பொறுமை
ஒருநாள் ஒரு முனிவரிடம் ஒரு பெண் வந்தாள். 'என் கணவர் என்னை எப்பொழுதும் திட்டுகிறார். நானும் திரும்ப அவரை திட்டுவேன். அதனால் சண்டை அதிகமாகிறது. பின்பு என் கணவர் அடிக்கவும் செய்வார். இது அடிக்கடி நடக்கிறது. எனது பிரட்சனை தீர ஏதாவது வழி சொல்லுங்கள், முனிவர் அவர்களே', என்று சொன்னாள்.
முனிவர் சொன்னார், "அம்மணி, உன் கனவருடானன சண்டை வராமல் இருக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நீ காட்டுக்குள் சென்று, ஒரு புலியின் வாலிலிருந்து ஒரு முடியை கொண்டு வர வேண்டும்". இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தாள்.
"முனிவரே ! நான் நலமாக வாழ வழி கேட்டால், நீங்கள் நான் சாவதற்கான வழி சொல்கிறீர்களே!", என்றாள் . முனிவர் திட்டவட்டமாக சொன்னார், இதைத்தவிர வேறு வழி கிடையாது என்று. அந்த பெண் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.
மறு நாள் அவள் காட்டுக்குள் சென்றாள் . ஒரு கிலோ ஆட்டுக்கறி கொண்டு சென்றாள் . ஒரு புலியை கண்டதும், கறியை வைத்துவிட்டு ஓடிவிட்டாள் . புலி அவளை கண்டு ஓடி வந்தது. ஆனால், கறியை பார்த்ததும், அதை உண்ண ஆரம்பித்தது.அவளை மறந்துவிட்டது.
மறு நாள் மீண்டும், அந்த பெண் கறி கொண்டு காட்டுக்குள் சென்றாள் . அதே புலியை மீண்டும் கண்டாள் . கறியை வைத்தாள். புலி கறி திண்றது. அவளை ஒன்றும் செய்யவில்லை. சில நாட்கள் இப்படியே நடந்தது. இப்பொழுது, புலி அவளுக்கு நெருக்கமாகிவிட்டது. அப்பொழுது, அவள் அருகில் சென்று ஒரு முடியை பிடுங்கிவிட்டாள் .
முனிவரிடம் புலியின் முடியை காட்டினாள். அப்பொழுது முனிவர் சொன்னார், "பார்த்தாயா? பொறுமையால் ஒரு புலியையே நீ அடக்கிவிட்டாய். பொறுமையால் ஏன் நீ உன் கணவரை அடக்கமுடியாது? அவர் திட்டினால் நீ பொறுமையாக இரு. அவர் கோபம் தணிந்துவிடும்", என்றார். பெண் புரிந்துக்கொண்டாள் .
No comments:
Post a Comment