Friday, 17 April 2015

சொல்லுதல்

"சொல்லுதல்" என்பதற்கு தமிழில் 38 சொற்கள் இருக்கின்றன.
இங்கே அவைகள் ;


1.  அசைத்தல்      -  அசையழுத்ததுடன் சொல்லுதல்.
2.  அறைதல்         -  'அடித்து' சொல்லுதல்.
3.   இசைத்தல்      -   ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.
4.   இயம்புதல்      -   இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.
5.   இறுத்தல்         -  விடை கூறல்.
6.   உரைத்தல்     -   அருஞ்செற்கு பொருள் சொல்லுதல்.
7.   என்னுதல்      -  'என்று' சொல்லுதல்.
8.    உளறுதல்      -  ஒன்றிருக்க வேறொன்றை சொல்லுதல்.
9.   ஓதுதல்            -  காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.
10.  கத்துதல்         -  உரக்கச் சொல்லுதல்.
11.  கரைதல்          -  அழைத்துச் சொல்லுதல்.
12.   கழறுதல்        -  கடிந்து சொல்லுதல்.
13.   கிளத்தல்        -  இன்னதென்று குறியிட்டுச் சொல்லுதல்.
14.   குயிலுதல்     -  குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்.
15.   குழறுதல்       -   நாத் தளர்ந்து சொல்லுதல்.
16.   சாற்றுதல்       -  பலர் அறியச் சொல்லுதல்.
17.   செப்புதல்          -  வினாவிற்கு விடை சொல்லுதல்.
18.   நவிலுதல்       -  நாவினால் ஒலித்துப் பயிலுதல்.
19.  நுதலுதல்         -  ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
20.  நுவலுதல்       -  நூலின் நுண்பொருள் சொல்லுதல்.
21.  நொடித்தல்      -  கதை சொல்லுதல்.
22.  பகர்தல்             -  பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.
23.  பறைதல்          -  மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்.
24.  பன்னுதல்        -   நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.
25.  புகலுதல்          -   விரும்பிச் சொல்லுதல்.
26.  புலம்புதல்        -   தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்.
27.  பேசுதல்             -   ஒரு மொழியில் சொல்லுதல்.
28.  பனுவுதல்          -   செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.
29.  மொழிதல்          -  இடைவிடாது சொல்லுதல்.
30.  மாறுதல்             -   உரையாட்டில் மாறிச் சொல்லுதல்.
31.  மிழற்றுதல்        -  மழலை போல் இனிமையாகச் சொல்லுதல்.
32.  மொழிதல்           -  சொற்களை தெளிவாக பெருக்கிச் சொல்லுதல்.
33.  வலத்தல்             -  கேட்பார் மனத்தைவிட்டுச் சொல்லுதல்.
34.  விடுதல்                -  மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்.
35.  விதத்தல்             -  சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.
36.  விள்ளுதல்          -  வெளிவிட்டுச் சொல்லுதல்.
37.  விளத்துதல்         -  விவரித்துச் சொல்லுதல்.
38.  விளம்புதல்          -  ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்.
39.  வினவுதல்            -  கேள்வி கேட்டல்.

1 comment:

  1. அருமையான தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete