பகல் கனவு
காலை வேளை ஒரு ஒரு மார்கழி நாளில்
குளிர் தென்றல் சுகமாய் வீச,
தென்னங் கீற்றுகள் லேசாய் அசைய,
கண்ணெதிரே நின்றாள் அவள்.
மயக்கும் கண்கள் அவளது,
மாநிறம் அவளது மேனி.
சிரிப்பில் சிறையடைக்கும் கவர்ச்சி,
செதுக்கிய சிலையாய் நின்றாள் அவள்.
அவள் அழகில் மயங்கி நின்றேன்,
என்னையே நான் மறந்து நின்றேன்.
எண்ணங்களை நான் தொலைத்து நின்றேன்,
உணர்வற்று கற்சிலையாய் நின்றேன் !
அழுத்தமான ஒலி காதில் கேட்க,
அசத்தலாய் கண் விளிகள் திறக்க,
மனம் தெளிந்த உடன் நான் அறிந்தேன்,
நான் நின்றது பேரூந்து நிலையம் !!
மக்கள் கூட்டமாய் அலை மோத,
அவசரமாய் நானும் பேரூந்தில் ஏறி.
வியர்ந்து நான் பயணத்தை தொடர,
மறைந்தாள் அவளும் பகல்கனவு போல !!!!
காலை வேளை ஒரு ஒரு மார்கழி நாளில்
குளிர் தென்றல் சுகமாய் வீச,
தென்னங் கீற்றுகள் லேசாய் அசைய,
கண்ணெதிரே நின்றாள் அவள்.
மயக்கும் கண்கள் அவளது,
மாநிறம் அவளது மேனி.
சிரிப்பில் சிறையடைக்கும் கவர்ச்சி,
செதுக்கிய சிலையாய் நின்றாள் அவள்.
அவள் அழகில் மயங்கி நின்றேன்,
என்னையே நான் மறந்து நின்றேன்.
எண்ணங்களை நான் தொலைத்து நின்றேன்,
உணர்வற்று கற்சிலையாய் நின்றேன் !
அழுத்தமான ஒலி காதில் கேட்க,
அசத்தலாய் கண் விளிகள் திறக்க,
மனம் தெளிந்த உடன் நான் அறிந்தேன்,
நான் நின்றது பேரூந்து நிலையம் !!
மக்கள் கூட்டமாய் அலை மோத,
அவசரமாய் நானும் பேரூந்தில் ஏறி.
வியர்ந்து நான் பயணத்தை தொடர,
மறைந்தாள் அவளும் பகல்கனவு போல !!!!
No comments:
Post a Comment