Sunday, 26 October 2014

Kavithai - 23

கடல் கடந்த காதல் 



ஆசையுடன் நான் இங்கே,
அழகுடன் நீ அங்கே.
காதலால் நாம் சேரும்,
நாள் தான் எங்கே ?

வசதியைத் தேடி
இங்கு வந்தவன்,
இன்று நிற்கிறேன்
வாழ்க்கையை தொலைத்து.

சன்னல் திரை மூடாமல்
கணங்களை இமைக்காமல்,
வழி மீது விழி வைத்து,
காத்திருக்கும் பெண்ணே !!

வாழ்க்கையை கண்ணீரில்
கரைக்கும் உன்னை,
காண நான் வருவேன்,
கடல்நீரைக் கடர்ந்து.

காலம் நம்மை ஒன்று சேர்க்கும்,
நம் சோகங்களை துடைத்து.
இல்லிறத்தில் நாம் இணைவோம்,
இறுதிவரை ஒன்று சேர்ந்து !!!!

Kavithai - 28

நட்பும் உறவும் 



வீதியோரம் ஆலமரம் ஒன்று நட்டு,
கற்றோட்டதில் அதை நான் வைத்து,
கழிவுநீர் வாய்க்கால் அதற்கு வெட்டி,
பின்நாளில் அம்மரத்தை நான் மறந்தேன்.

வீட்டு முற்றத்தில் முருங்கை மரம் வைத்து,
அதை நான் வேலிட்டு காத்து,
தினந்தோறும் நீர் அதற்க்கு பாய்ச்சி,
குழைந்தையைப் போல் அதை நான் வளர்த்தேன்.

நாட்கள் கடந்தபின், முதுமை வந்தபின்,
ஒரு நாள் வீசிய வலிய காற்றில்,
நான் வளர்த்த முருங்கைமரம் சாய்ந்தது.
என் வீட்டு கூரையும் உடைந்தது.

நான் நட்ட ஆலமரமோ படர்ந்து
வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் தந்து,
ஊர்மக்கள் என்னை வாழ்த்த வைத்தது.
இறுதி நாட்களில் நானோ ஆலமர நிழலில் !!!

Kavithai - 32

அன்றும், இன்றும்



அன்று :

கடல்.
கடற்கரை.
நானும் அவளும்.
மாலை முழுதும் பேசிக்கொண்டிருந்தோம்.
கடல் அலைகளின் ஓசை கேட்கவேயில்லை.


இன்று :

கடல் அலைகளின் இனிய ஓசை கேட்கிறது.
மாலை முழுதும் அவளது நினைவுகள்.
நானும் கடலும்.
கடற்கரை.
நான்.


Friday, 24 October 2014

Kavithai - 31 (படித்ததில் பிடித்தது)

1) பிரவசம் 


எதிர்பார்ப்புகள் 
பிறக்கும் வேளை !!


2) மச்சம் 


அவளது பௌர்ணமி முகத்தில்
ஒரு மினி அம்மாவசை !!!


3) தொடர்கதை 


மகள் வாழ்க்கைப்பட்டாள்..
தந்தை கடன்பட்டார் !!!



4) மகாபாரதம் 


பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சண்டை...
ஜெயித்ததோ திரௌபதி  !!!


5)  கலவரம் 

ஜாதி கலவரத்தின் பின் மக்கள் பிரிந்தனர் ..
அவர்கள் சிந்திய இரத்தமோ கலந்தது !!!


6) கவலை 


உடலை அழிக்கும் புழு  !!



7) கண்கள் 


சதை கொத்திப் பறவைகள் !!



8) எதிர்ப்பு 


உன்னை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
என்னை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது .
நம்மை தான் யாருக்கும் பிடிக்கவில்லை !!!


9)  காதல் திருமணம் 

மலைபோல் எழுந்த எதிர்ப்புகள்
பனிபோல் மறையும் நேரம் !!



10)  திருமணம் 


பொறுப்புகளை அழைக்க
நடத்தப்படும் சடங்கு !!!


11) அழைப்பிதள் 


அன்பே !!

நீ எனக்கு தந்துச் சென்றது
உன் திருமண அழைப்பிதள் அல்ல !

நம் காதலின் காகிதக்  கல்லறை !!





Kavithai - 30

நிலா 



அம்மாவாசை நாளின் 
மாலை வேளையில்,
காதலன் ஒருவன் 
நிலாவின் அழகை வர்ணித்து
கவிதை ஒன்று எழுதினான் -

வட்ட நிலாவின் 

மொத்த அழகையும் 
தன்னுள் அடக்கியிருக்கும் 
தன் காதலியின் 
முகத்தைப் பார்த்து !!!

Sunday, 19 October 2014

Kavithai - 20

வேண்டுதல் 



காற்றோடு வரும் நறுமணமே !
என் காதலியின் வருகையை அறிவிப்பாயோ!

நதியோடு நீந்திவரும் மீனே !
என் காதலியின் இடையை கிள்ளுவாயோ !

வானமதில் ஒளிரும் வெண்ணிலாவே !
என் காதலியின் முகத்தை பிரிதலிப்பாயோ !

காலையில் பாடும் கருங்குயிலே !
என்னவளை வருணித்து பாடுவாயோ !

வண்ணப்பூக்கள் கொண்ட செடிகளே !
என்னவள் மேல் பூமழை பொழிவாயோ !

காலையில் தோன்றும் சிகப்பு சூரியனே !
காதலியின் நெற்றியில் பொட்டு வைப்பாயோ !

இமயத்தில் உருகும் பனிக்கட்டிகளே !
என் காதலியின் மனதை உருக வைப்பாயோ !

மண்ணோடு ஒன்றாய் சேரும் மழையே !
எங்களையும் ஒன்றாய் சேர்த்து வைப்பாயோ !!

