அவள்
கண் எதிரே நின்றாள் அவள்,
கற்பனையில் தவழ்ந்தாள் அவள்.
கனவிலும் வந்து சென்றாள்,
"காதல்" எனச் சொன்னாள் அவள்.
கண்டதும் வரும் காதல்,
என சொன்னவரும் கண்ணில்லாதவரோ?
கண் விழித்தபோது இல்லை அவள்
கானல் நீராய் மறைந்தாள் அவள்.
என் வாழ்வில் வந்த நிலா,
அவள் நில்லாமல் சென்றது ஏனோ?
"கல்லானாலும் கணவன்" என்றவள்,
இன்று கல்லாகிப் போனது ஏனோ ?
காதல் என்பது இவ்வுலகில்,
கையில் காசு உள்ளவரை தானோ?
காலம் முழுதும் வாழும் காதல்,
காவியங்களில் மட்டும் தானோ?
வாழ்க்கையில் உண்டு உயர்வு தாழ்வு,
காதலிலும் உண்டோ தாழ்வு?
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்,
இன்று ரொக்கத்தில் முடிவடைகிறதோ ??
கண் எதிரே நின்றாள் அவள்,
கற்பனையில் தவழ்ந்தாள் அவள்.
கனவிலும் வந்து சென்றாள்,
"காதல்" எனச் சொன்னாள் அவள்.
கண்டதும் வரும் காதல்,
என சொன்னவரும் கண்ணில்லாதவரோ?
கண் விழித்தபோது இல்லை அவள்
கானல் நீராய் மறைந்தாள் அவள்.
என் வாழ்வில் வந்த நிலா,
அவள் நில்லாமல் சென்றது ஏனோ?
"கல்லானாலும் கணவன்" என்றவள்,
இன்று கல்லாகிப் போனது ஏனோ ?
காதல் என்பது இவ்வுலகில்,
கையில் காசு உள்ளவரை தானோ?
காலம் முழுதும் வாழும் காதல்,
காவியங்களில் மட்டும் தானோ?
வாழ்க்கையில் உண்டு உயர்வு தாழ்வு,
காதலிலும் உண்டோ தாழ்வு?
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்,
இன்று ரொக்கத்தில் முடிவடைகிறதோ ??
No comments:
Post a Comment