Sunday 18 November 2018

Karuvachi Kaaviyam - Quotations & Philosophy by Vairamuthu


1.

ஒரே கொடத்துக்குள்ள தவளையும் பாம்பும் தண்ணி குடிக்க முடியுமா?

கரையான்களாகக்கூடிப் புத்து கட்டிகிட்ட மாதிரி  (ஜனங்களாகக் கூடி ஆளுக்கொரு வீடு கட்டிக்கிட்டாங்க. காரவீடு - ஓட்டுவீடு - தகரவீடு -குச்சுவீடு - குடிசைவீடு என்று ....

நெஞ்சுல பூசின சந்தன வாசனை நின்ட இடத்துல நிக்குது, உன் கல்யாண வீட்டுல கை நினைச்ச ஈரம் காயல எங்க கையில.

நெரம் கறுப்பு. கறுப்பு  பல கறுப்பு இருக்கு : அட்டக்கறுப்பு,அடிசட்டிக் கறுப்பு, கெட்டிக்கறுப்பு. கார்மேகக்கறுப்பு, காக்காக்கறுப்பு, குயில்கறுப்பு


2.


நல்லதுல  கூடு; இல்ல பொல்லதுல கூடு.

ஆம்பளையில்லாத வீடு - ஒத்தமாடு பூட்டி ஏர் உழுகிற மாதிரி...


8.


நாங்க புழுத்துச் செத்தா நீ செத்து புழுக்கப்போற !! (Chiasmus )

பழம் தின்ற குரங்கு கொட்டை அறியதா?


9.


அடிமேல் அடி விழுந்த வீட்ல இடிமேல இடி விழுந்த மாதிரி...

தாமரைப்பூ இருக்கே, அது தண்ணீர்லதான் பொறக்குது. எந்த தண்ணில பொறந்துச்சோ அதே தண்ணில தான் கடைசியா அது அழுகி மெதக்குது.

நாக்குல போட்டாக் கரைஞ்சுபோற பஞ்சுமிட்டாய் மாதிரி லேசான மனசு.

அழுக்கு துணிகள அள்ளி கொடம் நிறைய திணிச்சிக்கிட்டுக் கொளத்துக்கு தொவைக்கப் போனா, விடிய்ய. கரையில போயி நின்னவ நின்னவ தான். ஒரு துணியும் தொவைக்காம வெயிலேற வீடு வந்துட்டா. கேட்டாச் சொல்றா : "தன்ன மறந்து தண்ணி உறங்குது ; எப்படி எழுப்ப ?"

மானம் நியாயத்துக்கு கட்டுப் பட்டவ  ரங்கம்மா.


10.


நாளும் கோளும் நாலுஞ் செய்யும்.

பொன்னு கெடைச்சாலும் புதன் கெடைக்காதும்பாங்க; புதன் கெழமை போ.


11.


நீங்க வந்ததச் சொல்லலேன்னா நாங்க வெந்ததத் திங்க முடியாதப்பா. வந்த சொலியச் சொல்லுங்க.

தண்ணிமாதிரி தரையில கெடந்தவ தண்ணிப் பாம்பு மாதிரி எந்திரிச்சா.


12.

\
சும்மா மழை பேஞ்சு ஓஞ்ச மேகம் மாதிரி மெதக்குது ஒடம்பு.


தூசு தும்பு பூச்சியெல்லாம் எடுக்குறதுக்குத் தாய்கோழி குஞ்சுக் கோழிய மூக்கால கொத்தும் பாருங்க.


பிரிட்டிஷ்காரன் பீரங்கியில சுட்டாக் கட்டுன கோட்டை விழுந்தாலும் விழுந்திரும்; கட்டுன செல விழுந்திராது பாத்துக்க.


பதினாறு மொழத்துல மிச்சம் விட்டுருக்கேனே ....இந்த ரெண்டரை மொழம் முத்தான ....இதுல இருக்குடி ஆத்தா ஒரு பொம்பள பொழப்பு....முந்தானைக்கு வேல ஒண்ணா ரெண்டா ?  படுக்க - ஒக்கார - முக்காடுபோட - தலையில முண்டுகட்ட - தலை தொவட்ட - சும்மாடு சுத்த - காசு முடிய - விசிறி வீச - கட்டுக்கட்ட - ஞாபக முடிபோட - பண்டபாத்திரம் சுத்தம் பண்ண - மூஞ்சு தொடைக்க - ஒலை எறக்க  - அவசரத்துல புருசனுக்கு பாய் விரிக்க - எல்லாத்துக்கும் அந்த முந்தானை தான்


என் தண்ணிக்கொடம் ஒடஞ்சு ஒரு பொறப்பு ; இன்னிக்குத் தண்ணியில ஒனக்கு மறுபொறப்பு  மகளே.


