மூன்று குருக்கள்
ஒரு நாள் ஒரு சிஷ்யன் தன் குருவிடம் 'குருவே, உங்கள் குருக்கள் யாவர்? அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?', என்று கேட்டான். அதற்கு அந்த குரு, 'எனக்கு வாழ்கையில் பல குருக்கள். அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள்' என்றார்.
எனக்கு முதலாவது குரு ஒரு திருடன் என்றார். அந்த சிஷ்யன் அதிர்ச்சி அடைந்தான். அந்த குரு விழக்கம் அளித்தார்.
ஒரு இரவு நான் ஒரு காட்டு வழி பயணம் சென்றுகொண்டிருந்த போது, தங்குவதற்கு எங்கும் இடம் கிடைக்கவில்லை. அங்கு ஒரு மனிதன் வந்தார். அவரிடம் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவன், "இங்கு எங்கும் இடம் கிடைக்காது. என்னுடன் வீட்டிற்கு வாருங்கள். அங்கு தங்கலாம். நான் ஒரு திருடன். வேறு யாரும் என்னுடன் வாழவில்லை", என்றான்.நானும் அவனுடன் சென்றேன்.
அவன் தினமும் 10:00 மணிக்கு திருட சென்று விடுவான். காலை 4:00 மணிக்கு வீடு வருவான். வந்தவுடன் நான் கேட்பேன் "இன்று ஏதாவது கிடைத்தா?". அவன் சொல்லுவான் :"இன்று ஒன்னும் கிடைக்கவில்லை. நாளை கிடைத்தாலும் கிடைக்கலாம். முயற்சி செய்வேன்" என்றான். மறு நாளும் அதே மாதிரி கேட்டேன், ஏதாவது கிடைத்ததா என்று. அவன் அதே பதிலை திரும்பவும் சொல்லுவான்.
அப்பொழுது நான் கற்று கொண்டேன். நான் கடவுளை காண வேண்டும் என்று இன்று முயற்சி செய்தேன். ஆனால், இன்று காணவில்லை. இதே போல் நாளையும் முயற்சி செய்வேன். கடவுள் என் கண்களுக்கு தெரியும் வரை நான் முயற்சி செய்வேன்.
எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் ஒரு நாள் தண்ணீர் குடிக்க நதிக்கரை ஓரம் சென்றபோது, பக்கத்தில் ஒரு நாயும் தண்ணீர் குடிக்க வந்தது. அந்த நாய் தண்ணீர் குடிக்க தண்ணீரை நெருங்கியபோது, அதற்க்கு ஒரு நாயின் முகம் தெரிந்தது. தன் பின்பத்தைக் கண்டு அது பயந்து விட்டது. பின் வாங்கியது.சிறிது நேரம் கழித்து மறுபடியும் அந்த நாய் தண்ணீர் அண்டை சென்றபோதும், அதே பின்பத்தைக் கண்டு பயந்து பின் வாங்கியது. சிறிது நேரம் கழித்து, நாய்க்கு தண்ணீர் தாகம் பொறுக்க முடியவில்லை.தாகம் தாங்க முடியவில்லை.
அது மறுபடியும் தன்னை தைரியப்படுத்திக்கொண்டு அந்த பின்பத்தை கண்டு பயப்படாமல் திடன் கொண்டு, தண்ணீரை குடித்து விட்டது. இதே போல், நமக்கு துன்பங்கள் பலவும் நமது கண்களுக்கு தெரியலாம். ஆனால், அவை எல்லாமே மாயைகளே என்று அந்த நாள் கற்றுக்கொண்டேன்.
எனது மூன்றாவது குரு ஒரு குழந்தை. நான் ஒரு நாள் ஒரு 5 வயது குழந்தையிடம் ஒரு மெழுகுவர்த்தியைக் காட்டி, "குழந்தையே, இந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டேன். அந்த சிறுமி உடனே அந்த ஒளியை அணைத்துவிட்டு என்னிடம் கேட்டது, "சுவாமி! இப்பொழுது நீங்கள் என்னிடம் சொல்லுங்கள், நான் அணைத்த அந்த ஒளி இப்பொழுது எங்கு உள்ளது என்று. எங்கு சென்றதோ அதே இடத்திலிருந்து தான் ஒளி வந்தது!" என்று.
இந்த பதிலைக்கேட்டு, நான் அதிர்ச்சி அடைந்தேன். என் கர்வம் அப்பொழுதே அழிந்துவிட்டது. அன்றிலிருந்து அந்த குழந்தையும் எனக்கு குருவாகி விட்டது.

No comments:
Post a Comment