வாழ்கையின் புதிர்கள்
ஒரு நாள் ஒரு முனிவரிடம் நான்கு பேர் வந்து, "உலகத்தில் எது நல்லது, எது கெட்டது என்று எப்படி புரிந்துக் கொள்வது?", என்று கேட்டார்கள். அதற்க்கு முனிவர், "எனக்கு தெரியாது", என்று பதில் அளித்தார். நான்கு பேரும் ஆச்சரியப்பட்டார்கள்.
பின்பு முனிவர், "வாருங்கள், உங்கள் நாலு பேரையும் புஷ்பக விமானத்தில் ஏற்றி செல்கிறேன். விமானத்தில் போகும்போது நான் சில கேள்விகள் கேட்பேன். நீங்கள் சரியான பதில் சொன்னால், தொடர்ந்து பயணம் செய்யலாம். தவறான பதில் சொன்னால், விமானத்திலிருந்து கீழே தள்ளி விடப்படுவீர்கள்", என்றார். நாலு பேரும் சம்மதித்தார்கள்.
புஷ்பக விமானத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 பேரும் கண்ட காட்சி இதோ :
ஒரு புலி சில குட்டிகள் ஈன்றதும், பசியால் இறை தேடிக்கொண்டு ஒரு இடத்திற்கு வந்தது. அதே இடத்தில் ஒரு மானும் குட்டிகள் ஈன்ற பின், இறை தேடி வந்தது. அந்த மானைக் கண்டவுடன் அந்த புலி அதைக் கொன்றுவிட்டு தின்றது. பின்பு புலி தன் குட்டிகளுக்கு பால் கொடுத்தது. குட்டிகள் மகிழ்ச்சி அடைந்தன. மானின் குட்டிகளுக்கோ துக்கமும் பட்டினியும்.
"இந்த புலி செய்தது சரியா, தவறா ?", என்று முனிவர் அந்த 4 பேர்களிடம் கேட்டார்.
முதல் மனிதர் சொன்னார், "இது அநியாயம். அந்த புலியும் குட்டிகளும் பசியை போக்கிக் கொண்டன. அந்த மான் மட்டும் என்ன பாவம் செய்தது? குட்டிகள் என்ன பாவம் செய்தன? இது தவறு", என்றார். உடனே, அந்த விமானத்திலிருந்து அவர் கீழே தள்ளப்பட்டார்.
இரண்டாம் மனிதர் சொன்னார், "புலி செய்தது சரிதான். அதன் பசிக்கு அது இறை தேடிக்கொண்டது. அதில் என்ன தவறு", என்றார். உடனே, அந்த விமானத்திலிருந்து அவரும் கீழே தள்ளிவிடப்பட்டார்.
மூன்றாம் மனிதர் சொன்னார், "புலி மானைக் கொன்றது இயற்க்கை.மான் அந்த புலிக்கு இறையானதும் இயற்க்கை. அதை நாம் தவறு என்றும், சரி என்றும் சொல்ல முடியாது." உடனே அவரும் விமானத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.
நாலாம் மனிதர், "எனக்கு தெரியாது", என்று பதில் சொன்னார். அவர் புஷ்பகவிமானதிலிருந்து கீழே தள்ளப்படவில்லை.
உலகத்தில் பல விஷயங்களுக்கு நாம் பதில் சொல்ல முடிவதில்லை. அது சரியா, தவறா என்றும் நமக்கு புரிவதில்லை.
No comments:
Post a Comment