எல்லாக் கடவுளுக்கும் பிள்ளை இருக்கோ இல்லையோ, எல்லாப் பிள்ளைக்கும் கடவுள் இருக்கு - ஆத்தா ரூபத்துல.


14.


காத்துலயும் கவலையிலயும் நெறங் கொலைஞ்சு போன வீடு.


15.


சில சாவுகள்ல குடும்பமே உக்காந்து போகும்;
சில சாவுகள்ல உக்காந்த குடும்பம் எந்திரிச்சிரும்;
சில வீடுகள்ல சாவுங்கிறது பிரச்சனையை உண்டு பண்ணிட்டு ஓடிப்போயிடும்;
சில வீடுகள்ல சாவு பிரச்சனைகளையெல்லாம் ஓச்சிட்டு 'சுபம'ன்னு சொல்லிவிட்டு போயிடும்;
சில வீடுகள்ல சாவுங்கிறது நிர்க்கதி;
சில வீடுகள்ல சாவுங்கிறது நிம்மதி;
சில வீடுகள்ல சாவுங்கிறது செலவு;
சில வீடுகள்ல சாவுங்கிறது வரவு.
வாழ்க்கையில திருப்பம்ங்கற சக்கரங்களைச் சுத்திவிட்டுட்டுப் போறது சாவுதான்.



புறக்கப் பல காடு; இருக்க ஒரு கூடு.


கிழிச்சும் தைப்பேன்; தச்சும் கிழிப்பேன்னு கிறுக்குப்புடிச்சு அலையுது மின்னலு.


17.


தாயில்லாத பிள்ளைக்கும் தாய்ப்பால் இல்லாத பிள்ளைகளுக்கும் ஆடும் மாடும்தான் ஆத்தா !!


வாயக்கட்டுனவ பிள்ள வளப்பா; வயித்த கட்டுனவ புருசன வளப்பா.


18.



தேங்காய்க்கு ஒரு கல்லெறிய மாங்காய் விழுகிற மாதிரி.



19.


துன்பம்ங்கிறது விருந்தாடி மாதிரிதான் ; எப்பவாச்சும் வந்தாதான் மரியாதை.

பொருளு வித்து பொழைக்கலாம்; புத்திய வித்துப் பொழைக்கலாம்; நேர்மைய வித்து பொழைக்க கூடாது.



20.


நகச்சுத்தி வந்தாலும் வீக்கம் வெரலுக்குத்தான...?

ஆள் செய்யாததை நாள் செய்யும்.


நெல்ல வெதைக்கிறோம் . உள்ள அரிசியிருக்கு; வெளிய உமி இருக்கு. அரிசிதான் மொளைக்கிது. ஆனா உமி இல்லாம அரிசியை மட்டும் வெதைச்சா முளைக்குமா? முளைக்காது; அரிசிதான் பொழப்பு; உமிதான் மானம். உமியில்லாத அரிசி மொளைக்காது ; மானமில்லாத  பொழைப்புக்கு மதிப்பேது?


பாடுபட்ட மேனி பவுனு; படாத மேனி புண்ணு.

மெத்தப் பழகுனாப் பித்தளையும் பீ நாறும்.

என் வாய் உண்டது - வகுறு கொண்டது போக மிச்சத்தக் கஞ்சியில்லாமக் கெடக்குற உசுருகளுக்கும் கைகால் வெளங்காத கெழடு கெட்டைகளுக்கும் ஆடு மாட்டுக்கும் காக்கா குருவிக்கும் குடுக்கணும்; அள்ளி குடுக்கலேன்னாலும் கிள்ளிக் குடுக்கணும்.


நரி நாட்டாம பண்ற ஊர்ல தாய்க்கோழி இல்லாத குஞ்சாத் தனிச்சு நிக்கிறேன். நரி அடிக்க வந்தா, திருப்பி அடிக்கத் திராணிவேணாம் சாமி; தப்பிச்சு ஓடி ஒளிய சந்து பொந்து காமி.


25.



ஓட்டச் சட்டின்னாலும் கொழுக்கட்ட வெந்தாப் போதும்.

செக்குல தலையக் குடுத்தவன்மாதிரி தலையில எண்ணை ஒழுக வந்தவன்.



