கண்டதுண்டு, கேட்டதில்லை
"கேட்டது உண்டு, அனால் நான் பார்த்ததில்லை" என்று சொல்வதை நாம் பலமுறை பலபேர்களிடம் கேட்டிருப்போம். ஆனால், "கண்டது உண்டு, ஆனால் கேட்டது இல்லை" என்று ஒரு புலவர் கூறினார். ஆச்சரியத்துடன், சிலர், "அது எப்படி சாத்தியமாகும்" என்று கேட்டனர். புலவர் 4 வரிகளால் அதை கூறினார் :
பூனக்கி ஆறு கால்,
பறவைக்கு ஒன்பது கால்,
யானைக்கு பதினேழு கால்,
தாமரை பூவுக்குள் இரண்டு அல்லிப்பூ!!
இதைக்கேட்டு வியந்த மக்களிடம், புலவர் விழக்கம் கூறினார்.
1. "பூனக்கி" என்னும் வார்த்தை "வண்டை" குறிக்கும். "பூ நக்கி" என்பதுதான் இதன் அர்த்தம்.
2. ஒன்பது கால் என்பது 1/4 வாய்பாட்டை குறிக்கும். 9 X 1/4 = "இரண்டே கால்".
3. அதே 1/4 வாய்ப்பாட்டின் மூலம், 17 X 1/4 = "நாலே கால்" என்று அறிந்துக்கொள்ளலாம்.
4. தாமரை போல் அழகான முகத்தில், பெண்களுக்கு கண்கள் அல்லி போல் உள்ளன.
No comments:
Post a Comment