காப்பது யார்?
பயிரைக் காக்க வேலி,
கொடியைக் காக்க மரம்,
மரத்தை காக்க மழை,
சேயைக் காக்க தாய்,
பண்பாட்டைக் காக்க முதியோர்,
முதியோரைக் காக்க இளைஞர்,
நதியைக் காக்க கரை,
கரையை காக்க செடிகள்.
இலக்கியம் காக்க கல்வி,
கல்வியைக் காக்க ஆசிரியர்,
பணம் காக்க வங்கி,
திரை காக்க ஒரு தணிக்கை.
உடலைக் காக்க ஆரோகியம்,
மனதை காக்க அமைதி,
ஆன்மாவைக் காக்க பக்தி,
பக்தியைக் காக்க நம்முள் சக்தி,
இப்படி ஒவ்வொன்றையும் காக்க
கற்றுக் கொடுத்தது இந்த உலகம்.
ஆனால், ஊழல் அழிக்கும்
நம் நாட்டை காப்பது யார் ?
No comments:
Post a Comment