26.


அம்பில்லாத வில்லும் செம்பில்லாத பொன்னும் வேலைக்காகாது.

கை  அளக்காததையா  தராசு அளக்கப் போகுது?



27.

பெறந்துவாரது மட்டும் தானய்யா ஒரே வழி; சாவுக்குப் பல வழி.



28.


காலம்தான் ஞானம்; காலத்தை போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி.


கரட்டுக்காட்டுக்கு மொரட்டு மம்பட்டி.


காலம் செய்யிற வேலை என்ன தெரியுமா?  மனுசப்பயலச் சன்னம்சன்னமாத் தடவிக்குடுத்து அவனைச் சாவுக்குத் தயாரிக்கிறதுதான்.


ஒரே ஒரு சாவு வந்தா பயந்து கழிஞ்சிருவான் மனுசன்னு தெரியும் காலத்துக்கு. தோல்வி, கண்ணீரு-சிக்கல், சீக்கு, ஏமாற்றம்; பிரிவு - உள்சாவு , வெளிசாவு - இடி ; மழை - பூகம்பம்; காத்து இதுகளை காட்டிக்காட்டி மனுசனச் சின்னச் சின்னதாகச் சாக வச்சி, கால்மாகாணி உசுரை மட்டும் விட்டு வச்சிருக்கு கடைசிச் சாவுக்கு.


அடிச்சு வளக்க அப்பனும் அணச்சு வளக்க ஆத்தாளும் இல்லாத பிள்ளைக பெரும்பாலும் புத்தியழிஞ்சி பொழப்பத்து போயிருதுக. அப்பன் இல்லாமல் ஆத்தாளோ ஆத்தா இல்லாம அப்பனோ பிள்ள வளக்கிறது ஒத்தக் கையில தயிர் கடைஞ்ச கததான். வெண்ணையும் தேறலாது; வெளங்கவும் விளங்காது.



30.


கொடிச்சீல ஒரு வெள்ளையோட சரி; கொமரி பிள்ள ஒரு பிள்ளையோட சரி.
(வெள்ள  = சலவை)

அந்த ஊர்ல மண்ணுக்கு என்ன மணம், மனுசங்களுக்கு என்ன குணம்ன்னு ரெண்டே நாள்ல மோப்பம் புடிச்சா.

நல்லதுக்கு றெக்கை கட்டி விடுறதும் கெட்டதுக்குக் கொம்பு சீவி விடுறதுக்கும் ஊருக்குள்ள மூணே மூணு பேருதான் :
ஒண்ணு    - சலவைக்காரன்
ரெண்டு      - சவரக்காரன்
மூணு         - ஊர்மாடு மேய்க்கிறவன் !



31.


இன்பம் துன்பங்கிறரெண்டும் துண்டு துண்டாவா இருக்கு?
கெடையாது; அடுத்தடுத்த வீடு.
இன்பத்தைப் பெரட்டிப் போட்டா துன்பம்;
துன்பத்தப் பெரட்டிப் போட்டா இன்பம்.
பூமி இன்பம்; பூகம்பம் துன்பம்.
காத்து இன்பம்; புயல் துன்பம்.
மழை இன்பம்; வெள்ளம் துன்பம்.
தீபம் இன்பம்; தீப்புடிச்சாத் துன்பம்.
ஆகாயம் இன்பம்; இடி துன்பம்.
ஒடம்பு இன்பம்; நோய் துன்பம்.



நீ  சருகாயிருந்தாக் கருகிக் காணாமப் போயிருவ.
தங்கமாயிருந்தா மெருகாகிப் போயிருவ.


தாய் மீனுக்குக் குஞ்சுமேல ஆச; குஞ்சு மீனுக்குப் புழுமேல ஆச !


33.


எர புடிக்கிற வேட்டை நாய்வாயி  - பழங்கொத்துகிற பறவ வாயி  - பால் குடிக்கிற கன்னுக்குட்டி வாயி - முத்தங்குடுக்கிற பொம்பள வாயி  - இதுலயெல்லாம் சுத்தம் பாக்கப்படாதுன்னு சொல்லுவாங்க.



34.


இருதயம் நெனைக்கிறது என்னான்னு கண்ணுல துப்புக் காமிக்காத ஆளுக இருக்காகளே அவுகதான் ஆபத்தான ஆளுக. அவுகள ஆழங்காண முடியாது.
அழுக்குத்தண்ணி ஆழங் காமிக்குமா ?


