Saturday, 18 October 2014

Kavithai - 27

நீதி 



நீதி வந்து நிற்கிறது
நீதிமன்ற வாயினிலே.
உள்ளே வரவிடாமல் தடுக்கிறது
பணம் என்ற வேலி அதனை.

சிலையாய் நிற்கிறான் மனுநீதி சோழன்
நீதிமன்ற வளாகத்திலே.
கற்சிலையாகிப் போனதே
நீதியும் இந்திய திருநாட்டிலே !

கசப்பாகிப் போனதே ஏழையர்க்கு
நீதியும் எட்டாத திராட்சையாக.
கூர் வைத்து விற்கின்றனர் சிலர்
நீதியையும் கூச்சம் இல்லாமலே !

சிறு குற்றங்களுக்கு நீதியோர் விலை,
மறு விலையிங்கு பெரும் குற்றங்களுக்கு.
மொத்தமாக நீதிக்கோர் விலை,
ஏய்த்து, கற்பழித்துக் கொன்றவனுக்கும் !

சத்தம் இல்லாமல் போகிறது
நித்தம் நடக்கும் குற்றங்களிங்கு,
வெட்ட வெளிச்சத்தில் உறங்குகிறது
சட்டம் ஒழுங்கு என்பதிங்கு.

'கழுதை தேய்ந்து கட்டெரும்பு'
என்று நீதியை சொன்னால் ஏது மறுப்பு?
வேலியே பயிரை மேய்ந்தால்
விடுதலைக்குக்தான் இங்கு என்ன பொருள் ??

No comments:

Post a Comment