Monday, 12 January 2015

Kavithai - 11

சிலை


அழகிய சிலை ஒன்று
வடித்தேன் நான்.
தங்கத்தால் அதை முழுதும்
பூசினேன் நான்.

கன்னத்தில் குழி,
மூக்கில் கூர்மை,
பருத்த மார்பங்கள்,
பலமான கால்கள்.

பட்டுக் கூந்தல்,
பவளக் கண்கள், மற்றும்,
முத்துப் பற்கள்,
அதில் பதித்தேன் நான்.

மகிழ்தேன் நானும்,
பார்ப்பவர்கள் சொல்ல,
"பழுதில்லா சிலை,
அற்புதமான படைப்பு" என்று!

நான் வடித்த சிலையில்,
அதிசயம் தான் என்னவென்று
முயற்சியால் நான் ஆராய்ந்ததில்
பலமொன்றை கண்டேன் சிலையில்.

அழுத்தமான பார்வை, அழகிய உடலமைப்பு,
அனால், இவைகளுக்கும் மேலாய்,
இடை மட்டும் அச்சிலையில்
இல்லாதது போல் இருந்ததே !!!

No comments:

Post a Comment