சந்தோஷம் என்றால் என்ன?
ஒரு நாள் ஒரு குதிரை ஒரு மானை சந்தித்தது. மான் எதையோ இழந்ததைப் போலும், அதை தேடிக்கொண்டிருக்கிருப்பது போலவும் காணப்பட்டது.
குதிரை மானிடம் கேட்டது "ஏன் சோகமாக இருக்கிறாய் ?".
மான் சொன்னது "நான் சந்தோசத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்"
அதற்க்கு குதிரை "வா, நாம் இருவரும் பக்கத்து காட்டுக்குள்ளே சென்று சந்தோஷத்தை தேடலாம்" என்று மானை கட்டுக்கு அழைத்து சென்றது.
மானும் குதிரையும் காட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு சிங்கம் தன் இறையை சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அப்பொழுது மான் சொன்னது : சாப்பிடுவது தான் சந்தோஷம்!
குதிரை சொன்னது : உடனே அந்த முடிவுக்கு வந்து விடாதே. சிறிது தூரம் சென்று பார்ப்போம
சிறிது தூரம் சென்றபோது, ஒரு குயில் பாடிக்கொண்டிருந்தது .
"பாடுவதோ சந்தோஷம்", என்று மான் குதிரையிடம் கேட்டது.
"இல்லை, இன்னும் கொஞ்சம் தூரம் சென்று பார்ப்போம்", என்றது குதிரை.
ஒரு கரடி மரத்தடியில் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
"தூங்குவதா சந்தோஷம்?", என்று கேட்டதற்கும் குதிரை சம்மதிக்கவில்லை.
சிறிது தூரம் சென்றபின், ஒரு ஆட்டுக்குட்டி அழுதுக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். "ஏன் அழுகிறாய்?" என்று ஆடுக்குட்டியிடம் கேட்டதற்கு அந்த குட்டி "நான் என் அம்மாவை தொலைத்துவிட்டேன்" என்று கதறியது. மானும் குதிரையும் அந்த குட்டியின் தாயிடம் அந்த குட்டியை சேர்த்தபோது அந்த குட்டியின் சந்தோஷத்தை கண்டு சந்தோஷம் அடைந்தார்கள்.
அப்போது புரிந்து கொண்டார்கள் : பிறரை சந்தோஷப் படுத்துவதில் தான் உண்மையான சந்தோஷம். பிறர் சந்தோஷத்தை காண்பது தான் இரட்டிப்பான சந்தோஷத்தை தரும் என்று மானும் குதிரையும் புரிந்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment