Wednesday, 14 January 2015

Kavithai - 40

நினைவுகள்



உன்னை நான் மறந்திருப்பது,
என்னையே நான் மறந்திருக்கும்போது !

கண்கள் உன்னை காணாதிருப்பது,
காட்சியே காண மறந்திருக்கும்போது !!

நான் உன்னைக் காணாத நாள்,
பூமி சூரியனை காணாத நாளாகும் !!

என் கனவில் நீ வராத இரவு,
நான் தூங்காமலேயே கழித்த இரவாகும் !!




நம்பிக்கை 



நீ இல்லாத என் வாழ்க்கை 
வாழ்வன்று.
அது சிறகே இல்லாத 
பறவை ஒன்று !

உன்னை கனவிலும் நினைவிலும் 
காணாத நாள் என்று?
வாழ்கிறேன் நம்பியே,
இணைவோம் ஒரு நாள் என்று !!

No comments:

Post a Comment