Sunday, 19 October 2014

Kavithai - 14

கள்வனின் காதல் 


காலத்தால் அழியாத காதலால்
அழிந்ததே என் வாழ்க்கை.
கண்கள் இல்லை காதலுக்கு
கண்டது எல்லாம் கனவே !
என் மதியும் உதவவில்லை,
தீயதும் நல்லதென பட்டதே!

பேரழகன் போல் தெரிந்தான்
என் கண்களை பறித்தவன்.
இனிய காதலன் அவன் எனக்கு,
இதயம் அவனிடம் இழந்தபோது.
உண்மைக் காதலன்  என்றெண்ணினேன்
எனதெண்ணங்களை அவன் ஏற்றபோது.
கள்வன் என அறிந்துக் கொண்டேன்
கற்பை நான் இழந்த பின்னர் !!

No comments:

Post a Comment