Sunday, 19 October 2014

Kavithai - 15

ஒரு தலை காதல் 


தேன் கொண்ட மலர் 
வண்டு வந்து அமர்ந்ததும் 
வெட்கத்தால் மூடியதாம் 
தன் இதழ்களை.

காந்தம் கொண்ட அவள் விழிகள் 
என்னைக் கண்டதும் 
வெட்கத்தால் மூடின 
அவள் கண்கள்.

கடலிருந்து எழுந்த அலைகள் 
மணற்வீட்டை உடைத்துவிட்டு 
மாயமாய் மறைத்தது 
மீண்டும் கடலில்.

அவள் மீது கொண்ட காதலால் 
நான் கட்டிய மனக்கோட்டை 
உடைத்துவிட்டு சென்று 
மறைந்தாள் என் விழிகளிருந்து.

மீன் கொத்திப் பறவைபோல் 
என் இதயத்தை கொத்திச் சென்றாள்.
அவள் சிரிக்கும் சிரிப்பிலே 
சிந்தையை நான் இழக்கிறேன்.

அழகாய் வடிவமைத்த அவளுள்,
அச்சத்தை வைத்த இறைவன்,
அவள் அழகில் மயங்கும் என்னில் 
'மச்சத்தை' வைக்க மறந்தானே !!

No comments:

Post a Comment