Sunday, 26 October 2014

Kavithai - 32

அன்றும், இன்றும்



அன்று :

கடல்.
கடற்கரை.
நானும் அவளும்.
மாலை முழுதும் பேசிக்கொண்டிருந்தோம்.
கடல் அலைகளின் ஓசை கேட்கவேயில்லை.


இன்று :

கடல் அலைகளின் இனிய ஓசை கேட்கிறது.
மாலை முழுதும் அவளது நினைவுகள்.
நானும் கடலும்.
கடற்கரை.
நான்.


No comments:

Post a Comment