தச்சன்
ஒரு தச்சன் ஒரு தெருவின் ஓரத்தில் ஒரு சிறு கடையில் காலணிகளை தைத்துக்கொண்டிருந்தன். எல்லோருக்கும் அவன் செய்யும் வேலையில் மிகவும் திருப்தி. அவன் செருப்பு தைப்பது மட்டும் அல்லாமல், அவன் பாடிக்கொண்டே தன் வேலையை செய்வது தான் அவனது சிறப்பு. யார் அவன் கடைக்கு வந்தாலும் அவன் சந்தோஷத்துடன் பாடிக்கொண்டே, வாடிக்கையாளர்களின் காலணிகளை சரிசெய்து கொடுப்பான்.
ஒரு நாள் ஒரு செல்வந்தர் அவனுக்கு அன்பளிப்பாக ரூ 50,000/- கொடுத்தார். அவன் அந்த கடையிலேயே தங்குவதால், அந்த பணத்தை கடையிலேயே வைத்திருந்தான்.ஆனால், ஏதாவது ஒரு வாடிக்கையாளர் தன் பணத்தை எடுதுவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது.சந்தேகமும் பயமும் அதிகம் ஆக ஆக, அவன் பாடுவதை நிறுத்தி விட்டான்.அவனது நிம்மதியும் பறிபோய்விட்டது. இராத்திரியில் அவனுடைய தூக்கமும் பாதிக்கப்பட்டது.
சிறு நாட்கள் கழித்து, அந்த செல்வந்தர் தச்சனின் கடைக்கு மீண்டும் வந்தார். அவன் பாட்டு பாடாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தச்சன் செல்வந்தரிடம் உண்மையை சொன்னான்."உங்கள் பணம் தான் எனது எல்லாதொல்லைக்கு காரணம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லி அந்த 50,000/- ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டான் !
No comments:
Post a Comment