Kavithai - 19

காதல் 



காற்றில் பறக்கும் பறவை
மெல்ல அடிக்கும் சிறகை.
அவளோடு கூட நானும்
அதை பார்த்து ரசிப்பது காதல்.

காட்டில் வாழும் கவரிமான்
பெண்மானை கவரும் காட்சியை
அவள் கண்டு நானுதலை
நான் கண்டு களிப்பது  காதல்.

பெண்மான் மீது வேடன் அம்பு எய்வதை
கண்ட ஆண் மான்,
அதை காப்பாற்ற, தன் உயிரை வெறுத்து
ஓடி வருவது காதல்.

பிளிர் இதயத்தை வெல்ல
இரண்டு யானைகள் போட்டியிட்டு,
சண்டையிடும் காட்சியை
அவள் கண்டு அஞ்சுவது காதல்.

கடலோரம் நாங்கள் இருக்க
அலைகள் எங்கள் கால்களை தொட்டு
மீண்டும் கடலில் செல்வதை
மெய்சிலிர்ந்துக் கொள்வது காதல்.

எனக்கும் அவளுக்கும் பாலமாய்
அமைவது காதல்.
எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும்
படிகளாய் அமைவதும் காதலே.

இனிமை என்ற வார்த்தையை
கேட்டு ரசிப்பது காதல்.
தனிமை என்ற நிலையை,
விலக்கி வைப்பதும் காதலே !!!!!


Kavithai - 18

மனைவி 



வாலிபத்தில் கவர்ந்தாள் என்னை
தன் வாலிபத்தால் அவள்.
என் சிந்தனைக்கு சிறகு கட்டினாள்
தன் மதியால் அவள்.

திருமணம் என்ற வேலியால்
இலக்குமண கோடு கிழித்தாள்.
வயிற்றில் என் குழந்தைகளை சுமந்து
பொறுப்புகளை என் மேல் சுமத்தினாள்.

நாள் முழுதும் நான் உழைக்க
நலமாய் குடும்பத்தை பேணி
என் உருவச்சிலையை பதித்தாள்
குழந்தைகள் மனதில் அவள்.

காலம் கடந்தபின் வந்த முதுமைக்கு
தூணாய் அமைந்தாள் அவள்.
மரணம் வரை உடன் இருந்து
துணையாய் இருப்பாள் அவள் !!!

Kavithai - 17

Expectation


Two minds were united this day
In a Union called marriage.
How my heart leaps, sweet lady,
When I remember that day !

I lost my mind in adoration
The moment I saw you in a dhavani.
Now I risk losing my life
When I think of our separation.

The wonderful muses of my youth,
The great expectations I had of you, and
The feelings we shared gayly,
Hurts me now every moment daily.

Sweetheart ! Let's not embrace,
Let us not lock our lips & kiss,
And drink of the juicy ambrosia,
Let's not ask for a million bliss.

Love you may not, but never hate me.
That's all I ask of you today,
In this world, that is enough for me,
That's all I ask of you everyday !!!!

Kavithai - 16

மது பழக்கம் 


சோகங்கள் என்னைச்சூழ, நான்
மது அருந்த ஆரம்பித்தேன்.
எனது கஷ்டங்கள் நீங்க நான்
இறைவனிடம் ஒரு அருள் வேண்டினேன்.

இறையருள் கிடைத்தது.
எனது கஷ்டங்கள் மறைந்தது.
ஆனால், நான் ஆரம்பித்த
மது பழக்கம் மட்டும் மாறவில்லை.

இப்பொழுது, நான் குடித்துக்கொண்டே
எனது குடிபழக்கத்தை நீக்க,
மண்டியிட்டேன் மறுபடியும்,
இறைவனிடம் மறு அருள் கோரி !!!

Kavithai - 15

ஒரு தலை காதல் 


தேன் கொண்ட மலர் 
வண்டு வந்து அமர்ந்ததும் 
வெட்கத்தால் மூடியதாம் 
தன் இதழ்களை.

காந்தம் கொண்ட அவள் விழிகள் 
என்னைக் கண்டதும் 
வெட்கத்தால் மூடின 
அவள் கண்கள்.

கடலிருந்து எழுந்த அலைகள் 
மணற்வீட்டை உடைத்துவிட்டு 
மாயமாய் மறைத்தது 
மீண்டும் கடலில்.

அவள் மீது கொண்ட காதலால் 
நான் கட்டிய மனக்கோட்டை 
உடைத்துவிட்டு சென்று 
மறைந்தாள் என் விழிகளிருந்து.

மீன் கொத்திப் பறவைபோல் 
என் இதயத்தை கொத்திச் சென்றாள்.
அவள் சிரிக்கும் சிரிப்பிலே 
சிந்தையை நான் இழக்கிறேன்.

அழகாய் வடிவமைத்த அவளுள்,
அச்சத்தை வைத்த இறைவன்,
அவள் அழகில் மயங்கும் என்னில் 
'மச்சத்தை' வைக்க மறந்தானே !!

Kavithai - 14

கள்வனின் காதல் 


காலத்தால் அழியாத காதலால்
அழிந்ததே என் வாழ்க்கை.
கண்கள் இல்லை காதலுக்கு
கண்டது எல்லாம் கனவே !
என் மதியும் உதவவில்லை,
தீயதும் நல்லதென பட்டதே!

பேரழகன் போல் தெரிந்தான்
என் கண்களை பறித்தவன்.
இனிய காதலன் அவன் எனக்கு,
இதயம் அவனிடம் இழந்தபோது.
உண்மைக் காதலன்  என்றெண்ணினேன்
எனதெண்ணங்களை அவன் ஏற்றபோது.
கள்வன் என அறிந்துக் கொண்டேன்
கற்பை நான் இழந்த பின்னர் !!

