Monday, 12 January 2015

Kavithai - 35

இசை




கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும்
ஒரு அருமையான வாகனம்.

கையோடு கை கோர்ந்துக்கொண்டு
உடன் வரும் ஒரு அன்பு காதலி.

கொதிக்கும் நீரைப்போல் இழைஞர்களை
ஆட வைக்கும் கலைஞன்.

சோர்வடைந்த நெஞ்சங்களுக்கு
ஆறுதல் கூறும் நல்ல தூதன்.

கற்றோர்-கல்லாதோர் இரு வகையினருக்கும்
பாடம் நடத்தும் நல்ல ஆசான்.

மனிதன் இயற்கையை இரசித்து வாழ
போதனை தரும் ஒரு சான்றோன்.

பிறப்பு முதல் இறப்பு வரை இணைபிரியாமல்
வாழ்ந்து வரும் ஒரு உண்மை நண்பன்.

No comments:

Post a Comment