கடவுளை கண்ட மன்னன்
ஒரு நாள் ஒரு மன்னர் தன் நாட்டிலுள்ள ஒரு சித்தரிடம் வந்து, "சுவாமி எனக்கு கடவுளைக் காண வேண்டும். அதற்கு ஒரு வழியை சொல்லுங்கள்", என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர், "நீங்கள் ஒரு வாரம் கழித்து வாருங்கள்" என்றார். அந்த மன்னர், ஒரு வாரம் பின்பு மறுபடியும் அந்த சித்தரிடம் வந்தார்.
சித்தர் அந்த மன்னரிடம் ஒரு திருவோட்டை கொடுத்து, "நீங்கள் இந்த திருவோட்டை எடுத்துக் கொண்டு ஒரு வாரம் பிச்சை எடுங்கள். பின்பு எட்டாவது நாள், நான் உங்களுக்கு கடவுளை காண்பதற்கான வழியை காட்டுகிறேன்", என்றார். மன்னர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். "என் மக்கள் முன்பே நான் பிச்சை எடுப்பதா? நான் அண்டை நாட்டிற்குப் போய் பிச்சை எடுக்கட்டுமா?", என்று கேட்டார். அதற்கு அந்த சித்தர் ஒத்துக்கொள்ளவில்லை.
மன்னர் தன் நாட்டு மக்களிடம் ஒரு வாரம் பிச்சை எடுத்துக்விட்டு சித்தரிடம் வந்தார். "இனிமேல் கடவுளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்", என்றார் சித்தர். "இனிமேல் எனக்கு அந்த அவசியம் இல்லை. நான் திருவோட்டை எடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்த நொடியே எனது ஆணவம் அழிந்துவிட்டது. ஆணவம் அழிந்ததும் தெய்வீக கதவு திறந்துவிட்டது. எனது அடக்கம் எனக்கு கடவுளை காண்பித்தது", என்றார் மன்னர்.
No comments:
Post a Comment