துபாய்
கடல் சார்ந்த இந்த நகரத்தில்,
கார்மேகம் கண்டதில்லை.
கிளிகள் பேசுவதை கேட்டதில்லை,
கீதம் பாட இங்கில்லை குயில்.
குளிர் காற்று இங்கு வீசுவதில்லை,
கூட்டமாய் மாடுகள் மேய்வதில்லை.
கெண்டைமீன் கொண்ட குளமில்லை,
கேட்கவில்லை இங்கு நதியின் சத்தம்.
கைதிபோல் மனிதர்களிங்கு குளிர் அறையில்!
கொடுமை பல தாங்கி வேலை செய்கின்றனர்,
கோடைகால வெயிலின் தாகத்தால்!
கௌரவமில்லை, இயற்கையின் இனிமையில்லை,
இஃதல்லவா இவ் துபாயின் வாழ்க்கை !!!
கடல் சார்ந்த இந்த நகரத்தில்,
கார்மேகம் கண்டதில்லை.
கிளிகள் பேசுவதை கேட்டதில்லை,
கீதம் பாட இங்கில்லை குயில்.
குளிர் காற்று இங்கு வீசுவதில்லை,
கூட்டமாய் மாடுகள் மேய்வதில்லை.
கெண்டைமீன் கொண்ட குளமில்லை,
கேட்கவில்லை இங்கு நதியின் சத்தம்.
கைதிபோல் மனிதர்களிங்கு குளிர் அறையில்!
கொடுமை பல தாங்கி வேலை செய்கின்றனர்,
கோடைகால வெயிலின் தாகத்தால்!
கௌரவமில்லை, இயற்கையின் இனிமையில்லை,
இஃதல்லவா இவ் துபாயின் வாழ்க்கை !!!
No comments:
Post a Comment