நட்பும் உறவும்
வீதியோரம் ஆலமரம் ஒன்று நட்டு,
கற்றோட்டதில் அதை நான் வைத்து,
கழிவுநீர் வாய்க்கால் அதற்கு வெட்டி,
பின்நாளில் அம்மரத்தை நான் மறந்தேன்.
வீட்டு முற்றத்தில் முருங்கை மரம் வைத்து,
அதை நான் வேலிட்டு காத்து,
தினந்தோறும் நீர் அதற்க்கு பாய்ச்சி,
குழைந்தையைப் போல் அதை நான் வளர்த்தேன்.
நாட்கள் கடந்தபின், முதுமை வந்தபின்,
ஒரு நாள் வீசிய வலிய காற்றில்,
நான் வளர்த்த முருங்கைமரம் சாய்ந்தது.
என் வீட்டு கூரையும் உடைந்தது.
நான் நட்ட ஆலமரமோ படர்ந்து
வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் தந்து,
ஊர்மக்கள் என்னை வாழ்த்த வைத்தது.
இறுதி நாட்களில் நானோ ஆலமர நிழலில் !!!
வீதியோரம் ஆலமரம் ஒன்று நட்டு,
கற்றோட்டதில் அதை நான் வைத்து,
கழிவுநீர் வாய்க்கால் அதற்கு வெட்டி,
பின்நாளில் அம்மரத்தை நான் மறந்தேன்.
வீட்டு முற்றத்தில் முருங்கை மரம் வைத்து,
அதை நான் வேலிட்டு காத்து,
தினந்தோறும் நீர் அதற்க்கு பாய்ச்சி,
குழைந்தையைப் போல் அதை நான் வளர்த்தேன்.
நாட்கள் கடந்தபின், முதுமை வந்தபின்,
ஒரு நாள் வீசிய வலிய காற்றில்,
நான் வளர்த்த முருங்கைமரம் சாய்ந்தது.
என் வீட்டு கூரையும் உடைந்தது.
நான் நட்ட ஆலமரமோ படர்ந்து
வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் தந்து,
ஊர்மக்கள் என்னை வாழ்த்த வைத்தது.
இறுதி நாட்களில் நானோ ஆலமர நிழலில் !!!
No comments:
Post a Comment