Kavithai - 8

உலகின் அதிசயங்கள் 


உண்மையே பேசும் மனிதர்கள்.
உப்பிட்டவர்களை மறக்காதவர்கள்.
உணவில்லாதோர்க்கு உதவுபவர்கள்.
ஊதியம் உரியவை கொடுப்பவர்கள்.
உடழகுக்கு மயங்காத ஆண்கள்.
உயிரையும் கொடுக்கும் நண்பர்கள்.
ஊரையே வீடெனக் கொண்ட இந்தியர்கள் !!

Kavithai - 10

ஆகஸ்டு 15, 1947



மாநிற மன்கையருக்காக
மாநிலத்தையும்
மாற்றிக்கொண்ட
மாமன்னர்கள் ஆட்சி போய்,
மாநிலத்தையும் பெற
மாநிற மங்கையரையும்
முன்னிறுத்தி
மாநாடு போடும்
முன்னிலை அரசியல்வாதிகள்
முயன்று ஆட்சி பெற்ற நாள் !!!!

Kavithai - 9

மது 



ஒரு மாலை நேரம்
மது அருந்தியபின்
மயங்கிய நிலையில்
என் காதலியைப் பற்றி
நாலு வரிக் கவிதை
எழுதி வைத்தேன் நான்.

மறுநாள் காலை
உணர்வு வந்தபின்
உணர்ந்துக் கொண்டேன் :
காதலியைப் பற்றி
நான் எழுதியவை
கவிதையே அல்ல,
உண்மையான வருணனை !!!

Saturday, 18 October 2014

Kavithai - 22

வண்ணங்கள் 



கருங்கல்லிலும் கடவுளைக் காணும்
இம் மனிதர்கள்,
நம் இதயங்களில் எரியும்
அணையா காதல் தீபத்தை
காண்பதில்லையே !
சமயத்தால்,ஜாதியால்,
மொழியால், மற்றும் வண்ணத்தால்,
நம்மை பிரித்து பார்க்கும்,
இம் மனிதர்கள்,
மூன்று வண்ணங்களையும்
ஒன்றாய் இணைக்கும்
கொடி கொண்ட இந்திய
நாட்டினர் நாம் இருவரும்
என்பதைக் காண்பதில்லையே !!!

Kavithai - 26

கயவர்கள் 


கயவர்களின் காமப்
பிடியிலிருந்து இளம் பெண்ணை,
காப்பாற்றிய இளைஞன்,
தானே அப்பெண்ணை
கற்பழித்தார் போல்,

அன்னியர்களின் ஊழல்
ஆட்சியிலிருந்து நாட்டை மீட்ட
நம் அரசியல்வாதிகள்
தாமே இந்நாட்டில்
ஊழல் செய்கிறார்களே !!!

Kavithai - 21


காப்பது யார்?


பயிரைக் காக்க வேலி,
கொடியைக் காக்க மரம்,
மரத்தை காக்க மழை,
சேயைக் காக்க தாய்,

பண்பாட்டைக் காக்க முதியோர்,
முதியோரைக் காக்க இளைஞர்,
நதியைக் காக்க கரை,
கரையை காக்க செடிகள்.

இலக்கியம் காக்க கல்வி,
கல்வியைக் காக்க ஆசிரியர்,
பணம் காக்க வங்கி,
திரை காக்க ஒரு தணிக்கை.

உடலைக் காக்க ஆரோகியம்,
மனதை காக்க அமைதி,
ஆன்மாவைக் காக்க பக்தி,
பக்தியைக் காக்க நம்முள் சக்தி,

இப்படி  ஒவ்வொன்றையும் காக்க
கற்றுக் கொடுத்தது இந்த உலகம்.
ஆனால், ஊழல் அழிக்கும்
நம் நாட்டை காப்பது யார் ?

Kavithai - 13

"பிரதேசிகள்"


வாழ்வில் உயர,
வறுமைகள் நீங்க,
வான்வழியே, கடல் தாண்டி,
இங்கு நாம் வந்தோம்.

ஊரை மறந்து,
உறவினரை விட்டு,
பிரியமானோரை பிரிந்து,
பிறர் நாட்டுக்கு வந்தோம்.

சில்லறைக் கடன் அடைக்க,
பெற்றோர் சேவைக் கடனை
புறக்கணித்து விட்டு
நாம் இங்கு வந்தோம்.

மனைவியை பிரிந்து,
பிள்ளைகளை பின்நாளில்
பார்க்கலாம் எனக்கூறி,
பாரத்துடன் இங்கு வந்தோம்.

வசதிகள் உயர்ந்தன,
வறுமைகள் விலகின.
ஆனால், வாழ்க்கையை மட்டும்,
எங்கோ நாம்  தொலைத்தோம் !!!

Kavithai - 27

நீதி 



நீதி வந்து நிற்கிறது
நீதிமன்ற வாயினிலே.
உள்ளே வரவிடாமல் தடுக்கிறது
பணம் என்ற வேலி அதனை.

சிலையாய் நிற்கிறான் மனுநீதி சோழன்
நீதிமன்ற வளாகத்திலே.
கற்சிலையாகிப் போனதே
நீதியும் இந்திய திருநாட்டிலே !

கசப்பாகிப் போனதே ஏழையர்க்கு
நீதியும் எட்டாத திராட்சையாக.
கூர் வைத்து விற்கின்றனர் சிலர்
நீதியையும் கூச்சம் இல்லாமலே !

சிறு குற்றங்களுக்கு நீதியோர் விலை,
மறு விலையிங்கு பெரும் குற்றங்களுக்கு.
மொத்தமாக நீதிக்கோர் விலை,
ஏய்த்து, கற்பழித்துக் கொன்றவனுக்கும் !

சத்தம் இல்லாமல் போகிறது
நித்தம் நடக்கும் குற்றங்களிங்கு,
வெட்ட வெளிச்சத்தில் உறங்குகிறது
சட்டம் ஒழுங்கு என்பதிங்கு.

