சுமை
அன்பே !
உன் காதல்
என் இதயத்திற்கு
ஒரு சுகமான சுமை.
உன் பிரிவோ,
என் இதயத்திற்கு
ஒரு தாங்கமுடியா பாரம் !
உலகம்
வாழ்க்கை - நம் இருவரையும் இணைத்து
அது இனிமையானது என்று தெரிவித்தது.
உலகம் - நாம் இருவரையும் பிரித்து
அது கொடியது என்று நிரூபித்தது.
உப்பு
உப்பிட்டவனை மறவாதவனின் மனதும்
உப்பின் தூய வெள்ளை நிறமமே.
மறந்தவன் மனதோ,
உப்பில்லா பண்டமே !!
துன்பம்
துன்பத்தை துன்பம்
என்று நினைத்தால்,
என்றும் துன்பமே; அதை,
வாழ்கையின் அங்கம்
என்று எடுத்துக்கொண்டால்
என்றும் இன்பமே.
துன்பத்தோடு போராடினால்,
மாறும் இன்பமாக அக்கணமே.
இல்லையேல்,
உயிர் பிரிந்தாலும்
உடலை விட்டுப் பிரியாது
எக்கணமும் !!!
No comments:
Post a Comment