Friday, 27 February 2015

Kavithai - 51

குறுகிய கால இன்பம் 


கண்ணிமைக்கும் வேளையிலே
ஓடிக்கப்படும்
இப்புவியின் இன்பம்,
ஓர் வாசனை திரவியமாக்கப்பட்ட
ரோஜா மலரே !!
அம்மலரை,
வாழ்ந்தபின் வாடிப்போக,
'தோட்டக்காரன்'
அனுமதித்ததில்லை என்றுமே !!!




மலரின் வருத்தம் 


நிதமும் நீரூட்டி,
ஆசையோடு ஆதரித்து,
அன்போடு முத்தமிட்டு
காத்த உன்னை,
தெய்வமென நினைத்தேன்.

நீயோ, நான் மலர்ந்ததும்
விலைபேசும்
தோட்டக்காரனாக
மாறிவிட்டாயே !!




இதய துடிப்பு 


வைரம் போல் மின்னும் உன் அழகு
இயற்கையால் வந்ததல்ல.
அது இறைவனின் படைப்பின்
ஓர் அற்புதமாகும்.

உன் மீது நான் கொண்டுள்ள காதல்,
கற்பனையால் வந்ததல்ல.
அது என் இதய துடிப்பின்
வேண்டுதலாகும் !!!




சுதந்திர ஜீவிகள் 


இயற்கையை இரசிக்கும் குயிலுக்கு,
மெட்டு எதற்கு பாட?
ஆனந்தத்தால் துள்ளும் மயிலுக்கு,
இசை எதற்கு ஆட?
உள்ளங்களை சம்பாதிக்கும் மனிதனுக்கு,
பணம் எதற்கு வாழ?
சுதந்திர ஜீவியாக வாழும் அவனை,
பணத்தால் முடியுமா ஆள  ??

No comments:

Post a Comment