'கழுதை தேய்ந்து கட்டெரும்பு'
என்று நீதியை சொன்னால் ஏது மறுப்பு?
வேலியே பயிரை மேய்ந்தால்
விடுதலைக்குக்தான் இங்கு என்ன பொருள் ??

Friday, 17 October 2014

Kavithai - 12

ஆயிரம் காலத்து பயிர் 


பலமான உடலமைப்பும்,
அழகான மனதும்,
கொண்ட  ஒரு ஆண்,

அழகான உடலையும்,
பலமான மனதும்,
கொண்ட ஒரு பெண்ணை

மணம் கொள்ளுதல் !!!!

Kavithai - 7

சுனாமி 


சுனாமி அலைகளால் 
சூன்யமாகிப் போனது பலர் வாழ்க்கை.
நீரின் தாக்கத்தால்,
விளக்கணைந்து போனது பலர் வீடுகள் !

வான்நீருக்காக வானம் நோக்கிய வேளை,
கடல்நீர் கொண்டு சென்றது பல உயிர்களை.
பாலையாய் காய்ந்த வயல்களிலே
பிணங்கள் விதைத்து சென்றது சுனாமி !!

உயரமாய் வந்த அலைகள்,
உடைத்து சென்றது பல நெஞ்சங்களை.
அதிர்ச்சியில் ஆழ்த்தி சென்றது 
அதிர்ச்சியால் வந்த சுனாமி !!!

கூரையில்லா வீடுகள் ஆகின 
குழந்தையில்லா குடும்பங்கள்.
குற்றமில்லாக் குழந்தைகள் ஆகினர் 
பெற்றவர்கள் இல்லா அனாதைகள் !!!!

மனைவிகள் இழந்த கணவர்கள்,
மடியில்லாமல் தவித்த பிஞ்சுகள்.
பொருளை இழந்து, ஆதரவு இழந்து,
இருளில் தவித்தனர் பல மனிதர்கள் !!!!!

இறைவா !
கருனையில்லையேனும், நெற்றிக்கண் திறவாதே.
'நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோர்க்கும்'
என்ற விதியை மாற்றி, நீ, பொல்லாதவர்கள்  மீது 
கொண்ட கோபத்தை எல்லோர் மீது காட்டாதே !!!!!!


Thursday, 16 October 2014

Kavithai - 6

நினைவுகள் 



அன்பே !!
இந்த கோடை காலத்திலும்
எனது பகல்கள்
சிறியதாகவும்,
எனது இரவுகள்
நீண்டவையாகவும் உள்ளன....
உன் நினைவுகளாலே !!!!

Kavithai - 5

வாழ்க்கை 


உள்ளி என்பது என்னவென்று
நான் அறிந்துக்கொள்ள
உரிக்கத் தொடங்கினேன்
அதன் தோலை.

உரிக்க உரிக்க தோல்கள்தான்,
உள்ளே ஒன்றும் இல்லை !!
பின்புதான் நான் அறிந்தேன்,
நான் வீசிய தோல்கள்தான்
உள்ளி என்று !!!

Kavithai - 4

துபாய் 


டல் சார்ந்த இந்த நகரத்தில்,
கார்மேகம் கண்டதில்லை.

கிளிகள் பேசுவதை கேட்டதில்லை,
கீதம் பாட இங்கில்லை குயில்.

குளிர் காற்று இங்கு வீசுவதில்லை,
கூட்டமாய் மாடுகள் மேய்வதில்லை.

கெண்டைமீன் கொண்ட குளமில்லை,
கேட்கவில்லை இங்கு நதியின் சத்தம்.

கைதிபோல் மனிதர்களிங்கு குளிர் அறையில்!

கொடுமை பல தாங்கி வேலை செய்கின்றனர்,
கோடைகால வெயிலின் தாகத்தால்!

கௌரவமில்லை, இயற்கையின் இனிமையில்லை,
தல்லவா இவ் துபாயின் வாழ்க்கை !!!


Kavithai - 3

அவனும் அவளும் 


காதல்.
பாடல்.
ஆடல்.
ஊடல்.
உறவு.


கர்ப்பம்.
கசப்பு.
பாரம்.
துயரம்.
பிரிவு.


அவனுக்கு விடுதலை !!
அவளுக்கு ...............!!!!


Kavithai - 1

பகல் கனவு



காலை வேளை  ஒரு ஒரு மார்கழி நாளில்
குளிர் தென்றல் சுகமாய் வீச,
தென்னங் கீற்றுகள் லேசாய் அசைய,
கண்ணெதிரே நின்றாள் அவள்.

மயக்கும் கண்கள் அவளது,
மாநிறம் அவளது மேனி.
சிரிப்பில் சிறையடைக்கும் கவர்ச்சி,
செதுக்கிய சிலையாய் நின்றாள் அவள்.

அவள் அழகில் மயங்கி நின்றேன்,
என்னையே நான் மறந்து நின்றேன்.
எண்ணங்களை நான் தொலைத்து நின்றேன்,
உணர்வற்று கற்சிலையாய் நின்றேன் !

அழுத்தமான ஒலி காதில் கேட்க,
அசத்தலாய் கண் விளிகள் திறக்க,
மனம் தெளிந்த உடன் நான் அறிந்தேன்,
நான் நின்றது பேரூந்து நிலையம் !!

மக்கள் கூட்டமாய் அலை மோத,
அவசரமாய் நானும் பேரூந்தில் ஏறி.
வியர்ந்து நான் பயணத்தை தொடர,
மறைந்தாள் அவளும் பகல்கனவு போல !!!!


Kavithai - 2

ஆயிரம் 


ஆயிரத்தில் ஒருத்தியாம் 
என் காதலியைக் கைபிடிக்க 
ஓராயிரம் கனவுகள் 
நான் கண்டேன் !

