Thursday, 16 October 2014

Kavithai - 2

ஆயிரம் 


ஆயிரத்தில் ஒருத்தியாம் 
என் காதலியைக் கைபிடிக்க 
ஓராயிரம் கனவுகள் 
நான் கண்டேன் !

ஆயிரம் வரிகளில் கவிதை 
ஒன்று எழுதி அவள் 
பாதங்களில் கவிதாஞ்சலி 
நான் வைத்தேன் !

ஆயிரம் பூக்களின் மாலையிட்டு 
ஓராயிரம் உறவினர்கள் முன்னிலையில்,
ஆயிரம் காலத்துப் பயிரான,
திருமண பந்தத்தில் நாங்கள் 
சேர காத்திருந்தேன் !

அவளோ !! ஆயிரம் பேரைக் 
கொண்ட அழகிய கிராமத்தை விட்டு,
ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கும் 
ஆயிரமாயிரம் பேர் கொண்ட 
மாநகரத்தில் ஒருவனை மணம் கொண்டாள் !!!

நானோ !! இப்பொழுது,
வெட்ட வெளியில் படுக்கையில் 
ஆயிரம் நட்சத்திரங்களை
எண்ணிய பின்னும்,
தவிக்கிறேன் தூக்கம் வராமல்,
அவள் நினைவுகளாலே !!!!

No comments:

Post a Comment