வறண்ட கெணத்துல திடீர்ன்னு ஊத்தடிச்ச மாதிரி ஊத்துது கண்ணீரு .


35.


மீனாட்சீன்னா மூக்குத்தி; கண்ணகின்னா செலம்பு ; வேலுநாச்சின்னா கத்தி; ஆண்டாள்ன்னா மால; பாஞ்சாலின்னா சீலங்கிறமாதிரி .....


பாதகத்தி குழம்பு வச்சா கருவாடு மீனாய் போகும்; கத்திரிக்கா தேனாய் போகும்.


ஒரு தீக்குச்சி இருந்தா கரடிக்கிட்ட தப்பிச்சுக்கிரலாம்; மரமேறத் தெரிஞ்சா புலிகிட்டத் தப்பிச்சுக்கிரலாம் ; பள்ளத்துல எறங்கிக்கிட்டா யானக்கிட்ட தப்பிச்சுக்கிரலாம்; ஓடாமத் திரும்பிப் பாக்காம நின்னு நிதானமாப் போனா நாய்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம்; இப்படி எல்லாம் தெரிஞ்சவளுக்கு, காசும் கறித்தண்ணியும் குடுத்தாத்தான் இந்த மொரட்டு முட்டாப் பயகிட்டயிருந்து தப்பிக்க முடியும்ன்னு தெரியாதா ?


36.



ஒம்மேல எல விழுந்தாலும் தல விழுகுமடா !

சொன்னதுல தப்புமில்ல; சொரக்காய்க்கு உப்புமில்ல.

நண்டு கொழுத்தா வளையவிட்டு வெளியேறியாகணுமில்ல! வராமலா போயிருவான்?

வெத்தல போட்ட வாயி இப்ப வெளுத்துப்போச்சு; வெத்தல போடாத கண்ணு செவந்துபோச்சு.


37.


ஆத்தா மாதிரி பொண்ணு வேணும்ன்னு வினாயகன் தேடினான்; கெடைக்கல; ஆத்தோரமா உக்காந்துப் போனான். சின்னாத்தா மாதிரி பொண்ணு வேணும்ன்னு இவன் நெனச்சான்; சிக்கிருச்சு.


38.


கோயில் இல்லாட்டி சாமி இல்லேன்னு போயிருமா?

வீடுன்னா என்ன? எல்லோரும் கடைசியா விட்டுட்டு வெளியேறப் போற ஒரு எடம்.

சொத்து விக்கிறதாயிருந்தாக் காலம் செழிச்ச காலத்துல வித்துப்படணும் ; வாங்குறதா இருந்தா, கஞ்சிக்கிலாத பஞ்சகாலத்துல வாங்கணும்.

பசுவ விக்கிறவ கன்டுகுட்டிய ஓட்டிவிட மாட்டாளா?

வாய்க்கரிசி இல்லாத காலத்துல வாயத் தொறந்து ஏன் கெடக்க ?



40.


மலடி கெழவியாகிப் போன கதையாகிப் போச்சு !!

யானை பொதைக்க வெட்டுன குழிமாதிரி கெடக்குதுக கெணறுக !!

"செத்தாலும் செத்துருவோம்; தோலு வெலைக்காச்சும் எங்கள வித்திருங்க"ன்னு சொல்லுது மாடுக.

தாயைப் பழிச்சாலும் தண்ணியப் பழிக்கப்படாது.


41.


வாழ்வே தவமாய், வலிகளே வரமாய் இப்படியும் ஒரு பெண்மகளா !!

தப்பியும் வரலாம்; தள்ளியும் வரலாம். ஆனா - எப்பவும் மழை இல்லேன்னு போயிராது.
   

                                             











Thursday 18 October 2018

Trees

Trees


Trees are of great variety.
Sizes and Strength - Birch, Neem,
Tamarind, Fir, Mango are
Some of the names we give them.

Trees grow taller, liver longer.
Some live longer than centuries.
They don't move, but are found everywhere,
Can't talk, but birds are their voices.

Shade during the day,
Rains during monsoon,
Trees also provide us
Fruits during its season.

Trees are shelter for birds,
Timbers are used for building houses.
Fences are built around houses,
To protect from animals.

Trees exhale oxygen,
And inhale Carbon-dioxide.
Thus trees provide clean air
And help the world sustain life.


Clock

Clock



I, a clock, was hung on the wall
E'en before I started to work.
Working silently from the hall,
I started my lifelong work.

I strike six every morning
To tell the mother to wake up.
I strike seven for the father
To make him get ready for office.