ஆயிரம் வரிகளில் கவிதை 
ஒன்று எழுதி அவள் 
பாதங்களில் கவிதாஞ்சலி 
நான் வைத்தேன் !

ஆயிரம் பூக்களின் மாலையிட்டு 
ஓராயிரம் உறவினர்கள் முன்னிலையில்,
ஆயிரம் காலத்துப் பயிரான,
திருமண பந்தத்தில் நாங்கள் 
சேர காத்திருந்தேன் !

அவளோ !! ஆயிரம் பேரைக் 
கொண்ட அழகிய கிராமத்தை விட்டு,
ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கும் 
ஆயிரமாயிரம் பேர் கொண்ட 
மாநகரத்தில் ஒருவனை மணம் கொண்டாள் !!!

நானோ !! இப்பொழுது,
வெட்ட வெளியில் படுக்கையில் 
ஆயிரம் நட்சத்திரங்களை
எண்ணிய பின்னும்,
தவிக்கிறேன் தூக்கம் வராமல்,
அவள் நினைவுகளாலே !!!!

Saturday, 8 February 2014

தனி தமிழ் சொற்கள் - 2

தனி தமிழ் சொற்கள் 



1.   பிராயச்சித்தம்            =       கழுவாய்
2.   பிரியம்                           =       விருப்பம் /விருப்பு
3.   பிராணம்                       =       உயிர்
4.   அசாத்தியம்                 =       கூடாமை
5.   அபராதம்                      =        குற்றம்
6.   அபிவிருத்தி                =       பெருவளர்ச்சி
7.   பகிரங்கம்                     =       வெளிப்படை
8.   உபகாரம்                       =       ஒப்புரவு
9.   இராசி                             =       ஓரை
10.  சித்திரம்                        =       ஓவியம்



11.   உண்ணாவிரதம்       =      தவப்பழி
12.   அபிஷேகம்                 =      திருமுழுக்கு
13.   அனுபவம்                   =       துய்ப்பு
14.   நிச்சயம்                       =       தேற்றம்
15.   சாதம்                            =       சோறு
16.   தூரம்                             =        சேய்மை
17.   தாமதம்                        =        தாழ்ப்பு
18.   திரவியம்                     =        பொருள்
19.   தினம்                            =        நாள்
20.   நவம்                             =        புதுமை



21.   நட்சத்திரம்                  =     நாள்மீன்
22.   நிவாஸ்                        =     குடில் / அகம்
23.   Grill  Gate                          =     இரும்பு படல்கள்
24.   Calling Bell                        =     அழைப்பு மணி
25.   Ground Floor                    =      தரை தள வீதி
26.   Cupboard                         =      மரப்பேழை / இழைப்பேழை
27.   Luggage                            =      சுமை
28.   Diet                                   =      உணவு கட்டுப்பாடு
29.   நாசம்                            =       அழிவு
30.   நாதம்                            =       ஒலி



31.   Choice                              =      உகப்பு
32.   சந்தேகம்                     =       ஐயம்
33.   பத்திரம்                        =      ஆவணம்
34.   சங்கீதம்                       =       இசை
35.   நஷ்டம்                        =       இழப்பு
36.   சிங்காசனம்               =       அரியணை
37.   சவால்                          =       அறைகூவல்
38.   தருமம்                         =       அறம்
39.   வஸ்திரம்                    =       ஆடை
40.   தைலம்                         =      எண்ணை



41.   தோஷம்                      =        குற்றம்
42.   நதி                                  =        ஆறு
43.   நமஸ்காரம்               =         வணக்கம்
44.   கிரகம்                           =         கோள்
45.   திருப்தி                         =         சால்வு
46.   ரசம்                                =         சாறு
47.   கிராமம்                        =         சிற்றூர்
48.   Keyboard                         =         விசப்பலகை
49.   Button                               =         பொத்தான்
50.   சிகிச்சை                      =         பண்டுவம்







Friday, 7 February 2014

தனி தமிழ் சொற்கள் - 1


1.   மெழுகுவர்த்தி            =         மெழுகுத்திரி
2.   பஜார்                              =         கடைத்தெரு
3.   Barrel                                 =         பெரும்பானை
4.   சத்து                                =         ஊட்டம்
5.   சூர்யகாந்தி                   =         கதிர்வணங்கிப்பூ
6.   Cash Receipt                      =         பணப்பற்றுச்சீட்டு
7.   ஞானம்                          =         மெய்யறிவு
8.   Elder Sister                        =          தமக்கை / தவ்வை
9.   அண்ணன்                    =          தமையன்
10.  தயாரிப்பு                      =         உருவாக்கம்


11.  தயார் ஆடைகள்       =         ஆயத்த ஆடைகள்
12.  பிரச்சனை                    =         சிக்கல்
13.  யாகம்                            =          வேள்வி
14.  சுமங்கலி                      =          வாழ்வரசி
15.  மமதை                          =          திமிர்
16.  Bonus                                =          மிகை ஊதியம் / மேல் ஊதியம்
17.  தியாகி                           =          ஈகி
18.  தியாகம்                        =          ஈகம் / ஈகை
19.  Incentive                            =          ஊக்க ஊதியம்
20.  விதவை                       =          கைம்பெண்



21.   Icecream                          =         பனிக்குழைவு / குளிர்களி /பனிப்பால்குழைவு
22.   அதிரசம்                      =         மிகுசுவையம்
23.   Coffee Shop                     =         குழம்பியகம்
24.   Omlette                            =         முட்டை அடை
25.   ரொட்டி                        =          கோதுமை அடை
26.   மகிமை                       =          பேராற்றல்
27.   Form                               =          படிவம்
28.   Biryani                             =          நெய்யூன்அரிசி
29.   பஞ்சம்                         =          வக்கடம்
30.   ஜன்னல்                      =          சாளர் / சாலர்



