Sunday, 1 March 2015

Kavithai - 57

ஏன் ?



பல மதங்களை படைத்த நாம்,
இறைவன் ஒன்றென்பதை மறந்தது ஏன்?
பல மொழிகளை பேசும் நாம்,
சிந்தனை நமது ஒன்றென்பதை மறந்தது ஏன்?

பல பெண் மேதைகளை கண்ட நாம்,
சம உரிமை கொடுக்க மறந்தது ஏன்?
பல கொடிகளை பிடிக்கும் நாம்,
நமது கொள்கையை மறந்தது ஏன்?

பல கனவுகள் காணும் நாம்,
அவைகளை நனவாக்க மறந்தது ஏன்?
எண்ணிக்கையில் வளர்ந்த நாம்,
எண்ணத்தால் உயர மறந்தது ஏன்?

பல காவியங்கள் படைத்த நாம்,
பெருமை கொள்ள மறந்தது ஏன்?
பல மாநிலங்களில் வாழும் நாம்,
இந்தியர் என்பதை மறந்தது ஏன்?

No comments:

Post a Comment