Monday, 12 January 2015

Kavithai - 25

ஐஸ்வர்யா ராய் 


ஆசை, ஆசையாக ஐஸ்வர்யா மீது,
ஆசை நான் வைத்தேன்.
அழகு அழகான வரிகளால்,
கவிமாலை அவளுக்கு நான் சூட்டினேன்.

ஆடிய மயிலும், அழகு குயிலும்,
அசர்ந்து போயின அவள் அழகில்.
ஆவின் பாலும், இனிய தேனும்,
கசந்து போனது அவளைக் கண்டு.

விலையற்ற சிலையோ,வானத்தின் நிலவோ !
மண்ணில் நடக்கும் விண்ணுலக அப்சரையோ!
மண் எடுத்து உன்னை உருவாக்கியவனும்,
கண் திறந்து கனவு கண்டானோ !

கண்களோ, இல்லை, கலங்கரை விளக்கோ!
இதயக் கப்பல்கள்  பல ஈர்த்தன அவை.
இந்திய நாட்டின் உலக அழகியோ, இல்லை,
அவள் உலக நாடுகளின் இந்திய அழகியோ !

அவள் அழகை வர்ணிக்கும் நான்
ஒரு கவிஞன் இல்லை; ஆனால்,
அவள் அழகை நான் வர்ணித்ததை
எந்த கவிஞனும் மிஞ்ச வில்லை !!

No comments:

Post a Comment