31.   Sweater                           =          வியர்வி
32.   Mood                              =          செவ்வி
33.   மோட்சம்                    =          வீடு / விடு பெறுதல்
34.   Bakery                            =           அடுமலை
35.   X-Ray                             =           ஊடுருவி
36.   Thesaurus                        =           நிகண்டு
37.   Lexicon                           =           பேரதிகாரி
38.   மையல்                      =           மயக்கம்
39.   பஞ்சம்                        =           கருப்பு
40.   மடி                               =           சோம்பல்



41.   விவாதம்                    =          சொற்ப்போர்
42.   அதிர்ஷ்டம்               =           நல்வாய்ப்பு / ஆகூழ்
43.   துரதிர்ஷ்டம்             =           போகூழ்
44.   தானியம்                    =            கூலம்
45.   வசந்தம்                      =           இளவேனில்
46.   வாழ்க வழமுடன்  =           வாழ்க வழத்துடன்
47.   கீர்த்தி                          =            சீர்த்தி
48.   திருஷ்டி                     =            கண்ணேறு
49.   சாரதி                           =            வலவன்
50.   உள்ளுதல்                 =            நினைத்தல்



51.   Novel                             =             புதினம்
52.   Petrol                              =             எரிநெய் /எரிஎண்ணெய்
53.   மேசை                        =             மீப்பலகை
54.   சபதி                             =             சிற்பகலைஞர் /சிற்பவல்லுனர்
55.   உபயம்                        =             அன்பளிப்பு /கொடை
56.   திருமதி                      =              திருவாட்டி
57.   வேஷ்டி                     =              வேட்டி
58.   Auto                               =              தானி
59.   இதயம்                       =              நெஞ்சாங்குலை
60.   தர்பார்                         =              ஓலக்கம்







Aphorisms - 1

1.  Prayer is not a 'spare wheel' that you pull out when in trouble. But it is a 'steering wheel' that directs the right path throughout.

2.  Because of its tiny wings and heavy body, aerodynamically the bumblebee shouldn't be able to fly. But the bumblebee doesn't know that. So, it flies anyway.

3.  You dont drown by falling in the water; you drown by staying there.

4.  As a child we always wanted to grow up. But now I realise that broken toys and lost pencils were much better than broken hearts and lost friends.

5. Life's a journey; NOT a race.

6.  Too many people spend money they haven't earned, to buy things they don't want, to impress people they don't like.

7.  Creeping snails have the weakest force.

8. Procrastination is the thief of Time.

9.  Sieve speaks that there is a hole in the pot, while itself has hundreds.

10.  EGO :  Edging God Out.

     

வாழ்கையின் புதிர்கள்

வாழ்கையின் புதிர்கள் 



ஒரு நாள் ஒரு முனிவரிடம் நான்கு பேர் வந்து, "உலகத்தில் எது நல்லது, எது கெட்டது என்று எப்படி புரிந்துக் கொள்வது?", என்று கேட்டார்கள். அதற்க்கு முனிவர், "எனக்கு தெரியாது", என்று பதில் அளித்தார். நான்கு பேரும் ஆச்சரியப்பட்டார்கள்.

பின்பு முனிவர், "வாருங்கள், உங்கள் நாலு பேரையும் புஷ்பக விமானத்தில் ஏற்றி செல்கிறேன். விமானத்தில் போகும்போது நான் சில கேள்விகள் கேட்பேன். நீங்கள் சரியான பதில் சொன்னால், தொடர்ந்து பயணம் செய்யலாம். தவறான பதில் சொன்னால், விமானத்திலிருந்து கீழே தள்ளி விடப்படுவீர்கள்", என்றார். நாலு பேரும் சம்மதித்தார்கள்.

புஷ்பக விமானத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 பேரும் கண்ட காட்சி இதோ :

ஒரு புலி சில குட்டிகள் ஈன்றதும், பசியால் இறை தேடிக்கொண்டு ஒரு இடத்திற்கு வந்தது. அதே இடத்தில் ஒரு மானும் குட்டிகள் ஈன்ற பின், இறை தேடி வந்தது. அந்த மானைக் கண்டவுடன் அந்த புலி அதைக் கொன்றுவிட்டு தின்றது. பின்பு புலி தன் குட்டிகளுக்கு பால் கொடுத்தது. குட்டிகள் மகிழ்ச்சி அடைந்தன. மானின் குட்டிகளுக்கோ துக்கமும் பட்டினியும்.

"இந்த புலி செய்தது சரியா, தவறா ?", என்று முனிவர் அந்த 4 பேர்களிடம் கேட்டார்.

முதல் மனிதர் சொன்னார், "இது அநியாயம். அந்த புலியும் குட்டிகளும் பசியை போக்கிக் கொண்டன. அந்த மான் மட்டும் என்ன பாவம் செய்தது? குட்டிகள் என்ன பாவம் செய்தன? இது தவறு", என்றார். உடனே, அந்த விமானத்திலிருந்து அவர் கீழே தள்ளப்பட்டார்.

இரண்டாம் மனிதர் சொன்னார், "புலி செய்தது சரிதான். அதன் பசிக்கு அது இறை தேடிக்கொண்டது. அதில் என்ன தவறு", என்றார். உடனே, அந்த விமானத்திலிருந்து அவரும் கீழே தள்ளிவிடப்பட்டார்.

மூன்றாம் மனிதர் சொன்னார், "புலி மானைக் கொன்றது இயற்க்கை.மான் அந்த புலிக்கு இறையானதும் இயற்க்கை. அதை நாம் தவறு என்றும், சரி என்றும் சொல்ல முடியாது." உடனே அவரும் விமானத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.

