Sunday, 19 October 2014

Kavithai - 19

காதல் 



காற்றில் பறக்கும் பறவை
மெல்ல அடிக்கும் சிறகை.
அவளோடு கூட நானும்
அதை பார்த்து ரசிப்பது காதல்.

காட்டில் வாழும் கவரிமான்
பெண்மானை கவரும் காட்சியை
அவள் கண்டு நானுதலை
நான் கண்டு களிப்பது  காதல்.

பெண்மான் மீது வேடன் அம்பு எய்வதை
கண்ட ஆண் மான்,
அதை காப்பாற்ற, தன் உயிரை வெறுத்து
ஓடி வருவது காதல்.

பிளிர் இதயத்தை வெல்ல
இரண்டு யானைகள் போட்டியிட்டு,
சண்டையிடும் காட்சியை
அவள் கண்டு அஞ்சுவது காதல்.

கடலோரம் நாங்கள் இருக்க
அலைகள் எங்கள் கால்களை தொட்டு
மீண்டும் கடலில் செல்வதை
மெய்சிலிர்ந்துக் கொள்வது காதல்.

எனக்கும் அவளுக்கும் பாலமாய்
அமைவது காதல்.
எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும்
படிகளாய் அமைவதும் காதலே.

இனிமை என்ற வார்த்தையை
கேட்டு ரசிப்பது காதல்.
தனிமை என்ற நிலையை,
விலக்கி வைப்பதும் காதலே !!!!!


No comments:

Post a Comment