்மணி உன்னுடன் உண்மையோடு 
காதல் கொள்கிறேன் இதையதால்.
கிளிகளைப் போல் கொஞ்சுவோம்,
கீதங்கள் பல பாடுவோம் இணைந்து.
குருவிகள்  இரண்டு சேர்ந்து,
கூடுகட்டி வாழ்வது போல் நாம்,
கெட்ட உலகை விட்டு விலகி,
கேடரியாத புதிய உலகை உருவாக்கி,
கைகோர்ந்து வாழ இன்று முதல்,
கொண்டு வந்துள்ளேன் கல்யாண மாலை.
கோவிலில் மணந்து, இன்று நாம்,
கௌரவிப்போம் நமது காதலை !!

Kavithai - 66

ஏற்றம் இறக்கம் 



வாழ்வில் ஏற்றம் உண்டானால் 
உண்டு அதில் இறக்கமும்.
இறக்கத்தால் கூடுகிறதே 
அவ்வாழ்வின் பொலிவு.

பறக்கும் பறவை இறங்காவிட்டால் 
ஏது அதற்க்கு இரை?
இறைவன் கொடுத்த நல்வாழ்வில்,
இறக்கம் இல்லை ஒரு குறை.




வெற்றி 



வாழ்க்கையில் வருகிறது
சோதனை மேல் சோதனை
என்று மனமுடைந்து 
அடையாதீர்கள் வேதனை.

சோதனைகள் தருகின்றன 
வாழக்கையில் போதனைகள்,
என்று அறிந்துக்கொண்டால் 
படைக்கலாம் பல சாதனைகள் !




அனுபவம் 


துன்பம் அனுபவித்ததை மறந்தால்தான் 
சீராய் செயல்புரியலாம் நிகழ்காலத்தில்.
இன்பம் அனுபவிக்காததை நினைத்தால்தான் 
உழைத்து உயரலாம் வாழும் காலத்தில்.








Kavithai - 69

இறுதி வரை



என் கண்கள் உன்னையே காணும் 
என் கண்கள் மூடிவிடும் வரை.
என் இதயத்தில் நீயே இருப்பாய்,
என் இதயத்துடிப்பு நின்றுவிடும் வரை.




தூது 



பார்வை என்னும் அம்பு அனுப்பி,
இதயம் என்னும் தளத்தை கைப்பற்றினாள்.
சம்மதம் என்று தூது அனுப்பி,
காதல் என்னும் சமரசம் செய்துக்கொண்டோம்.




கடல் 


உலகம் என்னும் கடலினிலே,
நீந்திவரும் காதல் மீன்கள் நாம். அதில்,
காதல் என்னும் நீர் வற்றினால்,
காதலர்களாகிய நாம் சாவோம் துடித்து.



பிரசவம் 



ஐயிரண்டு மாதங்கள் வயிற்றில் 
சுமந்த குழந்தையை 
ஆசையோடு உலகுக்கு 
அறிமுகம் செய்துவிட்டு,
குடும்பம் புகழ்பெற கண்ட 
கனவுகள் நிறைவேற 
ஆவல்மிகுந்த எதிர்பார்ப்புகள் 
ஆரம்பமாகும் நேரம் !!



உவமை 



தெய்வம் இல்லாத ஆலயம்,
ஆன்மா இல்லாத உடலே.
காதல் இல்லாத இதயம்,
மெட்டு இல்லாத பாடலே.




காதலித்ததும்....



சிரித்தாலும் மகிழாத
மனது மகிழ்ந்தது.
சிந்தித்தாலும் செயல்படாத
வாழ்க்கை செயல்பட்டது.
கனவிலும் காணாத 
கற்பனை தவழ்ந்தது.
சீறினாலும் பகைக்காத 
உலகம் பகைத்தது.




துரோகம் 


சூரிய ஒளி பெற்று 
மலர்ந்த மலரைப்போல்,
அவள் வரவைக்கண்டு 
மலர்ந்த  என் இதயம்,
இரண்டாக பிழந்ததே 
அதிர்ச்சி கண்ட பூமிபோல்,
அவளது துரோகம் கண்டு !!!





Kavithai - 68

பெற்றவை 



கல்வியும் செல்வமும் பெற்றேன் 
அறிவைக் கொண்டு.
பகையையும் தீமையையும் வென்றேன் 
அஞ்சா நெஞ்சம் கொண்டு.

