Sunday, 8 May 2016

தமிழ் பழமொழிகள் - Part I




1.  அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல்.
      As the dog looks up at the squirrel that has escaped him.

2.  அடாது செய்தவர் படாது படுவர்.
     They who do what is wrong, will suffer what they might have avoided.

3.  அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுவது போல !

     Showing the teeth as the jackal from the ginger wilds.

4.  அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டுமா?

      If really bread, do you have to prove it (by breaking it)?

5.  அப்பா என்றால் உச்சி குளிருமா?

     Will exclaiming "Father!" cool the crown of the head?
      Will words of commiseration cool the head?

6.  அரிசி உண்டானால், வரிசை உண்டாம்.

     Where there is rice, there is honor.

7.  அன்ன நடை நடக்கப் போய் , காகம் தன் நடையையும் கெட்டது போல்.


8.  அரைக் காசுக்கு அழித்த கற்பு, ஆயிரம் பொன் கொடுத்தாலும் கிடைக்காது.


9.   அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் சேற்றையே நாடும்.

      Though the woodlouse be placed on a cushion, it will again proceed towards the sewer.

10.  அரைச் சல்லியை வைத்து எருக்களையை கடந்தது போல.

      As one jumped over the shrub under which he had buried half a farthing.


11. அறியாமல் தாடியை வளர்த்தது தம்பட்டன் கையில் கொடுக்கவோ?
      In ignorance that it would fall into hands of the barber, have I allowed my beard to grow?

12. அத்தத்தின் மிடுக்கல்லவோ அம்பட்டன் பெண் கேட்டது?
      Is it from the abundance of wealth that the barber solicits nobleman's daughter in marriage?

13. அறுக்க மாட்டாதவன் குண்டியில் ஐம்பத்தெட்டு அரிவாள் !
       Fifty Six sickles by the side of one who cannot reap !

14. அறப்படித்தவர்  அங்காடி போனால் விற்கவும் மாட்டார், கொள்ளவும் மாட்டார்.
      When the over-scrupulous go to the market, they neither sell nor buy.

15. அழுவார அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிலுக்கு அழுவாரில்லை.
     None weeps for Tiruvan's wife, but all on account of their individual sorrows.

16. அணிலின் பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ?

17. அடிநாக்கிலே நஞ்சும், நுணி நாக்கிலே அமுதும்.
       Poison at the root of the tongue & ambrosia at the tip.

18. அயிரையுஞ் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டு பிசறாமல்.
      The Sprat not having mixed with the rice cake in due time, now refuses.

19. அகப்பை பிடிக்கிறவன் தன் ஆளானால், அடி பந்தி என்ன? தலைப் பந்தி என்ன?


20. அகதி பெறுவதும் பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூராடம்.

          A female child is born to the destitute on a Friday, and under the star Puradam.

21. அறப் படித்தவர் கூழ் பானையில் விழுந்தார்.

         The Scrupulous has fallen into the gruel pan.

22. அவதந்திரம் தனக்கு அந்தரம்.

         His evil strategy ended in his own ruin.

23. அத்திக் காயை பிட்டுப் பார்த்தால் , அங்கும் பொள்ளல், இங்கும் பொள்ளல்.

          The broken fig is everywhere porous.

24. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்.


25. அகப்பட்டுக் கொள்வேன் என்றோ  கள்ளன் களவெடுக்கிறது?

       Does the thief expect to be caught, when he goes out to steal?

26. அரிசி கொடுத்து உண்கில், அக்காள் வீட்டில் உண்ண வேண்டுமா?

         If u have rice, is it necessary to eat in elder sister's house?

27. அழுக்கு சீலைக் குள்ளே மாணிக்கம்.

         A cornelian in a dirty cloth.

28. அப்பச்சி கதம்பையை சூப்ப, பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது.

      While the father sucks the rind of a coconut, the child is crying for the pulp.

29.  அரிசி அள்ளின காகம் போல.

          Like a crow that has taken away rice.

30.  அல்லாதவன் வாயிலே கள்ளை வார்.

          Pour toddy into the mouth of the worthless.

31. அம்மா கள்ளீரே, ஆடையைத் தின்றால் வெண்ணை உண்டோ?

        You worthless woman, can butter be taken after the cream is eaten?

32. அறுப்புக்  காலத்தில் எலிக்கு நாலு பெண்சாதி.

         During harvest the rat has four wives.

33. அண்ணன் கொம்பும் பம்பள விழாச்சு.

         Even my brother's horn is still imaginary.

34. அறக் கூர்மை மழு மொட்டை.

          Excessive sharpness is as bluntness.

35. அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டுவானுக்கு சுண்டைக்காய் மெத்தப் பாரமா?

     
36. அண்டத்தில் இல்லாதது, பிண்டத்திலேயோ?
      Is that in the body which does not  exist in the universe?

37. அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.

      Though only 1/8th measure of rice, yet three cooking hearth.

38. அப்பம் சுட்டது திட்டையிலே, அவல் இடித்தது சட்டியிலே.

      Bread is baked in the mortar, while rice is beaten in the pot.

39. ஐயர் உள்ள காலம் அறுகு கொண்டு சூறையாடினது, இப்போ கண்டருளக் கண்டருள !

      During the lifetime of Aiyar, they purloined with ease, but now behold !!

40. அம்மையார் நூற்கிற நூல் கிழவனாருடைய அரை ஜாணுக்குக் காணாது.

      The yarn spun by the old woman is not sufficient for the waist string of the old man.

41. அச்சையிலே போனாலும் அகப்பை அரைக் காசு.

      Though a wooden spoon is carved in a die, its worth is only half a farthing.

42. அல்லைக் கிழங்கில் அடிமுறி தின்றவன் கல்லையும் அல்லுவான்.

      He who has eaten even the point of the root of the alley will even dig up stones to obtain it.

43. அப்பச்சி கோவணத்தை பருந்து கொண்டு போகிறது, பிள்ளை பட்டுக்கு அழுகிறது.

      The kite has carried away the last rag of the father, yet the child cries to be dressed in silk.

44. அணையைக் கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?

      Will the flood that has broken the dam return if one cries?

45. அடி நொச்சி, நுனி ஆமணக்கா?

         Is the root noche, and the top the castor plant?

46. அவன் உனக்கு கத்தி தீட்டுகிறான்.

         He whets a knife for you.

47. அவருடைய சிறகு முறிந்து போயிற்று .


48. அறச் செட்டு முழு நட்டம்.

         Exorbitant charges produce great loss.

49. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேட்டை.

      The son of a widow is fully mischievous.

50. அன்ன மயம் அன்றி பின்னை மயமில்லை .

         There is no physical virtue except in food.

No comments:

Post a Comment