இதுதான் வாழ்க்கை
ஒரு சிறுவன் ஒரு நதிக்கரை சென்றான் குளிப்பதக்கு. அங்கு ஒரு முதலை வலையில் சிக்கியிருப்பதைக் கண்டான். அந்த முதலை சிறுவனிடம் கெஞ்சியது தன்னை மீட்க. சிறுவன் தயங்கினான்."நான் உன்னை மீட்டால் நீ என்னை கடித்து தின்றுவிடுவாய்" என்றான். முதலை சொன்னது, "இல்லை நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நீ என்னை வலையிலிருந்து மீட்டால் போதும்".
பரிதாபப் பட்டு சிறுவன் முதலையை மீட்க நினைத்தான். முதலையின் வாயோரமாக இருந்த வலையை கிழித்தான்.வாயிலிருந்து மீட்கப்பட்டதும் முதலை சிறுவனின் காலை கௌவிக்கொண்டது.சிறுவன் கதறினான்.
"இது அநியாயம் இல்லையா? நீ கொடுத்த வாக்கை மாற்றிவிட்டாயே" என்றான்."இதுதான் வாழ்க்கை !" என்றது முதலை.
அந்த சிறுவன் பக்கதிலிருந்த ஒரு கழுதையிடம் கேட்டான்."இது அநியாயம் இல்லையா?" அந்த கழுதை பதில் சொன்னது,"நான் என் வாழ்க்கை முழுதும் என் முதலாளிக்கு வேலை செய்தேன். நிதமும் பொதி சுமந்தேன். நான் வயதாகினால் என் முதலாளி எனக்கு ஓய்வு கொடுத்து என்னை சாகும் வரை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்தேன். அனால் என் முதலாளி என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இதுதான் வாழ்க்கை !"
பின்பு அந்த சிறுவன் பக்கத்து மரத்தின் மேல் இருக்கும் குயிலிடம் கேட்டான் "இது அநியாயம் தானே?" குயில் பதில் சொன்னது, "நான் சிரமப்பட்டு கூடு கட்டி முட்டை இடுகிறேன்.ஆனால் ஒரு பாம்பு நிதமும் வந்து முட்டைகளை குடித்துவிட்டு செல்கிறது! இதுதான் வாழ்க்கை. என்ன செய்ய?"
அந்த சிறுவன் ஒரு முயலிடம் கேட்டான் இது நியாமா என்று.முயல் முதலையிடம் சொன்னது, "இது அநியாயம். அந்த சிறுவனை விட்டு விடு"
முதலை சொன்னது : நான் இந்த சிறுவனை தின்று விடுவேன். வாழ்க்கையில் சில விஷயங்கள் புரிவதில்லை. ஒவ்வொரு நொடியும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பாவம் புண்ணியம் பார்க்கக்கூடாது."
முயல் மீண்டும் சிறுவனை விட்டுவிட கெஞ்சியது.
முதலை பதில் சொன்னது "நான் விட்டுவிட்டால் சிறுவன் ஓடிவிடுவான்"
முயல், "அவன் கால்கள் காயமடைந்து விட்டது. அவனால் ஓடமுடியாது"
முதலை, "அவன் ஓடிவிட்டால்?"
முயல், "அவன் ஓட முயன்றால் நீ உன் வாலைக் கொண்டு அவனை அடித்துவிடு. அவன் இறந்து விடுவான் !"
இதைக்கேட்டதும் முதலைக்கு ஒரு நம்பிக்கை. தான் சிறுவனை ஓட விடாமல் மடக்கி விடலாம் என்று. சிறுவனின் காலை விட்டுவிட்டது. உடனே முயல் சிறுவனிடம் "ஓடு, ஓடு" என்று கத்தியது. சிறுவன் ஓடிவிட்டான். முதலை தன் வாலால் சிறுவனை அடிக்க முயன்றது. அப்பொழுதான் முதலைக்கு புரிந்தது - சிறுவன் வாய் பகுதியிலுள்ள வலையை மட்டும் அறுத்தான். வால் இன்னும் வலையில்தான் சிக்கி இருந்தது !
சிறுவன் ஓடிப்போய் தன் ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறினான். உடனே சிலர் நதியோரம் ஓடி வந்து அந்த முதலையை கொன்று விட்டனர். அங்கு ஒருவர் வீசிய கல், அங்கிருந்த முதலையின் மேல் பட்டு, முதலை இறந்தது. இதைக் கண்ட சிறுவன் சோகமானான்.
"இதுதான் வாழ்க்கை" என்று சிறுவன் புரிந்துக்கொண்டான் !!!

No comments:
Post a Comment