பாசத்தையும் நட்பையும் பெற்றேன் 
என் அன்பை கொடுத்து.
கற்பனையும் கவிதையும் 
பெற்றேன் அவளிடம் இதயம் கொடுத்து !




ஈருடல் ஓருயிர் 



நான்கு கண்கள் வேண்டும் 
என்றேன் இறைவனிடம்.
இரண்டில் நீ மட்டுமே 
காட்சி அளிப்பதால் !

இரண்டு இதயம் வேண்டும் 
என்றேன் இறைவனிடம்.
ஒன்றை உன்னிடம் 
கொடுத்து விட்டதால் !

வானத்தில் எதற்கு நிலா 
என்றேன் இறைவனிடம்.
நிலாவே உன் வடிவில் 
பூமியில் வந்துள்ளதால் !

இருவருக்கும் போதும் 
ஓருயிர் என்றேன் இறைவனிடம்.
நாமிருவரும் ஒன்றாய் 
இணைந்து வாழ்வதால் !




Kavithai - 67

ஏன் ?


அவளது கண்களால் 
நான் மயங்கினேன்.
அவள் என்னை 
பார்க்காதது ஏனோ?

அவளைப் பார்த்து 
நான் புன்னகைத்தேன்.
அவள் என்னை 
கோமாளி என்றது ஏனோ?

அவளுக்கு நான் ரோஜா மலர் 
ஒன்றைக் கொடுத்தேன்.
அதை அவள் 
வாங்காதது ஏனோ?

அவளுக்கு கடிதம் 
ஒன்று எழுதினேன்.
அவள் கடிடத்திற்கு 
பதில் எழுதாதது ஏனோ?

அவளிடம் காதல் சொல்ல 
நான் பாடினேன்.
அவள் என்னை 
தேவதாஸ் என்றது ஏனோ?

அவளின் நினைவால் 
என் மனநிலை சற்று இழந்தேன்.
அவள் என்னை 
பித்தன் என்றது ஏனோ?

அவளின் ஏவலினால் நான் 
சிறைவாசி ஆனேன் 
அவள் என்னை இவ்வளவு 
வெறுப்பது ஏனோ?

அவளிடம் நான் என் 
செல்வத்தைக் காட்டினேன்.
"என்னுயிர்த் தோழா",
என்றழைத்தது ஏனோ? ஏனோ?

Tuesday, 3 March 2015

கவிதை - 65

இளைஞர்  பணி 




அறுபத்தேழு ஆண்டுகள் ஆகிற்று
விடுதலை பெற்று நம் நாடு.
ஆனால், இன்னும் மாறவில்லை
ஏழைகள் படும் பாடு.
இங்கு அரசியலே
ஊழல் குடியிருக்கும் வீடு,
இந்நிலையை நம் இளைஞர்
மாற்ற வேண்டும் அடியோடு.




நரகவாசிகள் 



இந்திய வீதி ஒன்றில் 
நடந்து சென்றேன் ஒரு நாள்.
கண்டவை கண்களால் :
இருபுறமும் குடிசைகள்,
பசியால் வாடும் 
பல சிறு குழந்தைகளும்,
இரு கரங்களையும் 
ஏந்தியபடி இரவலர்களும்.

இறைவனிடம் கேட்டேன்,
"ஏன் இந்த குறைபாடு?"
பதிலளித்தார் அவர்,
"இதுவே மீறிய ஜனத்தொகை 
படுத்தும் பாடு!"

நடந்தேன் தொடர்ந்து 
உடைந்த மனதோடு.
கண்டேன் பெரும் செல்வர் 
வாழும் அரண்மனைகள்.
கேட்டேன் இறைவனிடம்,
"ஏன் இந்த வேறுபாடு?"
சொன்னார் அவர்,
"இதுவே இந்நாட்டில் 
 ஊழல் செய்யும் பாகுபாடு!"

ஓவென்று அழுதேன் வேதனையால்.
"எழுபது ஆண்டுகளுக்கு முன் 
இவர்கள் இங்கு அடிமைகள்.
இன்று இவர்கள் 
சுதந்திர நாட்டின் நரகவாசிகள் !!