The girl avoids looking at me
Till she's getting late for school.
The boy always wishes,
I break down and stop working every soon.

Mother looks ast me from kitchen,
Father looks at me for cricket timings.
The boy looks for playtime,
While the girl wants to reach her dance classes.

Tense family faces look at me
Every morning, during the week days.
I am ignored mostly on Sundays,
Though I work for them every day.

Rose

Rose



Though a bud last night,
Before the morning light,
From the bud I rose
To be a blossomed rose.

My petals are red,
The leaves are green.
Though thorns are my bed,
I live to spread fragrance.

A short life is mine,
But as long as I live,
I spread sweet smell
A long as I can.

Books

Books


Books are best friends.
Whenever I open themThey speak to meIn ways that's easy to me.Fables are from the jungleWhere animals and men live together.They are stories very simple.With thought provoking morals.Myths take me to the worldWhere Titans & Immortals stayed.Theology talks about Gods,Who care for us if we pray.Science & Geography are toolsTo sharpen our brains in Schools.Humor books make us laughAt simpletons and fools.When I read the booksNew worlds I get to see.I am eager to read moreAbout stories yet unknown.

Thursday 9 August 2018

Darkness and Light


Morning follows every night
With a sun shining bright.
A glowing light you get to see
However long the night might be !

A tunnel that's getting darker
Is lit by a light that grows brighter.
It's a lesson you learn worth knowing
While you carefully keep on moving !!

Sunday 26 June 2016

தனி தமிழ் சொற்கள் - 9

தனி தமிழ் சொற்கள் - 9 


  1. அஸ்தமனம்        -    மறைவு
  2. தஸ்தாவேஜு      -    ஆவணம்
  3. சங்கோஜம்           -    கூச்சம்
  4. blooper                      -     நாணூட்டுப்பிழை 
  5. option /choice            -    உகப்பு 
  6. gem clip                     -    தாள் இணைப்பி 
  7. stapler                        -    பிணிக்கை 
  8. villain                        -    கொடியவன் 
  9. threadmill                  -    நடைப்பொறி 
  10. chronology                -    கால ஆய்வியல் 
    11. விஷம்                    -    நஞ்சு
    12. ஜோதி                     -   ஒளி
    13.  தயவு                      -   இரக்கம்
    14.  தனம்                       -   பணம்
    15.  தட்சணை              -   கொடை
    16.  வேதம்                    -   திருமறை
    17.  குஸ்தி                    -   மற்போர்
    18.  சிருஷ்டி                 -   படைப்பபு
    19.  சுபிட்சம்                 -   செழிப்பு
    20.  Plastic                        -    குழைமம்

    21.  phobia                         -    மிகையச்சம்
    22.  xenophobia                 -    அயலரச்சம்
    23.  hydrophobia               -     நீரச்சம்
    24.  claustrophobia            -    தனிமையச்சம்
    25.  acrophobia                  -    உயர அச்சம்
   
    26,  capsule                        -    குளிகை / கரைமருந்து
    27.  Caller ID phone          -     ஆளறிபேசி
    28.  cellotape                     -     ஒட்டுநாடா
    29.  calculator                    -     கணிப்பி / கணிப்பான் / கணிதப்பொறி
    30.  call hold                      -     அழைப்புத்தேக்கம்
    31.  bluetooth                     -     அண்கப்பியிலி
    32.  antenna                        -    வானலைவாங்கி / அலைக்கம்பம்
    33.  3D                                -    முப்பரிமாணம்
    34.  cable car                      -     வடஊர்தி
    35.  photo album                -     வைப்பேடு

    36.  concrete                       -    கற்காரை / திண்காரை
    37.  grinder                         -    அரைப்பான் / அரைவி
    38.  மகப்பேறு மருத்துவமனை - ஈனில்
    39.  carpenter                     -     தச்சர்
    40,  ஆண் குரங்கு         -    கடுவன்
    41.   பெண் குரங்கு       -     மந்தி
    42.  LBW                            -    குச்சம் முன் கால்
    43.  headphone                   -     கேள்பொறி
    44.  screen                          -     எழினி / ஒருமுகை எழினி
    45.  microwave oven          -     நுண்ணலை அடுப்பு
    46.  bouncer                        -    எகிறு பந்து
    47.  golf                               -    குழிப்பந்து
    48.  sensor                           -    உணரி
    49.  cement                          -    பைஞ்சுதை  (சுதை = சுண்ணாம்பு)
    50,  comma                           -    காற்புள்ளி