வாழ்க்கை உன் கையிலே
ஒரு நாள் ஒரு வாலிபன் ஒரு முனிவரிடம் கேட்டான், "முனிவரே, என் வாழ்க்கை இந்த புதிய ஆண்டில் எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல முடியமா?"
அந்த முனிவர் பல வகையிலும் அவனுக்கு எடுத்து சொல்லியும் அவன் முழுதும் புரியாமையால் ஒரு வழியை காட்டினார்.
அவர் ஒரு ஈயை கையில் பிடித்து "இந்த ஈ உயிரோடு இருக்கிறதா, இல்லை இறந்து விட்டதா?" என்று கேட்டார்.
வாலிபன் நினைத்தான், 'முனிவர் நம்மை சோதிக்கிறார். ஈ இறந்துவிட்டது என்று சொன்னால் அவர் அதை உயிரோடு விட்டுவிடுவார். உயிருடன் இருக்கிறது என்றால் அவர் கையை அழுத்தி ஈயை கொன்றுவிடுவார். அதனால், "அந்த ஈ உயிரோடு இருப்பதும், இறப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது" என்றான்.
முனிவர் உடனே, "உன் வாழ்க்கையும் அதே போலதான். இந்த புதிய ஆண்டிலும் உன் வாழ்க்கை நல்லா இருப்பதும், இல்லாமல் போவதும் உன் கையில் தான் இருக்கிறது" என்றார்.

No comments:
Post a Comment