Tuesday, 21 January 2014

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை 



இல்லாளோடு கூடி வாழ்வதின் சிறப்பை கூறுவது இவ்வதிகாரம். இவ்வதிகாரத்தில் அறனும் கலந்துள்ளது.

இல்வாழ்க்கையில் ஆண் :

1. பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வான்.

2. துறவியர், பசியால் வாடுவோர் மற்றும் இறந்தவர்கழுக்கு துணை நிர்ப்பான்.

3. இறந்தவர்கள், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தனக்கும் பேணுவது தலைசிறந்தது.

4. பழியில்லாமல் பணம் சேர்த்து, அதை பகிர்ந்து செலவு செய்தலால், வாழ்வின் ஒழுங்கு குறையாது.

5. அன்பும், அறனும் உடைய வாழ்க்கையே பண்பானதும், பயனுள்ளதாக இருக்கும்.

6. அறத்தால் அல்லாமல், வேறு நெறியால் பயன் கிடையாது.

7. அறத்தின் இயல்போடு வாழ்பவன், இவ்வாழ்வின் இயல்புகளோடு வாழ்கிறவன்.

8. அறத்திலிருந்து விலகாமலும், மற்றவர்களையும் அறத்தில் வாழ செய்பவனின் இல்வாழ்க்கை, துறவாழ்க்கையிலும் வலிமை மிக்கது.

9. அறவாழ்க்கையே இல்வாழ்க்கை; மற்றவர்கள் பழிக்காமல் வாழ்தல் நன்று.

10. நல்ல முறையில் இல்வாழ்க்கை வாழ்ந்தவன், தெய்வங்களுள் ஒன்றாக மதிக்கப்படுவான்.






No comments:

Post a Comment