நாலாம் மனிதர், "எனக்கு தெரியாது", என்று பதில் சொன்னார். அவர் புஷ்பகவிமானதிலிருந்து கீழே தள்ளப்படவில்லை.

உலகத்தில் பல விஷயங்களுக்கு நாம் பதில் சொல்ல முடிவதில்லை. அது சரியா, தவறா என்றும் நமக்கு புரிவதில்லை.





Saturday, 1 February 2014

தச்சன்

தச்சன் 


ஒரு தச்சன் ஒரு தெருவின் ஓரத்தில் ஒரு சிறு கடையில் காலணிகளை தைத்துக்கொண்டிருந்தன். எல்லோருக்கும் அவன் செய்யும் வேலையில் மிகவும் திருப்தி. அவன் செருப்பு தைப்பது மட்டும் அல்லாமல், அவன் பாடிக்கொண்டே தன் வேலையை செய்வது தான் அவனது சிறப்பு. யார் அவன் கடைக்கு வந்தாலும் அவன் சந்தோஷத்துடன் பாடிக்கொண்டே, வாடிக்கையாளர்களின் காலணிகளை சரிசெய்து கொடுப்பான்.

ஒரு நாள் ஒரு செல்வந்தர் அவனுக்கு அன்பளிப்பாக ரூ 50,000/- கொடுத்தார். அவன் அந்த கடையிலேயே தங்குவதால், அந்த பணத்தை கடையிலேயே வைத்திருந்தான்.ஆனால், ஏதாவது ஒரு வாடிக்கையாளர் தன் பணத்தை எடுதுவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது.சந்தேகமும் பயமும் அதிகம் ஆக ஆக, அவன் பாடுவதை நிறுத்தி விட்டான்.அவனது நிம்மதியும் பறிபோய்விட்டது. இராத்திரியில் அவனுடைய தூக்கமும் பாதிக்கப்பட்டது.

சிறு நாட்கள் கழித்து, அந்த செல்வந்தர் தச்சனின் கடைக்கு மீண்டும் வந்தார். அவன் பாட்டு பாடாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தச்சன் செல்வந்தரிடம் உண்மையை சொன்னான்."உங்கள் பணம் தான் எனது எல்லாதொல்லைக்கு காரணம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அந்த 50,000/- ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டான் !

Kabir's Couplets - 14

Kabir's Couplets - 14

 


चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल । 
कहैं कबीर दो ना मिलैं, इकले दूजी डाल ॥ 



எறும்பு அரிசி ஒன்றை எடுத்து சென்றபோது
பருப்பு ஒன்றை வழியில் கண்டது !
இரண்டும் கிடைப்பதில்லை, ஒன்றை மட்டும்
விரும்பு என்று சொல்கிறார் கபீர் !!

Kabir's Couplets -13

Kabir's Couplets - 13



पंख होत परबस पर्यो, सूआ के बुधि नांहि । 
अकिल बिहूना आदमी, यों बन्धा जग माहिं ॥ 



அறிவின்மை காரணத்தால் கிளி
சிறகுகள் இருந்தும் கூண்டில் அடைக்கப்படுகிறது !
அவ்வாறே, மனிதனும் மோகத்தால்
சிறைகளில் அடைக்கப்படுகிறான்  !!


Kabir's Couplets - 12

Kabir's Couplets - 12



तिनका कबहु न निंदिये, जो पाँव तले होये । 
कबहु उड़ आँखों पड़े, पीर घनेरी होय । 




காலடியில் கிடக்கும் தூசியை
ஏளனம் என்றும் செய்யாதீர்கள் !
தூசி உங்கள் கண்ணில் விழுந்தால்
அவதியை நீங்கள் அறிவீர்கள் !

பொறுமை

பொறுமை 

 

ஒருநாள் ஒரு முனிவரிடம் ஒரு பெண் வந்தாள். 'என் கணவர் என்னை எப்பொழுதும் திட்டுகிறார். நானும் திரும்ப அவரை திட்டுவேன். அதனால் சண்டை அதிகமாகிறது. பின்பு என் கணவர் அடிக்கவும் செய்வார். இது அடிக்கடி நடக்கிறது. எனது பிரட்சனை தீர ஏதாவது வழி சொல்லுங்கள், முனிவர் அவர்களே', என்று சொன்னாள்.

முனிவர் சொன்னார், "அம்மணி, உன் கனவருடானன சண்டை வராமல் இருக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நீ காட்டுக்குள் சென்று, ஒரு புலியின் வாலிலிருந்து ஒரு முடியை கொண்டு வர வேண்டும்". இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தாள்.

"முனிவரே ! நான் நலமாக வாழ வழி கேட்டால், நீங்கள் நான் சாவதற்கான வழி சொல்கிறீர்களே!", என்றாள் . முனிவர் திட்டவட்டமாக சொன்னார், இதைத்தவிர வேறு வழி கிடையாது என்று. அந்த பெண் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.

மறு நாள் அவள் காட்டுக்குள் சென்றாள் . ஒரு கிலோ ஆட்டுக்கறி கொண்டு சென்றாள் . ஒரு புலியை கண்டதும், கறியை வைத்துவிட்டு ஓடிவிட்டாள் . புலி அவளை கண்டு ஓடி வந்தது. ஆனால், கறியை பார்த்ததும், அதை உண்ண ஆரம்பித்தது.அவளை மறந்துவிட்டது.

மறு நாள் மீண்டும், அந்த பெண் கறி கொண்டு காட்டுக்குள் சென்றாள் . அதே புலியை மீண்டும் கண்டாள் . கறியை வைத்தாள். புலி கறி திண்றது. அவளை ஒன்றும் செய்யவில்லை. சில நாட்கள் இப்படியே நடந்தது. இப்பொழுது, புலி அவளுக்கு நெருக்கமாகிவிட்டது. அப்பொழுது, அவள் அருகில் சென்று ஒரு முடியை பிடுங்கிவிட்டாள் .