Kavithai - 64

ஞானி 



மனிதனின் மனம் 
உடையும்போது இரண்டாக,
குறைவதில்லை 
அவனரிவு பாதியாக.
புரிந்துக்கொள்கிறான் 
அவன் உலகை இரட்டிப்பாக,
அதன்பின் வாழ்கிறான்,
அவன் ஞானியாக !!




நிறைவேறா ஆசைகள் 



கரையைக் காண 
ஓடிவந்ததாம் கடல் அலை.
வானத்தை தொட 
ஆசைப்பட்டதாம் ஒரு மலை.
உயிருடன் உலவ 
துடித்ததாம் சிற்பியின் சிலை.
செல்வரின் மகளை 
காதலிக்க முயன்றான் ஒரு ஏழை.

கரை சேர்ந்ததும் 
மாண்டுப் போனது கடல் அலை.
மலை வளர வளர 
விலகிக்கொண்டது விண் எல்லை.
உலகமே மாறினாலும் 
நடக்குமோ கற்சிலை?
வலையில் மீன் போல் துடித்தபோது,
அறிந்தான் ஏழை தன் பிழை !!



கானல் நீர் 


எட்டிவிடும் தூரத்தில் 
வசந்தம் இருப்பதாக நினைத்து,
உன் மனதை 
தொட்டுவிட முயன்றேன்.
என்னை விட்டு நீ 
விலகியதும் புரிந்தது -
நான் நினைத்தது 
வசந்தமில்லை - வெறும் கானல் நீர் !!

Kavithai - 63

ஒழுக்கம் 



மனித உடலில் 
உயிரை வைத்தபின்,
இறைவன் ஆறாம் அறிவை
வைத்தார் அவ்வுடம்பில்.

மிருகங்களில் அவ்வறிவை 

வைக்க மறந்த இறைவன்,
நல்லொழுக்கம் என்னும் 
வரத்தைக் கொடுத்தார் !!





ஏன்? 


இறைவன், ஏழைகளிடம் 
செல்வம் கொடுக்காதது ஏன்?
பேராசையின் வலையில் 
சிக்கிவிடக்கூடாது என்பதற்கோ?

செல்வரிடம் ஈகைத்தன்மை  

கொடுக்காதது ஏன்?
தருமத்தை நம்பியே ஏழை
வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்கோ?




சாபம் 



ஆதியிலே மனிதனை 
உருவாக்கிய இறைவன்,
அவன் காலடியில் 
வைத்தான் முழு உலகை.

பாதியிலே இறைவனை 
மறந்த மனிதன்,
வியாதியோடு கழிக்கிறான்
தன் முழு வாழ்வை !!



அழகு 



இரை தேடி பறவை 
பறப்பது எழில்மிக்க காட்சி.
கடல் நோக்கி நதி செல்வது
எழில்மிக்க காட்சி -
அழகு இயற்கைக்கு சாட்சி.

பசிபோக்க உழவர் 
உழைப்பதும் எழில்மிக்க காட்சி.
உழைப்பால் உயர்வது 
இயற்கையின் அழகு  -
அதற்க்கு இவர்கள் சாட்சியே !!





Kavithai - 62

கவலை வேண்டாம்



உன்னை மணந்து,
இணைபிரியாமல் வாழ்ந்து
வாழ்க்கையை கழிக்கலாம்
என்று நான் எண்ணியவை
நிறைவேறாவிட்டாலும்,
எனக்கு வருத்தம் சிறிதும் இல்லை.

இன்று முதல்
ஆரம்பமாகிறது புது வாழ்வு.
இணைபிரியா துணைவியான
கவலையை மணந்து,
சோகக் கவிதைகளை,
பெறப்   போகிறேன் !!

Kavithai - 61

மழை 



"மழையே ! மழையே ! வா வா"
என்று வருந்தி அழைத்தால்
நில்லாமல் வந்துவிடுமோ மழை?
"மழையே வந்துவிடு ! 
எங்கள் உயிரை காப்பாற்றிவிடு!"
என்று கெஞ்சி கதறினாலும் 
மழை பொழிந்து விடுமோ?
இயற்கையை மதித்து,
மரங்களை வாழ விட்டு,
அவைகளை பொறுப்போடு 
வளர்த்து வந்தால்,
பொழியாதோ மழை தானாக??