சுனாமி
சுனாமி அலைகளால்
சூன்யமாகிப் போனது பலர் வாழ்க்கை.
நீரின் தாக்கத்தால்,
விளக்கணைந்து போனது பலர் வீடுகள் !
வான்நீருக்காக வானம் நோக்கிய வேளை,
கடல்நீர் கொண்டு சென்றது பல உயிர்களை.
பாலையாய் காய்ந்த வயல்களிலே
பிணங்கள் விதைத்து சென்றது சுனாமி !!
உயரமாய் வந்த அலைகள்,
உடைத்து சென்றது பல நெஞ்சங்களை.
அதிர்ச்சியில் ஆழ்த்தி சென்றது
அதிர்ச்சியால் வந்த சுனாமி !!!
கூரையில்லா வீடுகள் ஆகின
குழந்தையில்லா குடும்பங்கள்.
குற்றமில்லாக் குழந்தைகள் ஆகினர்
பெற்றவர்கள் இல்லா அனாதைகள் !!!!
மனைவிகள் இழந்த கணவர்கள்,
மடியில்லாமல் தவித்த பிஞ்சுகள்.
பொருளை இழந்து, ஆதரவு இழந்து,
இருளில் தவித்தனர் பல மனிதர்கள் !!!!!
இறைவா !
கருனையில்லையேனும், நெற்றிக்கண் திறவாதே.
'நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோர்க்கும்'
என்ற விதியை மாற்றி, நீ, பொல்லாதவர்கள் மீது
கொண்ட கோபத்தை எல்லோர் மீது காட்டாதே !!!!!!
No comments:
Post a Comment