Saturday, 18 October 2014

Kavithai - 13

"பிரதேசிகள்"


வாழ்வில் உயர,
வறுமைகள் நீங்க,
வான்வழியே, கடல் தாண்டி,
இங்கு நாம் வந்தோம்.

ஊரை மறந்து,
உறவினரை விட்டு,
பிரியமானோரை பிரிந்து,
பிறர் நாட்டுக்கு வந்தோம்.

சில்லறைக் கடன் அடைக்க,
பெற்றோர் சேவைக் கடனை
புறக்கணித்து விட்டு
நாம் இங்கு வந்தோம்.

மனைவியை பிரிந்து,
பிள்ளைகளை பின்நாளில்
பார்க்கலாம் எனக்கூறி,
பாரத்துடன் இங்கு வந்தோம்.

வசதிகள் உயர்ந்தன,
வறுமைகள் விலகின.
ஆனால், வாழ்க்கையை மட்டும்,
எங்கோ நாம்  தொலைத்தோம் !!!

No comments:

Post a Comment