Sunday, 26 October 2014

Kavithai - 23

கடல் கடந்த காதல் 



ஆசையுடன் நான் இங்கே,
அழகுடன் நீ அங்கே.
காதலால் நாம் சேரும்,
நாள் தான் எங்கே ?

வசதியைத் தேடி
இங்கு வந்தவன்,
இன்று நிற்கிறேன்
வாழ்க்கையை தொலைத்து.

சன்னல் திரை மூடாமல்
கணங்களை இமைக்காமல்,
வழி மீது விழி வைத்து,
காத்திருக்கும் பெண்ணே !!

வாழ்க்கையை கண்ணீரில்
கரைக்கும் உன்னை,
காண நான் வருவேன்,
கடல்நீரைக் கடர்ந்து.

காலம் நம்மை ஒன்று சேர்க்கும்,
நம் சோகங்களை துடைத்து.
இல்லிறத்தில் நாம் இணைவோம்,
இறுதிவரை ஒன்று சேர்ந்து !!!!

No comments:

Post a Comment