Sunday, 19 October 2014

Kavithai - 18

மனைவி 



வாலிபத்தில் கவர்ந்தாள் என்னை
தன் வாலிபத்தால் அவள்.
என் சிந்தனைக்கு சிறகு கட்டினாள்
தன் மதியால் அவள்.

திருமணம் என்ற வேலியால்
இலக்குமண கோடு கிழித்தாள்.
வயிற்றில் என் குழந்தைகளை சுமந்து
பொறுப்புகளை என் மேல் சுமத்தினாள்.

நாள் முழுதும் நான் உழைக்க
நலமாய் குடும்பத்தை பேணி
என் உருவச்சிலையை பதித்தாள்
குழந்தைகள் மனதில் அவள்.

காலம் கடந்தபின் வந்த முதுமைக்கு
தூணாய் அமைந்தாள் அவள்.
மரணம் வரை உடன் இருந்து
துணையாய் இருப்பாள் அவள் !!!

No comments:

Post a Comment