முனிவரிடம் புலியின் முடியை காட்டினாள். அப்பொழுது முனிவர் சொன்னார், "பார்த்தாயா? பொறுமையால் ஒரு புலியையே நீ அடக்கிவிட்டாய். பொறுமையால் ஏன் நீ உன் கணவரை அடக்கமுடியாது? அவர் திட்டினால் நீ பொறுமையாக இரு. அவர் கோபம் தணிந்துவிடும்", என்றார். பெண்  புரிந்துக்கொண்டாள் .




 

Tuesday, 21 January 2014

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை 



இல்லாளோடு கூடி வாழ்வதின் சிறப்பை கூறுவது இவ்வதிகாரம். இவ்வதிகாரத்தில் அறனும் கலந்துள்ளது.

இல்வாழ்க்கையில் ஆண் :

1. பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வான்.

2. துறவியர், பசியால் வாடுவோர் மற்றும் இறந்தவர்கழுக்கு துணை நிர்ப்பான்.

3. இறந்தவர்கள், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தனக்கும் பேணுவது தலைசிறந்தது.

4. பழியில்லாமல் பணம் சேர்த்து, அதை பகிர்ந்து செலவு செய்தலால், வாழ்வின் ஒழுங்கு குறையாது.

5. அன்பும், அறனும் உடைய வாழ்க்கையே பண்பானதும், பயனுள்ளதாக இருக்கும்.

6. அறத்தால் அல்லாமல், வேறு நெறியால் பயன் கிடையாது.

7. அறத்தின் இயல்போடு வாழ்பவன், இவ்வாழ்வின் இயல்புகளோடு வாழ்கிறவன்.

8. அறத்திலிருந்து விலகாமலும், மற்றவர்களையும் அறத்தில் வாழ செய்பவனின் இல்வாழ்க்கை, துறவாழ்க்கையிலும் வலிமை மிக்கது.

9. அறவாழ்க்கையே இல்வாழ்க்கை; மற்றவர்கள் பழிக்காமல் வாழ்தல் நன்று.

10. நல்ல முறையில் இல்வாழ்க்கை வாழ்ந்தவன், தெய்வங்களுள் ஒன்றாக மதிக்கப்படுவான்.






Monday, 20 January 2014

The Law And The Lady : Wilkie Collins

Wilkie Collins : The Law And The Lady


This is the third novel, written by Wilkie Collins, read by me after The Moonstone & The Lady in White. Though this too is a detective novel, I have come across few aphorisms which I though I should write down, before I give away the book to charity.


  • Only give a woman love, and there is nothing she will not venture, suffer, and do.

  • 'Go where you may', I said, 'I go with you! Friends - reputation - I care nothing who I lose, or what I lose.

  • It is not easy to help you to understand a woman who doesn't understand herself.

  • Women alone can estimate what it cost me to be silent. And men alone can understand how irritating my silence must have been to my husband.

  • I thought I had married a woman who was superior to the vulgar failings of her sex. A good wife should know better than to pry into affairs of her husband's with which she has no concern.

  • Women, children and dogs proverbially know by instinct who the people are who really like them.

  • ..the lights and shadows of married life...

  • Of all the follies that a man can commit, the greatest is acting on impulse.

  • Why, my charming friend, profane your lips by talking of such things? Why frighten away the Loves and the Graces that lie hid in your smile?

  • Like a good woman - you make a hero of the man you love, whether he deserves it or not.

  • ...like all weak people, headstrong and unreasonable to the last degree !

  • ..you are confusing a delicate-minded man with a weak-minded man.

  • What a grand thing it is to be young !!

  • Music is the true narcotic for excitable brains. My harp ! my harp !

  • Well said the wisdom of our ancestors - there are none so blind as those who won't see !

  • Women wisely compose their minds, and help themselves to think quietly, by doing needlework. Why are men such fools as to deny themselves the same admirable resource - the simple and soothing occupation which keeps the nerves steady and leaves the mind calm and free?

  • There are some men whom the women all like; and there are other men whom the women never care for. Without the least reason for it in either case, though the one man is just as good as the other.

  • Ladies are not generally in the habit of troubling their heads about dry questions of law.

  • Women are infinitely superior to men in the moral qualities which are the true adornments of humanity.

  • Public opinion looks at the institution of 'The Sabbath' in Scotland; finds it unparalleled in Christendom for its senseless and savage austerity; sees a nation content to be deprived by its priesthood of every social privilege on one day in every week - forbidden to travel, forbidden to telegraph; forbidden to eat a hot dinner; forbidden to read a newspaper; in short, allowed the use of two liberties only, the liberty of exhibiting oneself at the Church, and the liberty of secluding oneself over the bottle - public opinion sees this, and arrives at the not unreasonable conclusion that the people who submit to such social laws as these are the most stolid, stern, and joyless people on the face of the earth.

  • What is bred in the bone, will never come out of the flesh.

  • The greatest scoundrel living always has a friend - in a woman, or a dog.

  • Time has got all the credit of being the great consoler of afflicted mortals. In my opinion, Time has been over-rated in this matter. Distance does the same beneficent work, far more speedily, and (when assisted by Change) far more effectually as well.

  • You will see that benevolence towards everybody is the great virtue of the time we live in.

  • Come, come, march with the age ! Open your mind to the new ideas !

  • We were all monkeys before we were men, and molecules before we were monkeys !

  • Is there a common fund of wickedness in us all ?

  • The greatest difficulties give way in the end, when they are attacked by the united alliance of patience, resolution, - and economy.

  • The vainest women were always the ugly women.

  • It's a great advantage to marry an old man - you can twist him round your little finger.

  • When a women sells herself to a man, the vile bargain is none the less infamous (to my mind),because it happens to be made under the sanction of the Church and the Law.